முட்டை ஓட்டுக்குள் ஒளிந்திருக்கும் அழகு

முட்டை ஓடுகள், நமக்கான முட்டையின் தேவை முடிந்த பிறகு தூக்கி எறியப்படும் ஒரு குப்பைப் பொருளாக தான் இருக்கிறது. ஆனால் அதன் எண்ணற்ற பயன்களை நமது அறியாமையால் அதை சரிவர  உபயோகப் படுத்தாமல் வீணடிக்கிறோம். 

முட்டை ஓட்டுக்குள் ஒளிந்திருக்கும் அழகு

முட்டை ஓடுகளின் கட்டமைப்பு:
முட்டையின் ஓடுகளில் கால்சியம் மற்றும் ஒரு தாவரத்திற்கு தேவையான மிக முக்கிய சத்துக்கள் இருக்கின்றன.

முட்டை ஓடுகள் ​கால்சியம் கார்பனேட் எனும் ஒரு வேதி பொருளால் உருவானது. கால்சியம் கார்பனேட் என்கிற வேதி பொருளில்  பல முக்கிய அன்டசிட்கள் உள்ளன. ஒரு சராசரி அளவு உள்ள முட்டை ஓட்டில் 700 முதல் 800 mgs கால்சியம் உள்ளது. முட்டை ஓட்டில் கண்ணுக்கு தெரியாத துளைகள் உள்ளன. அந்தத் துளைகளின் மூலம்  முட்டையில் இருக்கும் கருவிற்கு தேவையான ஆக்சிஜன் உள்ளே செல்லவும் மற்றும் கரு வெளியேற்றக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடு வெளியே வரவும் உதவுகிறது. மேலும் அந்தத் துளைகள் மூலம் முட்டையினுள் இருக்கும் அதிகப்படியான ஈரப் பதமும் வெளியேற்றப்படுகிறது. 

முட்டை ஓடுகளின் தன்மை:

ஒரு முட்டையின் முழு எடையில் குறைந்த பட்சமாக 9 சதவிகிதத்திலிருந்து  அதிக பட்சமாக 12 சதவிகிதம் வரை அதன் ஓட்டின் எடை இருக்கும்.

முட்டை ஓடுகளின் நிறம் அவற்றை இடும் கோழியின் இனத்தை பொறுத்து அமையும். வெள்ளைக் கோழிகள் இடும் முட்டையின் ஓடு வெள்ளை நிறத்திலும். நாட்டுக் கோழிகள் இடும் முட்டை  பழுப்பு நிறத்திலும் இருக்கும். 

முட்டை ஓடுகள் கொண்டு நாம் பயன் பெறக் கூடிய சில அழகு சார்ந்த  குறிப்புக்களை இங்கே பார்ப்போம்.

அழகு குறிப்பு 1 - ஃபேஸ் மாஸ்க்:
முதலில் முட்டையின் ஓடுகளை நன்கு உடைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அவற்றை ஒரு அரவையில் இட்டு நன்கு தூளாய் பொடி செய்ய வேண்டும். 
பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இப்போது நாம் பொடி செய்து வைத்து இருக்கும் முட்டையின் ஓட்டை அந்த முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து வைத்து இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். முட்டை ஓட்டின் பொடியும், முட்டையின் வெள்ளைக் கருவும் நன்கு கலந்திருக்கும் படி அந்த கலவை இருக்க வேண்டும்.

பிறகு முகத்தை நன்கு கழுவி விட்டு ஒரு டிஸ்ஸு பேப்பரிலோ அல்லது ஒரு டர்க்கி துண்டையோ வைத்து முகத்தை ஒத்தி எடுப்பது போல் வைத்து முகத்தில் இருக்கும் ஈரத்தை அகற்ற வேண்டும். 

பிறகு கலக்கிய கலவையை முகத்தில் சீராக தடவி மாஸ்க் போல போட வேண்டும். 

முகத்தில் மாஸ்க் போட்டவுடன் ஒரு பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் அல்லது அந்த மாஸ்க் முகத்தில் காயும் வரை விட வேண்டும். முகத்தில் போடப் பட்ட இந்த முட்டை மாஸ்க் நேரம் செல்ல செல்ல காயத் தொடங்கும், அப்படி காயும் போது முகத் தோல்  இறுக்கமாக மாறும். இதுவே மாஸ்க் காய ஆரம்பிப்பதற்கான அறிகுறி. முகத் தோல் நன்கு இறுகி இருக்கும் வேளையில், நமது கையால் அந்த மாஸ்க்கை தொட்டுப் பார்த்தால் அது ஒரு வறண்ட நிலையை அடைந்திருக்கும். இதுவே நாம் மாஸ்க்கை எடுத்து முகத்தை தண்ணீர் கொண்டு கழுவுவதற்கான நேரம்.

இப்போது, நாம் முகத்தில் சிறிது குளிர்ந்த நீரை தெளித்து முடிந்த வரை காய்ந்து இறுகிய மாஸ்க்கை கையால் எடுக்க வேண்டும். தேவை படும் போது நாம் அதிகமாக நீரை முகத்தில் தெளித்து  மாஸ்க்கை முழுதும் எடுக்க வேண்டும். மாஸ்க்கை முழுதும் எடுத்து விட்டதும் மீண்டும் குளிர்ந்த நீரை விட்டு நன்றாக முகத்தை கழுவ வேண்டும். பிறகு முகத்தை நன்கு கழுவி விட்டு ஒரு டிஸ்ஸு பேப்பரிலோ அல்லது ஒரு டர்க்கி துண்டையோ வைத்து முகத்தை ஒத்தி எடுப்பது போல் வைத்து முகத்தில் இருக்கும் ஈரத்தை அகற்ற வேண்டும். இப்போது முகம் மென்மையாக, மிருதுவாக இருப்பது மட்டும் இல்லாமல் பளிச் என்றும் இருக்கும். 

மிக முக்கியமான விஷயம் - நாம் முகத்தைக் கழுவும் போது சோப் போன்ற செயற்கையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது. சோப்பில் இருக்கும் இரசாயனங்கள் இந்த முட்டை ஃபேஸ் மாஸ்க் கொடுக்கும் பலனை கெடுத்துவிடும்.  

அழகு குறிப்பு 2 - தோல்  அரிப்பை நீக்குவதற்கு :
தோல் எரிச்சல் மற்றும் தோல் அரிப்புக்கு முட்டையின் தோல்  சிறந்த நிவாரணியாக  பயன் படுகிறது. 

இதற்கு தேவையான பொருட்கள், முட்டை ஓடு மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர். இப்போது முட்டையின் ஓட்டையும், ஆப்பிள் சைடர் வினிகர் எடுத்து  ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நன்கு ஊறவைக்கவும். நான்கு நாட்களுக்கு பிறகு தொழில் தடவுவதற்கான கலவைத்தாயார் நிலையில் இருக்கும்.. 

நாம் செய்த இந்தக் கலவையை தோல் எரிச்சல் அல்லது தோல் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி வரவும். . இஃது மிக சிறந்த பலனைத் தரும்.