டயட் குறித்த கட்டுக்கதைகள்

நாம் சாப்பிடக்கூடிய பல பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளைப் பார்த்து புரிந்து கொண்டு, அதை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்கிறோம்.

டயட் குறித்த கட்டுக்கதைகள்

சில பொருட்கள் பற்றி லேபிள் மூலம் தெரிந்து கொள்ள முடியாதபோது, இன்டர்நெட் நமக்கு உதவுகிறது. ஆனால் இன்டர்நெட் கூறும் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சில பொருட்கள் நமக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்போம் , ஆனால் அவை நமக்கு தீமையை உண்டாக்கும். சிலவற்றை  நம் உடலுக்கு கெடுதல் என்று நினைப்போம். ஆனால் அவை அப்படி இருப்பதில்லை. எனவே இத்தகைய கட்டுக்கதைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் உணவியல் நிபுணர் ஸ்ரீஷ்டி அரோரா அவர்கள் நமக்கு உதவுகிறார் . 

பிரட் , பாஸ்தா, அரிசி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை உட்கொண்டால் குண்டாகிவிடலாம்:

கார்போஹய்ட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இதனால் குறைந்த கார்போ உணவுகளான அட்கின் டயட் போன்றவை பிரபலமாகத் தொடங்கின. ஆனால்  கார்போ சத்து அதிகம் உள்ள உணவுகள் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை. எல்லாவற்றையும்விட, அதிக கலோரி எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் கார்போ உணவை எப்படி சமைக்கிறோம்  என்பதில் வித்தியாசம் இருக்கிறது. ப்ரெட்டுடன் பட்டர் சேர்ப்பது, பாஸ்தாவுடன் சாஸ் சேர்ப்பது, உருளைக்கிழங்குடன் எண்ணெய் சேர்ப்பது போன்றவை வினையை உண்டாக்குகின்றன. 

குறிப்பு:

நீங்கள் தாராளமாக வெள்ளை பிரட், பழுப்பு அரிசி, கோதுமை பாஸ்தா போன்றவற்றை கொழுப்பு சேர்க்காமல்  எடுத்துக் கொள்ளலாம். பாஸ்தாவில் சீஸுக்கு மாற்றாக தக்காளி சேர்க்கலாம், ப்ரெட்டில் பட்டர் சேர்ப்பதற்கு மாற்றாக தயிர் சேர்த்து உட்கொள்ளலாம்.

இரவு நிறைய உணவு சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்:

இரவில் அதிக உணவு சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கிறோம். உண்மையில் இரவு உணவைத் தவிர்ப்பது தான் மிகப் பெரிய பிரச்சனை. பகல் முழுக்க அதிக கலோரிகளை உட்கொண்டுவிட்டு,  இரவில் எதையும் உட்கொள்ளாமல் தவிர்ப்பது எடை இழப்பை ஊக்குவிக்காது. நீங்கள் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை தினமும் இழக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இதனால் எடை இழப்பு சாத்தியமாகும்.

குறிப்பு:

பகல் நேரத்தில் மட்டுமே எல்லா உணவையும் உட்கொள்ள வேண்டாம். இரவு உணவிற்கு ஒரு குறிப்பிட்ட கலோரி அளவை ஒதுக்கி வையுங்கள். இரவு நேர உணவையும் சேர்த்து பகல் நேரத்தில் சாப்பிடும்போது எடை இழப்பு எப்படி சாத்தியமாகும்? சரியாக வரையறுக்கப்பட்ட உணவு விகிதத்தை கடைபிடியுங்கள்.

அதிக உடல் எடைக்கு மரபணு காரணமாக இருக்கலாம் :

நம்மில் பலர் உடல் பருமனுக்கு மரபணு காரணம் என்று கூறுவதை கேள்விப்பட்டிருக்கலாம். உண்மையில் நம்முடைய வாழ்க்கை முறை, உடல் எடையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் கண்டிப்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் எதையும் மாற்ற முடியாது. மேலும் பெற்றோரின் மரபணு உடல் பருமனுக்கு ஒரு காரணம்  என்பது  உண்மை என்றாலும் உங்கள்  உடல் வகைக்கு ஏற்றபடி, எடை இழப்பை நோக்கி நீங்கள் முயற்சிக்கலாம்.

குறிப்பு:

உங்கள்  வாழ்க்கை முறையில்  குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்து வித்தியாசத்தை  பாருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், நன்றாக உணவு உட்கொள்ளுங்கள், வேலை  எதுவும் செய்யாமல் உட்கார்ந்து கொன்டே இருக்க வேண்டாம் . ஒரு நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருங்கள் .

பால் பொருட்கள் ஆரோக்கியமற்றவை :

பாலில் லாக்டோஸ் இருப்பதால், பலரும் இன்றைய நாட்களில் பால் பொருட்களுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக இருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் , சீஸ், தயிர், பால் போன்றவை புரதம், ஜின்க், கால்சியம் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக இருக்கும் பொருட்களாகும். மேலும் இத்தகைய பால்பொருட்கள், குறைந்த  கொழுப்பு வகைகளாக இன்று சந்தையில் கிடைக்கின்றன. எனவே உடல் எடை அதிகரிக்கும் பயமும் இல்லை. குறைந்த கொழுப்பு பால் பொருட்களில் கால்சியம் சத்தில்  குறைபாடு இருப்பதில்லை, கொழுப்பு அளவில்  மட்டுமே குறைபாடு உள்ளது.

குறிப்பு:

எடை இழப்பு திட்டத்தை செயல்படுத்தும் நபர்கள், முழு கொழுப்பு பால் பொருட்களுக்கு மாற்றாக குறைந்த கொழுப்பு பால் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். ஒரு நாளில் மூன்று வேளை உட்கொள்ளக் கூடிய பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.