சருமத்தை அழகாக்க டிப்ஸ் இதோ!

சருமத்திற்கான சில அத்தியாவசிய அழகு குறிப்புகளைப் இங்கே பார்க்கலாம்.

சருமத்தை அழகாக்க டிப்ஸ் இதோ!

நம்மை அழகுபடுத்த உதவும், சில அத்தியாவசிய மற்றும் எளிய அழகு குறிப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இவற்றை செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

க்ளென்சர்:

உங்கள் சரும வகைகளுக்கு ஏற்ற சரியான க்ளென்சரை எப்போதும் பயன்படுத்த வேண்டும். சருமத்திற்கு ஏதேனும் புதிய க்ரீம் அல்லது க்ளென்சர் வாங்கும் போது, உங்கள் சரும வகைகளுக்கு அது உகந்ததா என உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உங்கள் சருமம் என்ன வகை என்பதை நீங்கள் கண்டெறிய வேண்டும். சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும். சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும். அதை நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

மாய்ஸ்ட்ரைசர்:

சருமத்தில் போதிய ஈரப்பதம் இல்லாவிட்டால் சில நேரங்களில் முகப்பரு ஏற்படலாம். எனவே, குளித்துவிட்டு வெளியே வந்த பிறகும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் சருமத்தில் கண்டிப்பாக மாய்ஸ்ட்ரைசர் அப்ளை செய்யுங்கள். 

சன் ஸ்க்ரீன்:

ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும், மறக்காமல் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தாமல் வெளியே சென்றால் சருமம் மந்தமாக, வறட்சியடைந்ததாக மற்றும் வயதான தோற்றமுடையதாக மாறிவிடும். மற்றும் தோலில் உள்ள மெலனின் நிறமி பாதிக்கப்படும்.

ஹைட்ரேட்:

ஆரோக்கியமான சருமத்திற்கு நீரேற்றம் என்பது இன்றியமையாதது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, அரிப்பு போன்றவற்றை தவிர்க்க, நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளால் உங்களை ஹைட்ரேட் செய்வது அவசியமானது. 

வைட்டமின் சி :

உணவில் அதிகம் வைட்டமின் சி எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் சி கிரீம்கள் உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு, பிரகாசமாகவும், பளபளப்பானதாகவும் மாற்றும். 

ஸ்கரப்:

உங்கள் முகம் மற்றும் உதடுகளை வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதால் இறந்த சரும செல்கள் வெளியேற்றப்படுகிறது. ஆனால் அதே சமயம் அடிக்கடி ஸ்கரப் செய்தாலும், உங்கள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகி, பருக்கள் வர ஆரம்பிக்கும். எனவே அளவான முறையில் செய்ய வேண்டும். உதடுகளை ஸ்கரப் செய்வதும் முக்கியமானது. அப்படி செய்தால் உங்கள் உதடுகள் மென்மையாக மாறும். 

குளிர்ந்த நீர்:

உங்கள் முகத்தை கழுவும் போது வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவுங்கள். சூடான நீர் உங்கள் துளைகளைத் திறந்து, அழுக்குகளை வெளியேற்றும். அதே போல் குளிர்ந்த நீரும் உங்கள் சருமத்திற்கு நல்லது.

இதுமட்டுமின்றி குளிர்காலத்தில் செய்ய வேண்டிய ஸ்பெஷல் சரும பராமரிப்புகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

குளிர்கால சரும பராமரிப்பு