உங்கள் கூந்தலுக்கு நன்மை செய்யும் குப்பைமேனி

உங்கள் கூந்தலுக்கு நன்மை பயக்கும் செடிகளில் குப்பைமேனியும் ஒன்று. இது எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் இந்த பதிவின் மூலம் கூந்தலுக்கு அவை ஏற்படுத்தும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

உங்கள் கூந்தலுக்கு நன்மை செய்யும் குப்பைமேனி

பல்வேறு சுற்றுப்புற காரணிகளால் உங்கள் கூந்தல் பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும், உங்கள் கூந்தலில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் வலிமையடைந்து மேலும் சிக்கலைத் தோற்றுவிக்கின்றன. இதனால் உச்சந்தலையில் பிரச்சனை, பொடுகு மற்றும் இதர தொந்தரவுகள் உண்டாகின்றன.

ஆகவே இந்த சேதங்களைப் போக்கி கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது தான் நமது லட்சியம். இதனை செய்வதால் உங்கள் கூந்தல் பளபளப்பாக மாறுகிறது. வளர்ச்சியும் அதிகரிக்கிறது. ஆனால் இவை அனைத்தும் இயற்கையான முறையில் நடைபெறுவது இன்னும் சிறப்பம்சமாகும்.

குப்பைமேனி இலைகள், பொடுகை எதிர்த்து போராடி, கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது முற்றிலும் உண்மை. பொதுவாக எந்த இடத்திலும் வளர்ந்திடும் இந்த செடி, ஒரு சக்திமிக்க மூலப்பொருளாக கூந்தல் வளர்ச்சியில் உதவுகிறது.

குப்பைமேனி :

இது பல்வேறு இடங்களில் காணப்படும் ஒரு செடியாகும். ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் குப்பைமேனி வளர்கிறது. பொதுவாக, ஆறு, குட்டை, ஏரி போன்ற தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு அருகில் குப்பைமேனி செடியைக் காண முடியும். பொதுவாக, இது ஒரு களையாக பார்க்கப்படுவதால் பலர் தங்கள் தோட்டத்தில் இருந்து இத்தனை வெட்டி எறிந்து விடுவதை நாம் கண்டிருக்கலாம். 

குப்பைமேனி பல்வேறு நன்மைகள் கொண்ட ஒரு செடி. கிருமி எதிர்ப்பு, ஒவ்வாமை பாதிப்பை நீக்கும் தன்மை, சுத்தீகரிக்கும் தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகளை ஒருங்கே கொண்டது இந்த குப்பைமேனி. இப்படி பல நன்மைகள் கொண்ட இந்த இலையை, பொதுவாக டீ மற்றும் டானிக்கில் உபயோகப்படுத்துகின்றனர்.

நாட்டு மருந்து அல்லது மூலிகை கடைகளில் இதனை மாத்திரையாக காண முடியும். ஆனால் இது ஒரு பயனுள்ள வழி அல்ல. இதனை நேரடியாக உண்ணலாம். சாலட் போன்றவற்றில் சேர்த்தும் இதனை சாப்பிட முடியும்.

கூந்தலுக்கு குப்பைமேனியின் நன்மைகள்:
குப்பைமேனி, கூந்தல் பாதுகாப்பில் பயன்படக் காரணம், இது கூந்தலின் எண்ணெய்ப் பதத்தை அதிகரித்து தருகிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்றுகிறது. இதனால் உங்கள் கூந்தலின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாகின்றன.

இந்த செடியின் நன்மைகளைப் பற்றி அறிந்தவர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் சில இலைகளை சேர்த்து பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் தயாரிக்கும் பேஸ் மாஸ்க், டானிக் இன்னும் பலவற்றில் இதனை சேர்த்து தயாரித்து பயன்படுத்துவார்கள்.


1. கூந்தல் முடி உதிர்வைத் தடுக்கிறது:
குப்பைமேனியை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது, இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் வலிமை அடைகிறது. இதனால் முடி உதிர்வது அல்லது உடைவது தடுக்கப்படுகிறது.

2. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது:
தலை முடியில் எண்ணெய்பதத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான செயல். இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையும் கூட, ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. அதிகரித்த எண்ணெயப்பதத்தின் காரணத்தால் வெளியில் இருந்து தூசு மற்றும் இதர நச்சுகள் தலையில் குடியேறி விடுகின்றன. இதனால் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தலை முடியும் பிசுபிசுப்பாக மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக, குப்பைமேனி இலை, அதிகரித்த எண்ணெய்பதத்தை கட்டுப்படுத்துகிறது.

இது எப்படி சாத்தியப்படுகிறது?
உங்கள் கூந்தலில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்வதால் மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பை அதிகரிக்கும் கிருமிகளுடன் எதிர்த்து போராடுவதால் இது சாத்தியப்படுகிறது. 

3. கூந்தலை வலிமையாக்குகிறது:
மேலே கூறிய நன்மைகளால், கூந்தல் நல்ல முறையில் வலிமை அடைந்து வளர்ச்சி அடைகிறது. இதனால் தொடர்ந்து குப்பை மேனியை தலைக்கு பயன்படுத்தலாம். குப்பைமேனியில் ஊட்டசத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. அது மட்டுமில்லாமல், இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் ஆதாரமாக விளங்குகிறது.

கூந்தலை சுத்தம் செய்து, ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதால், கூந்தலின் அடர்த்தி அதிகரித்து கூந்தலின் தரமும் மேம்படுகிறது. இதனால் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஆகவே, குப்பைமேனியை கூந்தலுக்கு பயன்படுத்திய, ஒரு வாரத்திற்கு பிறகு, உங்கள் கூந்தல் முன்பை விட ஆரோக்கியமாக மாறி இருப்பதை காணலாம். ஒரு மாதத்திற்கு பிறகு மெலனின் அதிகரித்திருப்பதையும் உங்களால் உணர முடியும்.

குப்பைமேனியின் நன்மைகளை எப்படி பெறுவது?
கூந்தல் பாதுகாப்பில் இந்த செடியின் முழு நன்மைகளையும் பெற, குப்பைமேனி இலைகளைக் கொண்டு ஒரு தேநீர் தயாரிக்கலாம்.

200மிலி தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன், அதில் சில குப்பைமேனி இலைகளைப் போடவும்.

பின்பு அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.

5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

இந்த நீரை ஆறியவுடன் அப்படியே பருகலாம் அல்லது வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசியவுடன் இந்த நீரால் ஒரு முறை தலையை அலசலாம்.

இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடுத்த சில நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் இந்த இலைகளை ஸ்மூதி, ஸ்டூ, சாலட் போன்றவற்றிலும் சேர்த்து சுவைக்கலாம்.