சளி இருமலுக்கான வீட்டு வைத்தியங்கள்

உடலில் உள்ள சுவாச குழாய் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் படியும் எதிர்வினைகளை சுத்தம் செய்வதற்கு உடல் பயன்படுத்தும் ஒரு இயங்குமுறை இருமல் எனப்படுவது ஆகும்.

சளி இருமலுக்கான வீட்டு வைத்தியங்கள்

இருமல் மூன்று வாரங்களுக்கு குறைவாக இருந்தால் இதனை குறுகிய கால அதாவது அக்யுட் இருமல் என்று கூறுகின்றனர். அதுவே, எட்டு வாரங்களுக்கு அதிகமாக இருந்தால் இதனை நாட்பட்ட அதாவது குரோனிக் இருமல் என்று கூறுகின்றனர். 

இருமல் பல வகைப்படும். சளி இருமல், வறட்டு இருமல், கக்குவான் இருமல் போன்றவை சில வகைகளாகும். ஒவ்வொரு வகை இருமலின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து அதன் சிகிச்சை மாறுபடுகிறது.

கபத்தை உற்பத்தி செய்யும் இருமல் வகை சளி இருமல் என்று அறியப்படுகிறது. உங்கள் உடலில் வழக்கத்திற்கு அதிகமான அளவில் சளி இருப்பதை இந்த வகை இருமல் உணர்த்துகிறது.

சளி இருமலுக்கான காரணம் மற்றும் அறிகுறிகள் :
 
சளி அல்லது காய்ச்சல் உண்டாகக் காரணமாக இருக்கும் நுண்ணுயிர்களான  பக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் தொற்று பாதிப்புகள் பெரும்பாலும், பெரியவர்களுக்கு ஏற்படும்  இந்த வகை குறுகிய கால இருமலுக்கு காரணமாக உள்ளன. 

மூச்சுக்குழாய் அழற்சி என்னும் ப்ரான்கைடிஸ் , நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய் (chronic obstructive pulmonary disease (COPD)), நீர்மத் திசுவளர்ச்சி என்னும் சிஸ்டிக் பைப்ரோசிஸ் , ஆஸ்துமா போன்ற சில ஆரோக்கிய குறைபாடுகளும் உடலில் அசாதாரணமான அளவு சளி உற்பத்தி ஆவதற்கு வேறு சில காரணங்களாகும்.

பெரும்பாலும், கைகுழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் இருமல் உண்டாக , வைரஸ் தொற்று பாதிப்பு அல்லது ஆஸ்துமா போன்றவை காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு சளி இருமல் உண்டாவதற்கு , அந்நிய பொருட்கள் நுகர்வது, சிகரெட் புகை  அலல்து இதர சுற்றுச்சூழல் சீர்குலைவுகளும் காரணமாக இருக்கலாம்.

பொதுவாக வறட்டு இருமலாகத் தொடங்கும் இந்த நிலை, மார்பு பகுதியில் ஒரு கடினத்தன்மையைத் தந்து, தொடர்ச்சியாக இந்த பாதிப்பு அதிகரித்து, சளியுடன் கூடிய இருமலாக மாற்றம் பெறுகிறது, உங்கள் மார்புப் பகுதியில் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு அல்லது உங்கள் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக் கொள்வது போன்ற உணர்வு உங்களுக்கு வெளிப்படும். 

மார்பு  சளி அடைப்பிற்கு உடனடி தீர்வாக மருத்துவர். ஜானெட் நேஷிவத் , எம்.டி அவர்கள் சில குறிப்புகளை வழங்குகிறார். அதில் அவர் கூறுவது, நீர்ச்சத்தோடு இருக்கலாம் , ஹ்யுமிடிபையர் பயன்படுத்தலாம் அல்லது சூடான நீரில் குளிக்கலாம் , இதன் ஆவி உங்களுக்கு நிவாரணம் தரலாம் என்று கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது, சூடான தேநீர் பருகுவது, (பெரியவர்கள் அதில் தேன் சேர்த்து பருகலாம்), தண்ணீர் கலந்து தயாரித்த ஆப்பிள் சிடர் வினிகர் பருகுவது (சளி மற்றும் கபத்தை உருக்கி வெளியேற்றும்), மார்புப் பகுதியில் சூடு ஒத்தடம் தருவது, போன்ற வழிகளும் மார்பில் சளி அடைப்பைப் போக்க சிறந்த தீர்வுகளாகும்.

இருமலின் போது அல்லது சுவாசிக்கும்போது விசில் போன்ற சத்தம்  (வீசிங்), மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது இறுக்கம் , காய்ச்சல் போன்றவை இருமலுடன் தொடர்புடைய பிற அடையாளம் மற்றும் அறிகுறிகளாகும்.

தொண்டை வறட்சி அல்லது சளியைத் தொடர்ந்து இருமல் வெளிப்படலாம் . பொதுவாகக் காலைப் பொழுதுகளில் இருமல் அதிகமாக இருக்கலாம். இதனால் உங்கள் வேலை மற்றும் தூக்கம் தடைபடலாம். உங்களை மட்டும் இல்லாமல் உங்கள் அருகில் இருப்பவர்களும் இருமல் மூலம் பாதிப்படையலாம்.

இருமலைத் தடுப்பது எப்படி?

இருமல் வருவதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், காய்ச்சல் அல்லது அடுத்த நிலை இருமல் உண்டாவதை ஓரளவுத் தடுக்க, சில வழிகளைப் பின்பற்றலாம். அதற்கான சில உதாரணங்கள் இதோ,

  . உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
  . நீங்கள் உடல் நலமில்லாமல் இருந்தால், வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்வதைத் தவிர்ப்பதால், தொற்று பரவுவதைத் தடுக்கலாம்.
  . உங்கள் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை மூடிக் கொண்டு தும்மலாம் அல்லது இருமலாம்.
  . திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டு நீர்ச்சத்தோடு இருக்கலாம்.
  . உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் பொது பயன்பாட்டு இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.
  . எப்போதும் சுத்தமாகக் கை கழுவுங்கள், குறிப்பாக, இருமியவுடன், சாப்பிட்டு முடித்தவுடன், கழிவறையை பயன்படுத்தியவுடன் மற்றும் உடல் நலம் குன்றியவரைக் கண்டு வந்தவுடன் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள்.
 . ஒவ்வாமைக் காரணமாக இருமல் ஏற்பட்டால், ஒவ்வாமைக்கான காரணத்தை அறிந்து, அதன் வெளிபாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மார்புச் சளி அடைப்பைத் தடுக்கும் ஒரு முக்கியப் பழக்கம், நீர்ச்சத்தோடு இருப்பது, என்று மருத்துவர். ஜானெட் நேஷியாவத் குறிப்பிடுகிறார்.

மருத்துவரை எப்போது காண வேண்டும்?
பொதுவாக, இருமல் சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும். இருப்பினும், சில நேரங்களில் மருத்துவ உதவி அவசியமாகிறது. கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைக் காணுவது அவசியம்.
சில நாட்கள் தொடர்ந்து இருமல் இருக்கும் காலத்தில், இருமல் சரியாவதை விடுத்து இன்னும் மோசமான நிலையை எட்டுவதை இந்த அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
 . சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது, சரியாக மூச்சு விட முடியாமல் இருப்பது.
 . இருமலின் போது இரத்தம் வெளிப்படுவது
 . இருமலுடன் சேர்த்து இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தோன்றுவது - குளிர், 101 டிகிரிக்கு அதிக  காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, சளியில் துர்நாற்றம், அடர்த்தியான, பச்சை மற்றும் மஞ்சள் நிற கபம் வெளிப்படுவது, சோர்வு மற்றும் பலவீனம். 
 . மூன்று வாரங்களுக்கு அதிகமாக இருமல் தொடர்வது
 . கழுத்துக்கு அருகில் உள்ள சுரப்பிகள் வீங்கி இருப்பது
 . மார்பு வலியை அனுபவிப்பது
 . எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் உடல் எடை குறைவது 
 
மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரைகள் பயன்படுத்தலாமா?
மருத்துவர்கள் பரிந்துரைக்காத மாத்திரைகள் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய நிவாரணம் பற்றியும் அதன் எதிர்ப்பைப் பற்றியும் குறிப்பிட்ட அளவிற்கு சான்றுகள் எதுவும் இல்லை. 
ஆனால், அதிர்ஷ்டவசமாக, இருமலைப் போக்கக் கூடிய சில இயற்கைத் தீர்வுகள் நம்மிடையே உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால், இருமலை உண்டாக்கும் காரணங்களுடன் போராடி, விரைவான நிவாரணம் கிடைக்கிறது. 

வீட்டிலேயே சளி இருமலைப் போக்க உதவும் சில இயற்கைத் தீர்வுகள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம். இதோ அந்த தீர்வுகள் உங்களுக்காக..

சளியைப் போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்:

1. உப்பு நீரில் கொப்பளிப்பது :
ஒரு நாளில் பல முறை உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், இருமலில் இருந்து குறிப்பிட்ட அளவு நிவாரணம் கிடைக்கிறது. சுவாச பாதையில் இருந்து சளியை அகற்ற உப்பு உதவுகிறது , அதே நேரத்தில் வெதுவெதுப்பான நீர், தொண்டையில் ஏற்பட்டுள்ள எரிச்சலைப் போக்க உதவுகிறது.

உப்பு அதன் அன்டிசெப்டிக் தன்மைக் காரணமாக, தொற்று பாதிப்புடன் போராடி, நோயை விரட்டி அடிக்கிறது.
 
 . கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் உப்பு எடுத்துக் கொள்ளவும்.
 . ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அந்த உப்பை சேர்த்து கலக்கவும்.
 . உப்பு கரையும் வரை கலந்து கொள்ளவும்.
 . இரண்டு முதல் மூன்று நிமிடம் தொடர்ச்சியாக தொண்டையில் இந்த நீரை ஊற்றி கொப்பளிக்கவும்.

2. நீராவி பிடிப்பது:
நீராவி பிடிப்பது, இருமலைப் போக்கும் மற்றொரு சிறந்த வழியாகும். இதனால் விரைந்து நிவாரணம் கிடைக்கும். சூடான ஆவியில் இருந்து வெளிவரும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் , சளியை உடைத்து, கரைக்கிறது. மேலும், துளசி இலைச் சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட நீரின் ஆவியை நுகர்வதால் விரைந்து நல்ல பலன் கிடைக்கும். சளியும் விரைவாக வெளியேறும்.
   . தண்ணீரை நன்றாக ஒரு அகன்ற பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.
  . 6-8 துளசி இலைகளை இந்த நீரில் சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
  . உங்கள் தலை மற்றும் முகத்தை மறைக்கும் படி ஒரு துண்டு அல்லது போர்வை போர்த்திக் கொண்டு, நீரில் உங்கள் முகம் படுமாறு குனிந்து கொள்ளவும்.
  . மெதுவாக அந்த நீரில் இருந்து வெளிப்படும் ஆவியை நுகரவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, வெளியில் விடவும்.
  . ஆழமாக சுவாசிக்கவும் .
  . ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றவும்.
  . சூடான நீரில் குளிக்கலாம். குளிக்கும்போது அந்த நீரில் இருந்து வெளிப்படும் ஆவியை நன்றாக சுவாசிக்கலாம். இருமல் குறையும்வரை  ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.

3. தேன் :
இருமலுக்கு சிறந்த மருந்தாக அனைவரும் அறிவது தேன்.
சளியின் அடர்த்தியைக் குறைக்க தேன் உதவுகிறது. மேலும் சுவாசப் பாதையில்  இருந்து சளியை வெளியேற்றவும் உதவுகிறது. தேனுக்கு கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது.

 . ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதியை எடுத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 . ஒரு ஸ்பூன் காய்ந்த தைம் இலைகள் அல்லது மூன்று ஸ்பூன் புதிதாக எடுத்த தைம் இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
 . இவற்றை ஒரு பேனில் போட்டு இவை மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.( இரண்டு கப் தேன் சேர்ப்பது நல்லது)
 . ஒரு மணி நேரம் கழித்து, வெங்காயம், மென்மையாக சாறு போல் ஆன பின் அடுப்பை விட்டு இறக்கவும்.
 . இந்த கலவையை ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி மூடவும். இந்த கலவையை பிர்ட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
 . குளிர் காலத்தில் சளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அல்லது மற்ற நேரங்களில் சளியில் இருந்து விடுபட, இந்த கலவையை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
 
குறிப்பு:
ஒரு வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல. தேன் சேர்ப்பதால் ,  போடுலிசம் (botulism) என்னும் உணவு நச்சாகும் தன்மை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது . 
 

4. இஞ்சி:
சளி இருமல் மற்றும் வறண்ட இருமல் போன்ற அனைத்து வகை இருமலுக்கும் ஏற்ற ஒரு மருந்து இஞ்சி. சளி நீக்க மருந்து என்ற கோணத்தில், இஞ்சி, சளியை மென்மையாக்கி , வெளிக்கொணர்கிறது. மேலும் இஞ்சி, சளியின் தீவிரம் மற்றும் கால அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் அழற்சி கட்டுப்படுகிறது. மேலும் இஞ்சிக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு இருப்பதால், விரைந்து நோயில் இருந்து உடலைத் தேற்றுகிறது.

 . ஒரு இன்ச் அளவு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
 . பிறகு அந்த துண்டுகளை நசுக்கிக் கொள்ளவும்.
 . ஒரு பாத்திரத்தில் இந்த மசித்த இஞ்சித் துண்டுகளைப் போட்டு, 11/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
 . நன்றாக கொதித்த பின், அடுப்பை சிம்மில் வைத்து அடுத்த 5 நிமிடம் வைக்கவும். 
 . பின்பு அந்த நீரை வடிகட்டி ஒரு நாளில் மூன்று முறை பருகவும்.
 . மற்றொரு வழி, ஒரு ஸ்பூன் புதிதாக அரைத்து எடுக்கப்பட்ட இஞ்சி சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை ஒரு நாளில் இரண்டு வேளைப் பருகவும்.
 . ஒரு நாள் முழுவதும் அடிக்கடி, சில இஞ்சி துண்டுகளை அப்படியே மென்று சாப்பிட்டு வரலாம்.
 

5. அதிமதுரம்:;
அதிமதுரம் ஒரு சிறந்த சளி நீக்க மருந்தாக செயல்படுகிறது. இதனால் இருமலின் அறிகுறிகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வறண்ட தொண்டையைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.

அதிமதுரம் மற்றும் அதன் முக்கிய சேர்மங்களில் உள்ள இருமல் அடக்கும் தன்மை மற்றும் சளி நீக்கும் குணம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது "பயோ ஆர்கானிக் & மெடிகல் கெமிஸ்ட்ரி" என்னும் ஒரு ஆய்வு. இது 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வாகும்.

 . ஒரு கப் வெந்நீரில் அரை ஸ்பூன் அதிமதுரம் வேர்களைச் சேர்க்கவும். பின்பு அந்த நீரை மூடி வைத்து, 10 நிமிடம் ஊற விடவும். பின்பு அந்த நீரை வடிகட்டவும். வடிகட்டிய நீரில் சிறிதளவு தேன் சேர்த்து, ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகி வரவும்.
 
 . இருமலைப் போக்க மற்றொரு வழி, அரை ஸ்பூன் அதிமதுரத் தூள் எடுத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் சுக்குத் தூள் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு கிளாஸ் வெந்நீரில் கலக்கவும். இந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருவகும்.
 
 . அதிமதுர மிட்டாயை சப்புவதன் மூலம் தொண்டை எரிச்சல் கட்டுப்படும்.

குறிப்பு:
உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், அதி மதுரம் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை.

 
6. பூண்டு:
மார்புச் சளியைக் கரைப்பதில் பூண்டு சிறந்த தீர்வைத் தரும் மற்றொரு உணவுப்பொருளாகும். இது இயற்கையான சளி நீக்க மருந்தாக செயல்படுகிறது. இருமலிளிருந்து விரைந்து நிவாரம் தர உதவுகிறது பூண்டு. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை, பக்டீரியா எதிர்ப்பு தன்மை, கிருமி எதிர்ப்பு தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், சீரான முறையில் தொற்று பாதிப்பைப் போக்கி இருமலைக் கட்டுப்படுத்துகிறது  பூண்டு.

 . ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை, சிறிதளவு தேனுடன் ஒரு பூண்டு பல்லை நசுக்கி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
 . ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் துருவிய பூண்டை சேர்த்து அந்த நீரைக் கொதிக்க விடவும். உங்கள் தலையில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு, இந்த நீரில் இருந்து வெளிவரும் ஆவியை நுகரலாம். ஆவி பிடிக்கும்போது மூக்கு வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியில் விடவும். கண்களை மூடிக் கொள்ளவும்.
 . ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெய் சேர்த்து லேசாக சூடாக்கி, மார்பில் தேய்க்கலாம்.
 

7. ஆப்பிள் சிடர் வினிகர் :
ஆப்பிள் சிட வினிகர் மற்றுமொரு சிறந்த தீர்வாகும்.
மார்பு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் சளியை மென்மையாக்கி வெளிக்கொணர்வதில் ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல பலன் தருகிறது. இதனால் இருமல் குறைந்து மூச்சு விடுவதில் உள்ள பாதிப்பு குறைகிறது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் இருமல் கட்டுப்படுகிறது.
 
 . ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். இந்த நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை, ஒரு வாரம் தொடர்ந்து இந்த நீரைப் பருகவும்.
 
 . அரை கப் வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகரை அரை கப் தண்ணீரில் சேர்க்கவும். இந்த கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உங்கள் தலையில் போர்வையை போர்த்தி, இந்த நீரில் இருந்து வெளிவரும் நீராவியை நுகரவும். ஆவி பிடிக்கும்போது மூக்கு வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியில் விடவும். கண்களை மூடிக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றவும்.
 
8. அன்னாசி பழச்சாறு, தேன், இஞ்சி, மிளகு மற்றும் உப்பு:
அன்னாசிப் பழச்சாற்றுடன், தேன், இஞ்சி, உப்பு, மற்றும் மிளகு தூள் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை பாரம்பரிய முறையில் இருமலைப் போக்க உதவுகிறது. மிளகு சளியை வெளியேற்ற உதவுகிறது, தேன் மற்றும் இஞ்சி, தொண்டைக்கு இதமளிக்க உதவுகிறது. இந்த கலவைக்கு அழற்சியை எதிர்க்கும் தன்மை உண்டு. இந்த கலவை தயார் செய்வதற்கு பின்வரும் முறையைப் பின்பற்றவும்.
 
 . ஒரு கப் அன்னாசிப் பழச்சாறு
 . ஒரு ஸ்பூன் மசித்த அல்லது துருவிய இஞ்சி
 . ஒரு ஸ்பூன் தேன்  
 . 1/4 ஸ்பூன் மிளகுத் தூள்
 . 1/2 ஸ்பூன் உப்பு 
 
 மேலே கூறியவற்றை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.
 இந்த கலவையை 1/4 கப் அளவிற்கு ஒரு நாளில் மூன்று முறை பருகி வரவும்.
 
குறிப்பு:
பச்சைத் தேனை ஒரு வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம்.