வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந்தால்?

பிரசவத்தை மறு ஜென்மம் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். குழந்தை பிரசவிக்கும் எல்லா தாய்மார்களுக்கும் பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் ஒரு வித திகைப்பும் ஆச்சர்யமும் பயமும் கலந்த உணர்வு காணப்படுவது இயற்கை. அதுவும் முதல் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம்.

வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந்தால்?

பிரசவ நேரத்தை எப்போதும் தீர்மானிப்பது சற்று கடினமான காரியம். எந்த நேரம் வலி வரும் என்பதை யாரும் அறிய முடியாது. சில நேரங்களில் பிரசவ வலி வரும்போது, கர்ப்பினிகளுடன் யாரும் இல்லாத சூழ்நிலை உருவாகலாம். தனியாக மருத்துவமனை செல்ல நேரலாம். இது போன்ற திட்டமிடாத பிரசவ நேரம் உங்களுக்கு நேருமாயின் கவலை கொள்ள வேண்டாம். சற்று நேரம் அமைதியாக இருங்கள். இங்கே சொல்லப்பட்டுள்ள எளிய விதிகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பிரசவ சிகிச்சையை கடந்து வரலாம். சில பெண்கள் குழந்தை பிறப்பை ஒரு நெருங்கிய பிணைப்பாக உணர்வதால், தனியாக குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதை விரும்புகின்றனர்.

பிரசவத்தை வீட்டிலேயே நிகழ்த்துவதற்கான எளிய குறிப்புகள்: 

சுகப்பிரசவத்தில் குழந்தை ஈன்றெடுக்கும் தாய்மார்களுக்கு வெளி உதவி அதிகமாக தேவைப்படுவதில்லை. எதாவது ஒரு சிக்கல் ஏற்படும்போது அல்லது ஆதரவு தேவைப்படும்போது மற்றவர்களின் உதவி தேவை. சிக்கல் இல்லாத பிரசவத்தில் தாயின் உடல் எல்லா வேலைகளையும் செய்வதற்கு முனைப்புடன் இருக்கும். ஆரோக்கியமான சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தானாக மூச்சு விடத் தொடங்கும். தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் தவிர வேறு எந்த சிறப்பு பராமரிப்பும் குழந்தைக்கு தேவைப்படுவதில்லை.

அவசர பிரசவத்தை எளிய முறையில் எதிர்கொள்ள சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் முதலில் குழந்தையை பிரசவிக்க தயாராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும் மற்றும் நீங்கள் எந்த மருத்துவமனைக்கும் சென்று அதை செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது பிரசவ வலி தான் என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். வலி அடிக்கடி விட்டு விட்டு வருவதை உணர்ந்து கொள்ளுங்கள். இதுவே பிரசவத்திற்கான அறிகுறி. முதல் குழந்தையின் பிரசவ நேரம் அடுத்த அடுத்த பிரசவ நேரத்தை விட நீளமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே மன நல ரீதியாக சுகமான ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

2. ஆம்புலன்சை அழையுங்கள்:
ஒரு அழகான குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அதே நேரம் சில முக்கிய விஷயங்களை நினைவில் வையுங்கள். இந்தியாவில் அவசர ஆம்புலன்ஸ் எண் 108. ஆம்புலன்சை விரைவாக அழைக்க வேண்டும். மேலும் உங்கள் மகப்பேறு மருத்துவரையும் அழையுங்கள். உங்கள் மருத்துவர் உங்களிடம் அவசர பிரசவம் குறித்து, அதன் அடிப்படை நிலைகளை பற்றி விளக்கிக் கூற முடியும். ஆகவே அவரை அழைத்து போன் ஸ்பீக்கரை ஆன் செய்து கொள்ளவும். உங்கள் வீட்டு கதவை தாழிட வேண்டாம். இதனால் மருத்துவ உதவிக்காக வருபவர்கள் நேரடியாக உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களுக்கு உதவ முடியும். 

3. இது இயற்கையான செயல் என்பதை உணர்ந்து அமைதியாக இருக்கவும்:
திட்டமிடப்படாத பிரசவம் என்பது பயத்தை அதிகரிக்கும் என்றாலும், நீங்கள் அமைதியாக இருக்க முயற்சியுங்கள். உங்கள் உடல் இந்த சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் என்பதை நம்புங்கள். நீங்கள் பயம் கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலை மாறி, தலைக்கு பதில் கால் பகுதி முதலில் வெளி வர நேரலாம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் தலை பகுதி முதலில் வெளிவரும் நிலை தான் சரியான நிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தலை பகுதி முதலில் வெளி வருவதால் வேறு எந்த ஒரு பிரச்ச்சையும் பிரசவத்தில் உண்டாக வாய்ப்பில்லை. மருத்துவமனையில் நிகழும் பிரசவத்தை விட வீட்டில் நிகழும் பிரசவம் இயல்பானது மற்றும் பாதுகாப்பானது ஆகும். நமது முன்னோர்களின் காலத்தில் பல தாய்மார்கள் தங்கள் குழந்தையை வீட்டிலேயே பெற்றெடுத்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீட்டில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு மிகக் குறைந்த  மருத்துவ தலையீடுகள் உண்டாகின்றன.

4. உங்களை சுத்தமாகவும் சௌகரியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்:
உங்கள் கைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீர் மற்றும் குறைந்தது நான்கு சுத்தமான டவலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை வெதுவெதுப்பாக மூடுவதற்கு இது உதவும். பிரசவத்திற்கு பிறகு உங்களை சுத்தம் செய்து கொள்ள வசதியாக பாத் டப்பில் சௌகரியமாக உட்காரலாம். ஆனால் அதே நேரம், அவசர குழுவின் அவசியம் ஏற்பட்டால் உங்களை அவர்களால் அணுக முடியாது. சுத்தமான டவல், ஷீட், திரைசீலை, தரை விரிப்பு போன்றவற்றை தரையில் விரித்து விடலாம். நீங்கள் தனியாக இருக்கும்போது தரையில் படுக்க நினைத்தால், தலையணை அடுக்காக வைத்துக் கொள்ளலாம். எங்கு இருப்பது உங்கள் சௌகரியத்தை அதிகமாக்கும் என்பதை உணர்ந்து அந்த நிலையை நீங்கள் தேர்ந்துடுத்துக் கொள்ளலாம். 

5. குழந்தையை முடிந்த வரை வெளியில் தள்ள முயற்சியுங்கள் :
எதிர்பாராத நேரத்தில் குழந்தை வெளிவர நேர்ந்தால், கர்ப்பிணிகள் மிகவும் முயற்சித்து குழந்தையை வெளியில் தள்ள முயற்சிக்க வேண்டாம். இதனால் மென்மையான திசுக்கள் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. அதிகமாக மூச்சு வாங்குவதை குறைக்க வேண்டும். இது உள்ளார்ந்த அழுத்தத்தை அதிகரிக்கும், மேலும் குழந்தையை வெளியில் தள்ள முயற்சிக்கும் போது மூச்சை நீண்ட நேரம் உங்களால் பிடித்து வைக்க முடியாது. மென்மையான முறையில் குழந்தையை வெளியில் தள்ள முயற்சியுங்கள். குழந்தையின் தலை வெளியில் வருவது தெரிந்தால், பெண்குறிக்கு கீழே உள்ள பகுதியில் உங்கள் கைகளை வைத்து  மென்மையாக அழுத்துங்கள். குழந்தை தானாக வெளியில் வருவதற்கு உதவுங்கள். குழந்தையின் கழுத்தில் தொப்புள் கோடி சுற்றி இருந்தால், தொப்புள் கொடிக்கு கீழே உங்கள் விரலை மாட்டி மெதுவாக தளர்த்தவும். தலை முதலில் வெளிவந்துவிட்டால் தோள் பகுதி மற்றும் இதர பகுதி எளிதில் வெளி வந்து விடும்.

6. குழந்தை வெளியில் வந்தவுடன் என்ன செய்வது?
குழந்தை வெளியில் வந்தவுடன், குழந்தையை ஒரு டவலில் சுற்றி உங்களுடன் அரவணைத்துக் கொள்ள வயிற்று பகுதிக்கு மேலே கொண்டு வாருங்கள். இதனால் குழந்தை வெதுவெதுப்பாக மற்றும் அமைதியாகவும் உணரலாம். கண்களின் ஓரத்தில்  இருந்து மூக்கு பகுதி வரை உங்கள் விரலை ஓட விடவும். இதனால் பனிக்குட நீர் வழிந்து வரும். , குழந்தையின் முதல் சுவாசத்தை ஊக்குவிக்க முடியும். பிறகு குழந்தையின் முதுகு பகுதியை நன்றாக தேய்த்து விடவும். இதனால் குழந்தை சுவாசிக்க தொடங்கும். இன்றைய காலகட்டத்தில்  எந்த ஒரு வெளிப்புறத் தலையீடும் இல்லாமல் குழந்தைகள் தானாக சுவாசிக்கத் தொடங்குகின்றன. ஒருவேளை குழந்தை சுவாசிப்பதில் தடுமாற்றம் இருந்தால், ஒரே முறை குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ஊதி விடலாம். 

அடுத்தது குழந்தைக்கு தாய்ப்பால் தருவது. உடனடியாக குழந்தைக்கு தாய்ப்பால் தருவதால் தாயின் உடலில் ஆக்சிடாசின் என்னும் ஹார்மோன் சுரக்க முடிகிறது. இது கருப்பையை மேலும் சுருக்க உதவுகிறது. இதனால் நஞ்சுக்கொடி உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

7. தொப்புள் கொடியை கட்டவோ வெட்டவோ வேண்டாம் :
தொப்புள் கொடியை தாய்மார்கள் கவனமாக கையாள வேண்டும். நோய் நுண்மங்கள் ஒழிக்கபப்ட்ட முறையில் அதனை வெட்டுவது எளிய காரியம் அல்ல. இதனால் குழந்தைக்கு தொற்று பாதிப்பு உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பிறக்கும் தருவாயில் தானாக சுவாசிக்காத குழந்தைகள் உயிரைக் காப்பாற்றும் வழி இதில் உள்ளது. நஞ்சுக்கொடியில் குழந்தையின் 30% இரத்தம் இருப்பதால், அடுத்த மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை குழந்தைக்கு ஆக்சிஜென் செல்ல இது உதவும். ஆகவே இந்த கொடி வெட்டப்படாமல் இணைந்தே இருக்க வேண்டும், மேலும் நஞ்சுக்கொடியை சுத்தமான டவலில் சுற்றி வைக்க வேண்டும். மருத்துவ நிபுணர்கள் வந்து நோய் நுண்மங்கள் ஒழிக்கபப்ட்ட முறையில் அதனை வெட்டி எடுப்பார்கள்.

யாருடைய உதவியும் இல்லாமல் பெண்கள் குழந்தையை பிரசவிக்கும் முறை தற்போது வளர்ந்து வருகிறது. குழந்தை  பிறப்பின் வழிமுறைகளை மற்றும் அதன் அபாயங்களை பெண்கள் அறிந்திருப்பதால் அந்த சூழ்நிலையை கையாளும் திறன் அவர்களுக்கு வருகிறது. சில நேரங்களில் மருத்துவரின் கண்காணிப்பின்றி இத்தகைய பிரசவங்கள் மருத்துவ உதவியாளர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. குழந்தையின் பாதுகாப்பான பிரசவத்திற்கு போதிய தயாரிப்புகளை தாய்மார்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பிரசவம் குறித்த செய்திகளை முன்கூட்டியே அறிவதால், பிரசவ நேரத்தில் உண்டாகும் பயம் சற்று குறையக் கூடும். உங்களுக்கு குழப்பமான மனநிலை உண்டாகும்பபோது ஒன்றை மட்டும் இணைவில் கொள்ளுங்கள், உங்கள் உடலும், வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தையும் நீங்கள் நினைப்பதை விட அதிகம் அறிந்திருப்பார்கள்.