ஆஸ்துமாவை போக்கும் மருந்து

சுவாச மண்டலத்தில் ஏற்படும் கிருமி தாக்குதலால் ஆஸ்துமா ஏற்படுகிறது.

ஆஸ்துமாவை போக்கும் மருந்து

நுரையீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அடைப்பால் அதன் பாதை குறுகி மூச்சுக்காற்று சீராக உள்ளே சென்று வர முடியாத நிலை உருவாகிறது. இந்த நிலை நீண்ட நாட்கள் தொடரும்போது ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. இருமல், மூச்சு விட சிரம படுவது, நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருப்பது போல் உணர்வது போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறி. அமெரிக்கர்களில் 26 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்துமா மருந்துகளுடன், வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆஸ்துமாவின் தாக்கம் குறைகிறது என்று லண்டனில் உள்ள குயின் மேரி யூனிவெர்சிடியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறைந்த அளவு முதல் மிதமான அளவு வரை இருக்கும் ஆஸ்துமா நோய் இந்த சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகிறது.
 
அதிகரித்த ஆஸ்துமா நோயால் இறப்பும் ஏற்படுகிறது. மருந்து மற்றும் சிகிச்சையால் 50% பேர் ஆஸ்துமாவில் இருந்து குணமடைகின்றனர் அன்று கூறப்படுகிறது.
 
சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ்களை எதிர்த்து போராட, நோயெதிர்ப்பு  சக்தி தருவது வைட்டமின் டி சத்து. இதனால் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஒரு சோதனையில் 955 கொண்ட குழுவை 7 தனி தனி குழுவாக  பிரித்து வைட்டமின் டி மாத்திரைகளை பயன்படுத்த உத்தரவிட்டனர். ஸ்டெராய்ட் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பயன்படுத்தும்  ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆஸ்துமாவின் தாக்கம் 30% குறைக்கப்பட்டது தெரிய வந்தது. குறைந்த பட்ச ஆஸ்துமா தாக்கம் உள்ளவர்களுக்குகான் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது. அதிகமான ஆஸ்துமா தாக்கம் உள்ளவர்களுக்கு மிக குறைந்த மாற்றம் அறியப்பட்டது.

வைட்டமின் டி சத்து , எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல நோயெதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது என்பது இதன்மூலம் அறியப்படுவதாக அட்ரெய்ன் மார்ட்டின் என்ற முதன்மை ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார்.
 
யுகேவில் ஒரு நாளைக்கு 3 பேர் ஆஸ்துமா தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். இதனை தடுக்க வைட்டமின் டி சத்தை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாகும். இதன் விலையும் மிக குறைவு. சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா அதிகரிப்பு 55% வரை குறைந்ததாக கூறப்படுகிறது. 

சளி, இருமல் போன்ற தொல்லைகள் சிறிய அளவு இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் இருந்து ஒதுங்கி இருப்பது ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தும் .