உங்களுக்கு சோர்வை உண்டாக்கும் உங்கள் வீட்டு பொருட்கள்

உங்கள் வீட்டில் இருக்கும் 5 பொருட்கள் உங்களை சோர்வடையச் செய்யும்.

உங்களுக்கு சோர்வை உண்டாக்கும் உங்கள் வீட்டு பொருட்கள்

வீட்டில் இருக்கும்போது சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பது ஏன் என்று யோசித்ததுண்டா ? உங்கள் சோர்வை அதிகரிப்பதற்கான காரணங்கள் இவற்றுள் இருக்கலாம்.

வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது:

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது கடினம் . ஆனால் சுத்தமாக இருக்கும் வீட்டை அசுத்தம் செய்வது , ஒழுங்கீனமாக மாற்றுவது மிகவும் எளிது என்பதை மறுப்பதற்கில்லை. ஒழுங்கீனமாக இருக்கும் வீட்டைப்  பார்த்தாலே மயக்கம் வந்துவிடும். உங்களை சோர்வும் ஆட்கொள்ளும். பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நரம்பியல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஒரு குழப்பமான, இரைந்து கிடக்கும் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத சூழல், அதில் வாழும் மக்கள் மீது மன அழுத்தமும் சோர்வும் ஏற்பட அதிக ஆபத்தை உண்டாக்குகிறது  என்று குறிப்பிடுகிறது.

சுவர்களின் வண்ணங்கள்:

வண்ண உளவியலின் படி, உங்கள் வீட்டை அலங்கரிக்க நீங்கள் பயன்படுத்தும் வண்ணங்கள் உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தில் தாக்கத்தை உண்டாக்கும். நிறம் என்பது உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்தும் ஒன்று மட்டுமல்ல, இது உங்கள் உணர்ச்சிகளையும் நடத்தையையும் பாதிக்கக்கூடிய ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. உங்கள் தூக்கத்திற்கும் படுக்கை அறை சுவரின் நிறத்திற்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மற்ற நிறங்கள் கொண்ட படுக்கை அறையை விட நீல நிற அறைகள் கொண்டவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதாக அறியப்படுகிறது. ஊதா நிறத்தை படுக்கைஅறைக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இரவு நேர உணர்வு இந்த.நிறத்தில் கிடைப்பதில்லை என்பதால் மறுநாள் காலை மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.

உங்கள் தொலைக்காட்சி:

உங்கள் தொலைக்காட்சி நீல அலைநீளங்களை வெளியிடுகிறது, இது மூளையில் மெலடோனின் என்ற வேதிப்பொருளின் உற்பத்தியைத் தடுக்கிறது. இந்த ரசாயனம் உங்களுக்கு சோர்வாக இருப்பதற்கும், தூங்குவதற்கும் உதவுகிறது. இது இல்லாததால், நீங்கள் குறைவான தூக்கத்தைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இதனால் அடுத்த நாள் நீங்கள் சோர்வடைவீர்கள்.

உங்கள் காபி மேக்கர்:

உங்கள் காலை நேரத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுவது காபிமேக்கர். ஆனால் அதுவே  உங்கள் தூக்கத்தைக் கெடுக்கவும் உதவுகிறது. காபியில் இருக்கும் காபின் ஆற்றலை அதிகரிக்கும்  ஊக்கியாக செயல்படுகிறது. ஆனால் அதுவே இரவு உணவிற்கு பின் பருகும்போது உங்களை சோர்வாக மாற்றுகிறது. எனவே இரவு உணவிற்கு பின் காபி பருகுவதை நிறுத்திக்கொள்வதால் தூக்க இழப்பு மற்றும் காலையில் சோர்வான உணர்வு தடுக்கப்படும்.

லாவெண்டர் நறுமணம்:

லாவெண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களின் நறுமணம் ஒரு சுகமான மற்றும் நல்ல மனநிலையைத் தரும். ஆனால் அதுவே உங்களுக்கு சோர்வையும் தரும். வெஸ்லியன் பல்கலைக்கழக உளவியலாளர்கள், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு லாவெண்டர் சாற்றைப் நுகரும்  மக்கள் அதிக தடங்கல்கள் இல்லாமல் நன்றாகத் தூங்குவதைக் கவனித்தனர். இருப்பினும், அதே வாசனையை அதிகாலையில் நுகர்வதால் சோம்பலாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும்.