அதிகமான வெள்ளை படுதலின் காரணங்கள்

பொதுவாக நமது உடலின் செயல்பாடுகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான மாற்றங்கள் மாறாமல் இருந்து கொன்டே இருக்கும்.

அதிகமான வெள்ளை படுதலின்  காரணங்கள்

ஆண் பெண் இருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் வளர்ச்சி பற்றிய மாற்றங்கள் ஏற்படும். இவைகளை பற்றிய எந்த ஒரு அச்சமும் நாம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  

உடலியக்க மாற்றங்களுக்கு எந்த ஒரு வயது வரம்பும் இல்லை. பாலின  பேதமும் இல்லை. இந்த இயற்கையான மாற்றங்களில் சில நேரம் சிலருக்கு சில அசாதாரண குறியீடுகள் தென்படலாம். அப்போது, அதனை கவனித்து சரி படுத்த வேண்டும்.  

உடலியக்கத்தில் மாற்றங்கள்:
பெண்கள் பூப்பெய்தும் காலத்தில் அவர்களின் மார்பக திசுக்கள் வளர்ச்சியடையும். இதனால் அந்த பகுதியில் வலி ஏற்படலாம். இதே வயதில் ஆண் பிள்ளைகளுக்கு டெஸ்டோஸ்டெரோனின் செயல்பாட்டினால், குரலில் மாறுபாடு தோன்றும்.  இப்படி நம் வாழ்நாள் முழுதும், ஹார்மோன்கள் மற்றும் என்சைம்கள் தொடர்பான செயல்பாடுகளால்  நமது உடலில் சில மாறுபாடுகள் தோன்றி கொன்டே இருக்கும். இதன் தொடர்ச்சியாக சில அறிகுறிகள் ஏற்பட்டு கொன்டே இருக்கும். 

மாதவிலக்கு நாட்களுக்கு முன்பாக சில பெண்களுக்கு, அதிகமான பசி, வயிற்று வலி, கால் வலி , மனச்சோர்வு போன்றவை  ஏற்படலாம். இவைகள் சாதாரணமான உடலியக்க மாற்றங்கள். வெள்ளை படுதல் என்பது பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயல்பான அறிகுறிதான். 

வெள்ளைப்படுதல் :
பூப்பெய்த பெண்களுக்கு பொதுவாக பெண் உறுப்பிலிருந்து அடர்த்தியான வெள்ளை திரவம் வெளிப்படும். இதனை வெள்ளை படுதல் என்று கூறுவோம். பெண் உறுப்பில் இருக்கும் கழிவுகள் இயற்கையான முறையில் வெளிவருவது தான் இந்த வெள்ளை படுதல். இது குறைந்த அளவாக இருக்கும் வரை சாதாரணமான ஒரு செயல் பாடுதான்.  இதன் அளவு அதிகரித்து காணப்படும்போது மற்றும் வெள்ளைப்படுதலில் துர் நாற்றம் அல்லது நிற வித்தியாசம் தோன்றும்போது அது கவனிக்க பட வேண்டியதலுக்கான  ஒன்று. அதிகமான வெள்ளை படு சில காரணங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன. அதனை இப்போது காண்போம்.

பால்வினை நோய்கள்:
பால் வினை நோய்களால் பாதிக்க பட்டவருடனான பாதுகாப்பற்ற தொடர்பால் பெண்களுக்கும் பால் வினை நோய் ஏற்படும். இதனால் வெள்ளை படுதல் அதிகரிக்கும். அந்த பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்படும். மற்றும் இந்த திரவத்தில் ஒரு வகையான துர்  நாற்றம் வீசும். 

பூஞ்சை தொற்று:
பெண் உறுப்பின் உட்புறத்தில் புஞ்சை வளர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் ஏற்படும் தொற்றின் காரணமாகவும்  அதிகமான வெள்ளை படுதல் ஏற்படலாம்.

கரு முட்டைகள் :
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கரு முட்டைகள் அதிகமாக  உருவாகும் காலத்தில் அதிகமான வெள்ளை படுதல் ஏற்படலாம். இந்த காலம் கருவுறுதலுக்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது. 

பாதுகாப்பு சாதனங்கள் :
கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு பெண் உறுப்பில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாகவும் அதிகமான  வெள்ளை படுதல் உண்டாகலாம். 

ஒவ்வாமை:
நறுமண மிக்க சோப், ஸ்பிரே, பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவம் போன்றவற்றால் சில பெண்களுக்கு  ஒவ்வாமை ஏற்படும். இதனால் ஏற்படும் தொற்றின் காரணமாக அதிக அளவிலான வெள்ளை படுதல் ஏற்படும்.

காண்டம் :
வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட காண்டம்கள் பயன்பாடு சில பெண்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் . இதனால் பெண்ணுறுப்பு பாதிக்கப்பட்டு அசாதாரணமான வெள்ளை படுதல் உருவாகும்.

சிறுநீர் பாதையில் நோய் தொற்று :
சிறுநீர் பாதையில் நோய் தொற்றினால் பாதிக்க பட்ட பெண்களுக்கு வெள்ளை படுதலில் ஒரு வித துர்நாற்றம் வீசும்.  சராசரி அளவை விட அதிகமான வெள்ளை படுதலும் இருக்கும்.

மேலே குறிப்பிட்ட வகையினால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை தரும்.