கோவிட் 19 காலகட்டத்தில் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் ?

கொரோனா தொற்றுநோய் பரவி வரும் இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இந்த பதிவு.

கோவிட் 19 காலகட்டத்தில் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் ?

கொரோனா தொற்றுநோய் காரணமாக சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதனால் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவ கூடாது என்று இல்லை.  உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் நேர்மறை எண்ணத்துடன் இருக்க நீங்கள் அவர்களுக்கு உதவலாம் .

  • எதிர்மறை செய்திகளை பகிராமல்  இருக்கலாம் 
  • நேற்மறை மற்றும் நல்ல தாக்கத்தை  ஏற்படுத்தும் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களுடைய அழுத்தத்தை போக்கலாம் 
  • அலைபேசியில் அவர்களை  தொடர்பு கொண்டு பேசலாம். முடிந்தால் காணொளி காட்சி வழியாக அவர்களை பார்த்து பேசலாம் . 
  • உங்களுக்குத் தெரிந்த ஒருவர் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் பரிவுணர்வுடன் இருங்கள். அவர்களை “பாதிக்கப்பட்டவர்கள்” அல்லது ‘COVID-19 வழக்குகளில் ஒன்று’ என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். ஒரு நபரை ஒரு நோயுடன் தொடர்புபடுத்தாமல் இருப்பது கட்டாயமாகும். ஒருவருக்கொருவர் இரக்கத்துடன், ஆதரவாக இருப்பது முன்பை விட இப்போது மிக முக்கியமானது.