சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள்!

உலகின் சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

சூப்பர்  பவர் கொண்ட மனிதர்கள்!

கடவுள் எல்லோரையும் சமமாகத்தான் படைக்கிறார்.  ஆனால் சிலர் அவர்களின் படைப்பை  பெருமை படுத்த அவர்கள் திறமையை எதாவது ஒரு வகையில் அதிகரித்து  புகழ் பெறுகின்றனர். இதற்கு அவர்களின் விடாமுயற்சி, அதிக பயிற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை கை  கொடுக்கின்றன. அப்படி சில மனிதர்கள் உலகின் சூப்பர் பவர் கொண்டவர்களாக விளங்குகின்றனர். அவர்களை பற்றி இப்போது பார்ப்போம்.

விம் ஹோஃப்:
இவர் ஐஸ் மேன் என்று அழைக்கப்படுகிறார். இவரால் குளிர் காலத்தில் உடைகள் இல்லாமல் தொடர்ந்து 5 மணி நேரம்   ஓட முடியும். போலார் வெப்பநிலையை கூட இவர் உடல் தாங்குகிறது. இவை எல்லாம் அவருடைய மனதின் சக்தியால் தான் சாத்தியமாகிறது என்று கூறுகிறார்.

அல் ஹெர்பின் :
இந்த நாள் வரை “தூங்கா மனிதன்” என்ற புகழுக்கு உரியவர் இவர். தனது  94 வயது வரை அவர் தூங்கியதே இல்லை. இவர் பிறப்பதற்கு முன் இவரின் தாயார் அதிக அளவு இரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பென் அண்டர் வுட் :
இவருடைய  இரண்டு வயதில் கண்களில் புற்று நோய் தாக்கியிருப்பது  தெரிய வந்தது . 3 வயதில் இவரின் 2 கண்களும் அகற்றப்பட்டன. வௌவால்கள் இரவில் நடமாட பயன்படுத்தும் திறமையான, எதிரொலியை வைத்து இடத்தை அறிந்து கொள்ளுதலை இவரும் பெற்றுள்ளார். நாக்கின் ஒளியை ஏற்படுத்தி அருகில் இருக்கும் பொருட்களின் அதிர்வுகளை இவரால் உணர முடியும். 

கேசி கிரேவ்ஸ் :
இந்த பெண்ணின் மூச்சு காற்றில் தொடர்ந்து அழுகிய மீனின் வாசனை இருக்கும். இவரின் உடலிலும் மீனின் வாசனை தான் எப்போதும் இருக்கும். இந்த பாதிப்பிற்கு பெயர் ட்ரை மெத்தில் அமினுரியா . இது ஒரு அரிய வகை நோயாகும். இவரை எதிர்க்க வருபவர்கள்  ஓட்டம் பிடித்து விடுவர்.

க்ளாடியோ  பின்டோ:
விழி பள்ளத்திற்கு வெளியில் கண்களை விழிக்க வைப்பது என்பது ஒரு அசாதாரணமான செயல். இதில் இவர் உலகக சாதனை புரிந்திருக்கிறார். இவரால் 95% கண்ணை வெளியில் தள்ள முடியும். 

டேனியல் பிரவுனிங் ஸ்மித்:
இவர் “ரப்பர் பாய்” என்று அழைக்க படுகிறார். இவர் ஒரு அமெரிக்க நடிகர். இவரால் இவரின் உடலை 90 டிக்ரீக்கு அதிகமாக வளைக்க முடியும்.

டேனியல் டம்மெட் :
இவரால் அளவுக்கதிகமான வேகத்தில் மன கணக்குகளை போட முடியும். இவர் 7 மொழிகளில் புலமை வாய்ந்தவர். புதிய மொழிகளையும் தானாக வளர்த்து வருகிறார்  .

டேவ் முல்லின்ஸ் :
இவர் ஒரு நீச்சல் வீரர் ஆவார் .108 மீட்டர் ஆழத்திற்கு இவரால் எந்த ஒரு  சாதனத்தின் உதவியும் இல்லாமல் டைவ் அடிக்க முடியும். 244 மீட்டர் தூரத்தை 4 நிமிடம் 2 நொடிகளில் கடக்க முடியும்.

டீன் கர்னஸிஸ் :
இவர் மாரத்தான் ஓட்ட பயிற்சி வீரர். இவர் 2005ம் ஆண்டு 80 மணிநேரம் 44 நிமிடங்கள் தொடர்ந்து ஓடி 560கிமி தூரத்தை கடந்தார். இவருக்கு முன் யாரும் இந்த சாதனையை செய்ய வில்லை.
என்ன நேயர்களே! இவர்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்!