மருந்தைக் காட்டிலும் வேகமாக  சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடும் 5 பழங்கள் 

பழங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.மேலும் பழங்களுக்கு கிருமிகளைக் கொல்லும் தன்மை உண்டு. அதிக அளவு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளதால், பழங்கள், காய்ச்சல் மற்றும் சளியை கட்டுக்குள் வைக்கின்றன.

மருந்தைக் காட்டிலும் வேகமாக  சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடும் 5 பழங்கள் 

பழங்களை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், இதய நோய் மற்றும் புற்று நோய்க்கான அபாயமும் குறைகிறது. சளி மற்றும் காய்ச்சலை விரட்டும் தன்மை கொண்ட ஐந்து பழ வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆப்பிள் :
ஆப்பிள் , அன்டி ஆக்சிடென்ட்களின் சிறந்த ஆதாரமாகும். ஒரு ஆப்பிள் 1,500 மிகி வைட்டமின் சி அன்டி ஆக்சிடென்ட் விளைவை கொண்டுள்ளது. ப்லேவனைடு அதிகம் உள்ள ஆப்பிள், இதய நோய் மற்றும் புற்று நோயைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளி:

வைட்டமின் சி யின் 250 சதவீத ஆர்டிஏவைக் கொண்டுள்ள  ஒரு பப்பாளி சளி மற்றும் காய்ச்சல் போன்ற வியாதிகளை குணப்படுத்துகிறது. பப்பாளியில் காணப்படும் பீட்டா கரோடின், வைட்டமின்  சி மற்றும் ஈ போன்றவை உடல் முழுவதிலும் உள்ள அழற்சியைக் குறைத்து , ஆஸ்துமா பாதிப்புகளைக் குறைக்கிறது.

குருதி நெல்லி :
மற்ற காய்கறி மற்றும் பழங்களை விட குருதி நெல்லியில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. ப்ரோகோலியை ஐந்து முறை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள், இந்த பழத்தை ஒரு முறை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கிறது. குருதி நெல்லி ஒரு இயற்கை ப்ரோபயோடிக் ஆகும், ஆகவே இவை, குடலின் நல்ல பக்டீரியா அளவை அதிகரித்து உணவினால் உண்டாகும் நோய்களைப் போக்க உதவுகிறது.

சாத்துக்குடி :
லிமோநோய்டு போன்ற இயற்கை கூறுகள் சாத்துக்குடியில் அதிகம் உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. 

வாழைப்பழம்:
வாழைப்பழம் வைட்டமின் பி 6ன் ஆதாரமாக விளங்குகிறது. வாழைப் பழம் சோர்வைப் போக்கி, மன அழுத்தம்,, மற்றும் தூக்கமின்மையைக் குறைக்க உதவுகிறது. வாழைப் பழத்தில் மக்னீசியம் அதிகமாக இருப்பதால், எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகிறது. இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.