வருகிறது லாக் அப் !

புதிதாக வரவிருக்கும் ரியாலிட்டி ஷோவின் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார் கங்கனா.

வருகிறது லாக் அப் !

எப்போதும் ஏதாவது செய்து டிரெண்டிங்லேயே இருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளார். அது எப்படியென்றால், புதுவகையான ரியாலிட்டி ஷோ ஒன்றில் அவர் ஹோஸ்ட்டாக பங்கேற்க உள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பிக் பாஸ் வரவிற்கு பின் புது புது பரிணாமங்களை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக வரவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கங்கனா, உடன் ஏக்தா கபூர் உடன் இணைந்திருக்கிறார். 'Lock Upp' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஷோ வேறு எந்த நிகழ்ச்சிகளையும் போல் இல்லாமல் புதுமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளார்கள்.

 

 

 

 

72 நாள்கள், 16 போட்டியாளர்கள் கொண்டு ஜெயில் போன்ற செட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சிறையில் இருக்கும் போட்டியாளர்கள் பல்வேறு சிக்கல்கள், தடங்கல்களைச் சமாளிக்க வேண்டும். இதில் கங்கனாவுக்கு போட்டியாளர்களைத் தக்க வைக்கவும் வெளியே அனுப்பவும் பாதி அதிகாரம் இருக்கிறதாம். இதைப்பற்றி ஏக்தா கபூர் தனது இன்ஸ்டாவில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.

 

பிப்ரவரி 27 முதல் MX Player மற்றும் ALT Balaji ஆகிய ஓடிடி தளங்களில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இதில் பங்கேற்பாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

 

 

இந்த நிகழ்ச்சி ஹிட்டடிக்கிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.