நீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

ஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரின் பிறந்த தினம் கூட அவரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒரு நபரின் குணநலன்களில் அவரின் பிறந்த தினம் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளில் பிறந்தவருக்கும் ஒரு தனிப்பட்ட குணம் உண்டு. ஆகவே எந்த நாளில் பிறந்தவர் எவ்வித குணம் கொண்டிருப்பார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.

பிறந்த தினத்திற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும். ஞாயிற்றுக் கிழமையை ஆட்சி செய்வது சூரிய பகவான் , திங்கட்கிழமையை ஆட்சி செய்வது சந்திர பகவான், செவ்வாய்க் கிழமையை ஆட்சி செய்வது செவ்வாய் பகவான் . புதன் கிழமையை ஆட்சி செய்வது புதன் பகவான். வியாழக் கிழமையை ஆட்சி செய்வது குரு பகவான், வெள்ளிக்கிழமையை ஆட்சி செய்வது சுக்கிர பகவான், சனிக்கிழமையை ஆட்சி செய்வது சனி பகவான். சரி, இப்போது ஒவ்வொரு தினமும் வெளிப்படுத்தும் செய்தியை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

திங்கட்கிழமை:
இந்த நாளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சுய-உந்துதல் உடையவர்கள். அன்பான சுபாவத்திற்கும், இனிமையான குணத்திற்கும் பெயர் போனவர்கள் இவர்கள். இன்பம் மற்றும் துன்பத்தை கருணையோடு கையாளும் தன்மைக் கொண்டவர்கள் இவர்கள். ஆரம்ப காலத்தில் படிப்பை வெறுக்கும் இவர்கள் , அடுத்த சில ஆண்டுகளில் வெறுப்பைக் கடந்து ஞானம் பெறுவார்கள்.

செவ்வாய்க்கிழமை :
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் மூக்கின் மேல் கோபத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள். இதன்காரணமாக, நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சண்டை போடும் நிலை ஏற்படுவதுண்டு. இவர்கள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவர்களாக வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள்.

புதன் கிழமை :
மதம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக முனைப்புடன் இருப்பவர்கள் புதன் கிழமை பிறந்தவர்கள். கடவுளுக்கு பயப்படும் சுபாவம் இருப்பதால் தீய செயல் மற்றும் எண்ணங்களில் இருந்து விலகி இருப்பார்கள். புத்தி கூர்மை அதிகம் இருப்பதால் அவர்கள் வாழ்வை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு உண்டு. அதனால் அவர்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.

வியாழக்கிழமை :
வியாழக்கிழமை பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். சாகச குணம் உள்ளவராகவும் இருப்பார்கள். கடினமான காலங்களை மிகவும் எளிதாக கடந்து வரும் ஆற்றல் இவர்களுக்கு அதிகம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் மற்றும் நண்பர்களிடம் இருந்து மிகுந்த அன்பு மற்றும் ஆதரவு பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எல்லா நேரமும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும்.

வெள்ளிக்கிழமை:
எப்போதும் சந்தோஷமாகவும் உற்சாகமாமகவும் இருக்கும் இவர்களை ஒரு கூட்டத்தில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவரக்ளை சுற்றி இருக்கும் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக வெள்ளிக் கிழமை பிறந்தவர் இருப்பார். கடினமான காலகட்டங்களில் மிகவும் அதிக பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையைக் கடைபிடிப்பதால் கடினமான நபராக உருவாக்கப்படுகிறார்.

சனிக்கிழமை:
விவசாயம், வியாபாரம், தொழில்நுட்பம் போன்ற தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்கள் இவர்கள்.  சிறு வயதில் பல கஷ்டங்களை அனுபவித்து இருப்பதால், வளர்ந்த பிறகு சுற்றி இருக்கும் மக்களிடம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் கூட ஒரு சற்று விலகியே இருக்கும் சுபாவம் இவர்களுக்கு உண்டு.

ஞாயிற்றுக் கிழமை :
பிற்போக்குத் தன்மை அதிகம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள். வாழ்வின் பிற்பகுதியில் நல்ல நிலையை அடையும் தன்மைக் கொண்டவர்கள் இவர்கள். அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம் எப்போதும் இருக்கும். சமூகத்தின் மீது பரந்த மனப்பான்மைக் கொண்டவர்கள் இவர்கள்.