நல்ல ஆரோக்கியம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

நல்ல ஆரோக்கியம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நோய் மற்றும் இதர பலவீனம் இல்லாத உடல் மட்டுமின்றி உடல் நல, மன நல மற்றும் சமுதாய நலத்துடன் தொடர்புடையது தான் முழுமையான ஆரோக்கியம். ஒரு நாளின் நல்லதொரு தொடக்கத்தில் இருந்து அந்த நாளின் இறுதி வரை சிறந்த ஆதாராமாக விளங்குவது ஆரோக்கியம். உடல் செயல்பாடுகளின் நேர்மறை விளைவுகளைத் தரும் ஆற்றல் ஆரோக்கியத்திற்கு உண்டு.

ஒரு மனிதனின் சந்தோஷத்தின் ரகசியம் அவன் ஆரோக்கியம். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதால் அவர்களுக்கு சீரான உடல் மற்றும் மன வளர்ச்சி உண்டாகிறது. இதனால் அவர்களால் எந்த ஒரு துறையிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றி பெற முடிகிறது. பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அவர்களின் எடை, உயரம் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் அவர்களின் திறனை பரிசோதிப்பது நல்லது. முக்கியமாக பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பதால் அவ்ழ்ர்கள் குழந்தைகளுக்கு உதாரணமாக விளங்கி அவர்களையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

நல்ல ஆரோக்கியம் என்பது எளிதில் கிடைக்கக் கூடிய விஷயம் அல்ல, மேலும் அதனை பராமரிப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உடலுக்கு ஒழுக்கமான வாழ்க்கை முறை அவசியம். இதற்கு ஒரு சிறந்த வழி, நிறைய தண்ணீர் குடிப்பது. நிறைய தண்ணீர் பருகுவதால், தொற்று நீங்கி, உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் மாரடைப்பு குறித்த அபாயம் தவிர்க்கப்படுகிறது, உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படுகிறது, உடலின் வெப்ப நிலை சீராகிறது. ஆழ்ந்த தூக்கம் உடலை நெகிழ்த்தி அழுத்தத்தைப் போக்குகிறது. சமச்சீரான உணவு முறையை பின்பற்றி அளவான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி தான். நிறைய சிரிக்க வேண்டும். சிரிப்பு கூட ஆரோக்கிய வாழ்விற்கான ஒரு சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. 

அரசு சார்பில் பல சுகாதார முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். மேலும் சில ஆரோக்கிய சீர்கேடுகளை நாட்டை விட்டு ஒழிக்க முடியும்.