அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உளவியல் தந்திரங்கள்

வாழ்க்கையை வெற்றி கொள்ள சில தந்திரங்கள் அவசியம். அந்த வகையில் சில உளவியல் தந்திரங்களை இப்போது காணலாம். இவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி பாருங்கள்.

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உளவியல் தந்திரங்கள்

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உளவியல் தந்திரங்கள் 

  1. நீங்கள் யாராவது ஏதாவது வேலை செய்து கொடுக்க வேண்டும்  விரும்பினால், அவரிடம்  வாய்மொழி கோரிக்கை விடுத்த பின்னர் “இந்த வேலையை மறுக்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது” என்பதைச் சேர்க்க சொல்லுங்கள் , வேலையைச் செய்வதற்கான வாய்ப்புகளை இரட்டிப்பாக்கலாம்.
  2. குறைந்த தேர்வுகள் = அதிக திருப்தி. உங்களிடம் அதிகமான தேர்வுகள் இருந்தால் குறைந்த திருப்தி உங்களுக்கு உண்டாகலாம் 
  3. உங்கள் வீட்டு  கடிகாரத்தில் 15 நிமிடம் வேகமாக  நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். கடிகாரம் முன்கூட்டிய நேரத்தை காட்டுவது உங்களுக்கு தெரிந்தாலும் தாமதமாக செல்ல உங்கள்  மனம் அனுமதிக்காது. ஆகவே எந்த  ஒரு இடத்திற்கும் சரியான நேரத்திற்கு உங்களால் செல்ல முடியும். 
  4. உங்களுடன் பேசும் நபருக்கு அசௌகரியத்தை உண்டாக்க வேண்டும் என்றால் பேசுவதற்கு இடையில் அவருடைய காலணிகளை பாருங்கள். இது அவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். 
  5. யாராவது உங்களை வேவு பார்க்கிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், கொட்டாவி விட  முயற்சிக்கவும். நீங்கள் கொட்டாவி விடும்போது , அவரைப்  பாருங்கள். அவர்கள் திரும்ப கொட்டாவி விட்டால் , அவர் உங்களை  பார்த்துக் கொண்டிருந்தார் என்பது உறுதியாகிறது , ஏனெனில் கொட்டாவி என்பது ஒரு  தொற்று.
  6. யாராவது உங்கள் பேச்சுக்கு  உடன்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் கருத்தை சொல்லும்போது தலையாட்டவும். தலையசைத்தல் பேச்சுகளில் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
  7. உடல் அழகை விட நம்பிக்கை மிகவும் கவர்ச்சியானது. 
  8. வழக்கத்தை விட நீண்ட நேரம் உங்கள் அன்பானவரிடம்  பேச விரும்பினால், அவரது கண்களை நேருக்கு நேர் அமைதியாகப் பார்க்க முயற்சிக்கவும். இதனால் அவரின்  மௌனம் உடைக்கப்பட்டு வார்த்தைகள் வெளிப்படும்.