ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்

கீழே கூறிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக் குறிப்புகளை பின்பற்றுவதால் கடுமையான உடல் மற்றும் மன நலக் கோளாறுகளை தடுக்க முடியும்.

1. சரியான உணவை தேர்ந்தெடுங்கள் :
ஊட்டச்சத்து மிக்க உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகும். நீங்கள் உண்ணும் உணவில் அதிக நார்ச்சத்தும் குறைந்த கொழுப்பும் இருக்க வேண்டும். பொரித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பிரெஷ் சாலட், முளை விட்ட தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். ஆர்கானிக் பொருட்களை முடிந்த வரையில் பயன்படுத்துங்கள். வெள்ளை அரிசிக்கு மாற்றாக கைக்குத்தல் பழுப்பு அரிசி பயன்படுத்துங்கள். சுத்தீகரிக்கப்பட்ட மாவிற்கு மாற்றாக முழு கோதுமை மாவு , பிரவ்ன் பிரட், ஓட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. தண்ணீர் :
அதிகமான அளவு தண்ணீர் பருகுங்கள். இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியாகிறது . சுத்தமான மற்றும் கொதிக்க வைத்த நீரைப் பருகுங்கள்.

3. உடற்பயிற்சி :
ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை அரை மணி நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள். அருகில் இருக்கும் இடங்களுக்கு முடிந்த வரை நடந்து செல்லுங்கள். உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன நலம் அதிகரிக்கிறது.

4. புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்:
புதிய பொழுது போக்கு அல்லது உங்களுக்கு பிடித்த செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

5. யோகா மற்றும் தியானம்:
உங்கள் மன மற்றும் உடல் நலத்தை பேணிக் காப்பதில் யோகா ஒரு சிறந்த வழியாகும். சில வகை யோகாசனங்கள் உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். தியானம் செய்வதால் உங்கள் மனம் அமைதி கொள்ளும்.

6. சுத்தமான பழக்க வழக்கம்:
காபின், புகையிலை மது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

7. நேர்மறை எண்ணம்:
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நேர்மறை எண்ணம் மிகவும் அவசியம். மற்றவர்களை பற்றி எப்போதும் நேர்மறையாக மட்டுமே எண்ணுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணெங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு சேதம் உண்டாக்குகிறது. எதிர்மறை எண்ணம்  உள்ளவர்களை விட நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

8. நல்ல தூக்கம்:
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதே அளவிற்கு முக்கியமானது நல்ல தூக்கம். ஆழ்ந்த தூக்கம் மனதையும் உடலையும் புதுப்பிக்கிறது.