சூடான எண்ணெயால் மெனிக்யூர் செய்வதால் உண்டாகும் நன்மைகள்

சூடான எண்ணெய் மெனிக்யூர் என்றால் என்ன ?இந்த மெனிக்யூர் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தொடர்ந்து இந்த பதிவைப் படித்திடுங்கள்.

சூடான எண்ணெயால் மெனிக்யூர் செய்வதால் உண்டாகும் நன்மைகள்

நம்மை அழகாக வெளிகாட்டிக் கொள்ள அனைவரும் விரும்புவோம். குறிப்பாக அடுத்தவர் கண்களில் படும் நமது உடல் பாகங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் அதிகம். நமது கை விரல்கள் அனைவராலும் அதிகம் பார்க்கப்படுவதாகும். அத்தகைய கைகளில் உள்ள நகங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். கைகளின் நகங்கள் அழகாக , மென்மையாக சுத்தமாக இருக்க வேண்டும் என்ப்று விரும்புகிறீர்களா ? ஆம் என்றால் உங்களுக்கு சரியான தேர்வு, சூடான எண்ணெய் மெனிக்யூர் பல பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த மேனிக்யூர் முறை நல்ல பலனைத் தருவதாக செய்திகள் கிடைக்கின்றன.

பல காலங்களாக , சூடான எண்ணெய் மெனிக்யூர் என்பது மிகவும் விலை உயர்ந்த மற்றும் ஆடம்பரமான சிகிச்சை முறை ஆகும். இதை விட சிறந்த முறையில் உங்கள் நகங்களை வேறு எந்த சிகிச்சையாலும் பாதுகாக்க முடியாது.  இந்த சிகிச்சை உங்கள் நகம் மற்றும் நகக் கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக சேதமடைந்த நகக் கண்கள் உள்ளவர்களுக்கு இது சிறந்த பலனைத் தருகிறது. இது மட்டும் இல்லாமல், சூடான எண்ணெய் மெனிக்யூர் என்பது ஒரு கடினமான சிகிச்சையாகும். விலை உயர்ந்த ஸ்பாவில் மட்டுமே இதன் சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஆனால் உங்கள் பணத்தை இத்தகைய நிலையங்களில் செலவு செய்யாமல் வீட்டில் இருந்தபடி இந்த சூடான எண்ணெய் மெனிக்யூர் சிகிச்சையை எப்படி செய்வது என்பதை இந்த பதவில் காணலாம். 

சூடான எண்ணெய் மெனிக்யூர் செய்ய தேவையான பொருட்கள்: 
சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்
சிறிதளவு பாதாம் எண்ணெய்
வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்
டீ ட்ரீ எண்ணெய் 
வைட்டமின் ஈ மாத்திரை

செய்முறை :
1.  மேலே கூறிய எல்லா மூலப் பொருட்களையும் கலந்து மைக்ரோவேவில் வைத்து 30 நிமிடங்கள் சூடாக்கவும். 

2. இந்த கலவையுடன் வைட்டமின் ஈ மாத்திரையை உடைத்து சேர்க்கவும்.

3. எண்ணெய்யை சற்று நேரம் ஆற வைக்கவும். 

4. ஓரளவிற்கு ஆறியவுடன், இந்த எண்ணெய்க் கலவையில் உங்கள் நகங்களை மூழ்க வைக்கவும். முற்றிலும் எண்ணெய் குளிர்ச்சியாக மாறும்வரை இதனை செய்யவும்.
   
5. இந்த சுகமான உணர்வை மீண்டு பெற, மீண்டும் சற்று நேரம் இந்த எண்ணெய்யை சூடாக்கி, மறுபடி கைகளை நனைத்து வைக்கலாம்.

6. கைகளில் சிறிதளவு எண்ணெய்யை எடுத்து, முன்புறம் பின்புறம், உள்ளங்கை என்று எல்லா இடத்திலும் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

7. முழுவதும் மசாஜ் செய்தவுடன் சாதாரண நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.
 
8. சுத்தமான துண்டால் கைகளைத் துடைத்துக் கொள்ளுங்கள்.

9. இத்துடன் உங்கள் எண்ணெய் சிகிச்சை முடிவடைகிறது.

10. ஒரு வாரத்தில் இரண்டு முறை உறங்கச் செல்வதற்கு முன் இதனை முயற்சிக்கலாம்.

11. சிகிச்சைக்கு பிறகு கைகளில் மாயச்ச்சரைசர் தடவுவதை மறக்க வேண்டாம்.

சூடான எண்ணெய் மெனிக்யூர் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :
சூடான எண்ணெய் மெனிக்யூர் செய்வதால் உங்கள் நகங்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அவற்றுள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. உங்கள் கைகளை மசாஜ் செய்வதற்கு உண்மையில் அக்குப்ரேஷர் நுட்பத்தை நாம் பயன்படுத்துவதால், இரத்த ஓட்டம் மேம்படுகிறது, இதனால் சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

2. தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்வதால், நாளடைவில் உங்கள் சரும நோய்கள் நீங்குகின்றன.

3. சூடான எண்ணெய் மெனிக்யூர் , நகங்களை சுத்தமாக்கி, தளர்த்துகின்றது. மேலும் நகக் கண்களில் தோற்றத்தை நாளடைவில் மேம்படுத்துகிறது.
 
4. உடைந்த நகங்கள் எளிதில் இந்த செயல்முறையால் எளிதில் அகற்றப்படுகின்றன.

5. உங்கள் நகங்கள் அழுக்கில்லாமல் சுத்தமாக இருப்பதால் விரைந்து வலிமையாக மற்றும் வேகமாக வளர்கின்றன.
 
6. உங்கள் கை மூட்டு பகுதி மற்றும் கை விரல்களில் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது.

7. சூடான எண்ணெய் மேனிக்யூர் செய்வதால் நகங்கள் விரைந்து முதிர்ச்சி அடையாமல் தடுக்கப்படுகின்றன.

ஸ்பாவில் எண்ணெய் மெனிக்யூர் செய்துகொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. உங்களால் அந்த அளவிற்கு பணம் செலவு செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஸ்பா சென்று மெனிக்யூர் செய்து கொள்ளலாம். அழகு நிலையங்களில் செய்யப்படும் எண்ணெய் மேனிக்யூர் , பல்வேறு தொழில்சார் சேவைகளுடன் செய்யப்படுகின்றன. மேலும் பல பொருட்களைப் பயன்படுத்தி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எண்ணெய் சிகிச்சையுடன் சேர்த்து சுத்தம் செய்வதற்கான முறைகளும் உங்கள் தேர்விற்கு ஏற்றவாறு செய்து விடப்படும். 

இதற்கு முன் நீங்கள் எண்ணெய் மெனிக்யூர் செய்து இருகிறீர்களா? அழகு நிலையத்திலா அல்லது வீட்டிலா? உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம். உங்கள் பதிலை அறிய நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.