கரும்புள்ளிகளை போக்கி முக அழகு பெற சில வழிகள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகத்தின் அழகு எப்படி தெரியும். களங்கமில்லாமல் இருக்கும்போது முகத்தின் அழகு தெரியும் .

கரும்புள்ளிகளை போக்கி முக அழகு பெற சில வழிகள்!

வடிவான முகத்தில் கண், மூக்கு, உதடு எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் அழகாக பொருந்தி இருக்கும்போது அங்கங்கே அந்த அழகை சிதைக்கும் வகையில் இருக்கும் கரும்புள்ளிகள் நிச்சயமாக வரவேற்க பட வேண்டியவை அல்ல. கண்ணாடியில் நமது முகத்தை நெருக்கமாக பார்க்கும்போது நமது பார்வையில் நெருடும்படி இருக்கும் இந்த கரும்புள்ளிகளை பார்க்கும்போது கிள்ளி எடுத்து விட தோன்றும். ஆனால் அப்படி செய்வது தவறு. இது மேலும் அவற்றை அதிகமாக்கும். 

உண்மையில் கரும்புள்ளிகள் என்பது என்ன ?
இவைகளும் பருக்கள் தான். மேல் புற தோல் இல்லாமல் வெளிப்புற காற்று மற்றும் தூசியால் அழுக்குகள் சேர்ந்து அடைத்து கொண்டு கருமை நிறத்தில் காட்சியளிக்கின்றன. இவற்றை போக்க, அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சரும துளைகள் அடைக்கப்படாமல் இருக்கும். இதனால் கரும்புள்ளிகள் ஏற்படாமல் இருக்கும். கரும்புள்ளிகள் இருப்பதால் 1 நல்ல விளைவும் ஒரு தீய விளைவும் உள்ளது. தீய விளைவு என்னவென்றால் உங்கள் சருமம் எண்ணெய் தன்மையோடு இருக்கும். சருமத்தின் துளைகள் மிகவும் பெரியதாக இருக்கும். நல்ல விளைவு என்னவென்றால் இத்தகைய பெரிய துளைகள் உள்ள எண்ணெய் பசை சருமத்தில் சுருக்கங்கள் எளிதில் தோன்றாது. ஆகவே வயது முதிர்வு தாமதமாகும். வயது முதிர்வு 40 வயதிற்கு மேல். வயது முதிர்வை போக்கும் சிகிச்சைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.  இன்று இருக்கும் அழகை காப்பது மட்டும் தான் இப்போது மிகவும் அவசியம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆகவே இந்த கரும்புள்ளிகளை அகற்ற இங்கு சில வழிகள் கூறப்படுகின்றன. இவற்றை முயற்சித்து இன்றைய முக அழகை பாராமரிக்க முடியும். 

ஜாதிக்காய் மற்றும் பால் ஸ்க்ரப் :
சருமத்தை தளர்த்தி கரும்புள்ளிகளை  அகற்ற ஜாதிக்காயை பயன்படுத்தலாம். ஜாதிக்காய், ஸ்க்ரபர் போல் செயல்பட்டு , சருமத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை நீக்கி கரும்புள்ளிகளை குறைகின்றது. சருமம் மென்மையாக மாறுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்குகிறது. பாலுக்கு பதில் மோரையும் பயன்படுத்தலாம். பாலை விட மோரில் லாக்டிக் அமிலம் அதிகமாக உள்ளது.
ஸ்க்ரப் என்பது ஒரு திட பொருளையும் ஒரு திரவ பொருளையும் சேர்த்து செய்யும் ஒரு பேஸ்ட். பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை போன்றவற்றையும் ஸ்க்ரப்களாக பயன்படுத்தலாம். மேலே கூறிய திட பொருளையும் திரவ பொருளையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்யவும். முகத்தை சுத்தமாக கழுவி, இந்த ஸ்கரப்பை தடவவும். சூழல் வடிவில் மசாஜ் செய்யவும். குறிப்பாக கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் நன்றாக அதே சமயம் மென்மையாக தடவவும். கடினமாக ஸ்க்ரப் செய்தால் சருமம் சேதமடையலாம். 5 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்தவுடன் முகத்தை கழுவவும்.

தேன்:
தேன் சிறிதளவு எடுத்து கைகளில் ஊற்றி கொள்ளவும். விரல்களால் முகத்தில் தேனை தடவவும். கரும்புள்ளிகள் இருக்கு இடத்தில் அதிகமாக தடவவும். சருமத்தில் உள்ள துளைகளில் இந்த தேன் நன்றாக ஒட்டிக் கொள்ளும். விரல்களால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் வெளியேறும். மறுபடி கரும்புள்ளிகள் ஏற்படாமல் இருக்கும். 3 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, முகத்தை நீரால் கழுவவும்.

முட்டை:
ஒரு முட்டையை எடுத்து உடைத்து வெள்ளை கருவை தனியே எடுத்துக் கொள்ளவும். ஒரு பிரஷ்  கொண்டு முட்டையை உங்கள் முகத்தில்  எல்லா இடத்திலும் தடவவும். மெலிதாக முதல் லேயரை தடவியவுடன் சிறிது காய்ந்த பின், அடுத்த லேயர் தடவவும். நன்றாக காய விடுங்கள். காய்ந்தவுடன் முகத்தில் ஒரு இறுக்கம் காணப்படும். 15 நிமிடம் கழித்து ஈர துணியால் முகத்தை துடைத்து பின்பு தண்ணீரால் முகத்தை கழுவவும்.

காஸ்மெட்டிக் க்ளே(Cosmetic  Clay):
கரும்புள்ளிகளை போக்க இந்த காஸ்மெட்டிக் க்ளே பெரிதும் உதவுகிறது. மூலிகை கடைகளில் இந்த காஸ்மெட்டிக் க்ளே கிடைக்கிறது. இதனை வாங்கி கொள்ளவும். 1 டேபிள் ஸ்பூன் காஸ்மெட்டிக் க்ளே மற்றும் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், இரண்டையும் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு எதாவது ஒரு எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். கரும்புள்ளிகளை போக்க காஸ்மெட்டிக்  க்ளே மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் மட்டுமே போதுமானது. இந்த கலவையை முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைத்து பின் தண்ணீரால் முகத்தை கழுவவும்.

கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்க சில வழிகள்:
1. கடினமான க்ளென்சர் கொண்டு முகத்தை கழுவ வேண்டாம். இதனால் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கிறது. கரும்புள்ளிகள் வேகமாக உற்பத்தியாகிறது.
2. தினமும் இரண்டு முறை இயற்கை பொருட்களை பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள்.
3. சிறிதளவு மட்டுமே மேக்கப்பை பயன்படுத்துங்கள்.
4. வாரத்திற்கு 1 முறை நீராவி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
5. முகத்தை கழுவியவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது ஹசல் பயன்படுத்துங்கள். பின்பு மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்துங்கள்.
6. டிஸ்யூ பேப்பர் கொண்டு அடிக்கடி முகத்தை துடைத்து கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் தன்மை முகத்தில் சேராது.

மேலே கூறிய குறிப்புகளை தொடர்ந்து செய்து வர கரும்புள்ளிகள் விரைவில் குறையும்.