இதய மேலுறை அழற்சி

இதய மேலுறை அழற்சியைப் போக்க 6 மூலிகைகள்

இதய மேலுறை அழற்சி

இதயத்திற்கு பாதுகாப்பாக விளங்கும் இதய மேலுறையில் அழற்சி ஏற்படும் நிலையை இதய மேலுறை அழற்சி என்னும் பெரிகார்டிடிஸ் என்று கூறுவர். இந்த நிலை நீண்ட நாட்கள் இருக்கலாம் அல்லது குறைவான காலம் இருக்கலாம். இது மிதமான நிலையில் இருக்கும்போது, போதுமான ஓய்வு மற்றும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் விரைவில் இந்த பாதிப்பில் இருந்து வெளிவந்து விடலாம். இருப்பினும், இந்த நிலை மோசமடையும்போது, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நெஞ்சு பகுதியில் ஒரு கூர்மையான வலி ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறியாகும். வீக்கமுற்ற  இதய மேலுறை ஒன்றுடன் ஒன்று உராய்வதால் இந்த வலி ஏற்படுகிறது. மார்பு பகுதியில் ஏற்படும் ஒரு சிறு வலி, இந்த பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக உள்ளது , இந்த அறிகுறி நீண்ட  காலம் தென்படுமானால், இந்த நிலை ஒரு நாட்பட்ட நிலையாக கருதப்படுகிறது. மூச்சு குறைபாடு, இதய படபடப்பு, சோர்வு, அடிவயிறு வீக்கம், போன்றவை இதன் இதர அறிகுறிகளாகும். உண்மையில், இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதால், நீண்ட நாள் சிக்கல் மற்றும் அபாயம் குறைக்கப்படுகிறது, மேலும் இந்த பாதிப்பைப் போக்க சில மூலிகைகள் சிறந்த தீர்வைத் தருகின்றன.

இதய மேலுறை அழற்சியைப் போக்க 6 மூலிகைத் தீர்வுகள் :

1. பகுல் (Bugleweed):
தைராய்டு செயல் மிகைமை  மற்றும் இதய படபடப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மூலிகையை பயன்படுத்துவதால் சிறந்த நன்மை அடையலாம் . நரம்பியல் சார்ந்த சிகிச்சை, சிறுநீர் பிரிப்பு, நாள விரிவாக்கம் போன்ற பணிகளை செம்மையாக செய்ய இந்த மூலிகை உதவுகிறது. ஆகவே இதய மேலுறை அழற்சி, இதய உள்ளுறை அழற்சி போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் இது உதவுகிறது. இந்த மூலிகை காப்சியுல் மற்றும் டிஞ்சர் வடிவத்தில் கிடைக்கிறது. இருப்பினும், இதனை எந்த வடிவத்தில் எடுத்துக் கொளவதாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்னர் பயன்படுத்தவும். 

2. வைல்ட் இன்டிகோ (Wild Indigo):
இது ஒரு கிருமி எதிர்ப்பு மூலிகையாகும். உடலில் உள்ள நச்சுகளைப் போக்க இந்த மூலிகை பயன்படுகிறது. இந்த மூலிகை இதயத்தை சுத்தீகரிக்கும் நோயெதிர்ப்பு ஊக்கியாக செயல்பட்டு , இதய மேலுறை அழற்சியுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகை, காப்சியுல், டிஞ்சர், மாத்திரை போன்ற வடிவத்தில் கிடைக்கிறது. மூலிகை மருத்துவரிடம் ஆலோசித்து, அவர் அறிவுரைக்கேற்ப இந்த மூலிகையை பயன்படுத்தலாம். இந்த மூலிகையை அதிக அளவு பயன்படுத்துவதால் உடலின் விஷத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. மேலும் குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.

3. எக்கினேசியா (Echinacea):
இதய மேலுறை அழற்சியைப் போக்கும் மற்றொரு சிறப்பான மருந்து இந்த எக்கினேசியா. இந்த மூலிகை மிகவும் பயனுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மாத்திரை, டிஞ்சர், காப்சியுல் போன்ற வடிவங்களில் இந்த மூலிகை கிடைக்கிறது. இருப்பினும், மற்ற மருந்துகளுடன் இடைவினை புரியும் தன்மை இந்த மூலிகைக்கு உண்டு. ஆகவே, இந்த மூலிகையை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவரின் அறிவுரையைக் கேட்பது நல்லது.

4. ஹா த்ரான் (Hawthorn):
இதய நோய்க்கான சிகிச்சையில் பல ஆண்டுகளாக இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டு வருவதில் இருந்து இதன் சிறப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இதயத்தை பாதிக்கும் செயல்பாடுகளைக் குறைக்க ஹாத்ரான் உதவுகிறது. இதய செயலிழப்பு, இதய உள்ளுறை அழற்சி, இதய மேலுறை அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு இந்திய மூலிகை மருத்துவர்கள் இந்த மூலிகையை பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றனர். இந்த மூலிகையும் மற்ற மருந்துகளுடன் இடைவினை புரியும் வாய்ப்பு இருப்பதால், மருத்துவ ஆலோசனைப் பெற்று இந்த மூலிகையைப் பயன்படுத்தவும்.

5. பூண்டு (Garlic):
பூண்டு ஒரு அற்புதமான மூலிகை மருந்தாகும். இதன் அன்டி பயோடிக் பண்பு காரணமாக, பல்வேறு பக்டீரியா தொற்று பாதிப்பைப் போக்கி உடலுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய மேலுறை அழற்சி தொடர்புடைய அறிகுறிகள் நீக்கப்படுகின்றன. பூண்டு மாத்திரைகளும் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இதய மேலுறை அழற்சி தொடர்பான அறிகுறிகள் குறைவதில் சிறந்த உதவி புரிகின்றன.

6. மருதம்பட்டை( Arjuna Bark ):
மருதம் பட்டை இதய வலிமையூட்டியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைக்கு கட்டுப்படுத்தும் பண்பு இருப்பதால், இதய நோய்க்கு சிறந்த தீர்வாகப் பரிந்துரைக்கபப்டுகிறது. மேலும் பல்வேறு உடல் உபாதைகளான பேதி, வயிற்றுப்போக்கு, மூல நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. இதய தசைகள் செயல்பாடு அதிகரிக்க , இதயதின் இரத்த ஓட்ட செயல்பாடுகள் அதிகரிக்க மிகவும் பயனுள்ளது இந்த மூலிகைப் பட்டை . ட்ரைடர்பெனொயிட் சபோனின் , கால்சியம், மெக்னீசியம், தாமிரம், ஜின்க் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த சப்போனின் கூறுகள் இதய செயல்பாட்டை அதிகரிக்க முக்கிய பங்காற்றுகிறது. மருதம்பட்டை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், இதய மேலுறை அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. 3 கிராம் மருதம் பட்டை, 24 கிராம், நாட்டுச் சர்க்கரை  ஆகியவற்றை எடுத்து 200மிலி பசும்பாலில் போட்டு கொதிக்க விட்டு தேநீர் தயாரித்து பருகலாம். இதய மேலுறை அழற்சி, இதய உள்ளுறை அழற்சி, இதய வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு இந்த தேநீர் பெருமளவில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த தீர்வைத் தருகிறது.