குழந்தைகளின் வாய்வு தொந்தரவை பற்றிய விளக்கமும் தீர்வும்

குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்படும்போது அவர்களுக்கு  அதை சொல்ல தெரியாது. அதனால் தொடர்ந்து அழுது கொன்டே இருப்பர்.

குழந்தைகளின் வாய்வு தொந்தரவை பற்றிய விளக்கமும் தீர்வும்

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வாய்வு தொல்லை ஏற்படும். பொதுவாக தாய்ப்பால் அல்லது  பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் காற்றை அதிகமாக உள்ளிழுக்கும் போது  வாய்வு தொல்லை ஏற்படலாம். செரிமான மண்டலம் சரியான வளர்ச்சியை எட்டாமல் இருப்பது தான் இதற்கு காரணம்.  பற்கள் முளைக்கும்போது சில குழந்தைகளுக்கு இந்த தொந்தரவு ஏற்படும். இதனை அறிந்து சரி செய்ய வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்ட தீர்வுகளை  இந்த பதிவில் கூறி இருக்கிறோம். படித்து பயனடையுங்கள்.

குழந்தைகளுக்கு வாய்வு தொந்தரவு இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?
* எவ்வளவோ சமாதானத்திற்கு பிறகும் குழந்தைகள் அழுது கொன்டே இருப்பார்கள். 
* கால்களை மேல் நோக்கி வைத்துக்கொண்டு அழுவார்கள்.
* பால் குடித்தவுடன் அழுவார்கள்.
* வயிற்று பகுதி மிகவும் கடினமாக இருக்கும்.

வாய்வு தொந்தரவு ஏற்பட காரணம்:
குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்பட சில காரணங்கள் உண்டு. அவை,
* குழந்தைகள் நாள் முழுதும் உணவு அருந்திக் கொன்டே இருப்பதால் குடல் அதிக அளவு வாயுவை உற்பத்தி செய்கிறது
* தாய் வாய்வு தொல்லை தரும் உணவுகளை உண்ணும் போது , தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்படும் .
* குழந்தைகள் அழும் போது காற்றை விழுங்குவதாலும் வாய்வு தொந்தரவு ஏற்படும். 
* உடலில் இருக்கும் இயற்கை சர்க்கரையகிய  பிருக்டோஸ் , லாக்டோஸ் , ராபினோஸ், சோர்பிட்டால்  போன்றவை ஜீரணிக்காத  போது இவை குடலை நோக்கி செல்லும். குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

வாய்வு தொந்தரவை எப்படி தடுப்பது?
* குழந்தைக்கு பால் புகட்டும் போது  தலை பக்கம் மேடாகவும் , வயிற்று பகுதி கீழாகவும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இதனால் வாய்வு வயிற்றில் தங்காமல் இருக்கும். 
* பாட்டிலில் பால் கொடுக்கும் போது சிறிய துளை உள்ள பாட்டிலாக இருக்க வேண்டும். பெரிய துளையாக இருக்கும் போது பாலுடன் அதிகமான காற்றும் உள்ளெ செல்வதால் வாய்வு ஏற்படலாம்.
* ஒவ்வொரு முறையும் பால் குடித்த பிறகு ஏப்பம் வர வேண்டும் .

குழந்தைகளின் வாய்வு தொந்தரவுக்கு வீட்டு வைத்தியம்:

ஏப்பம் :
தாய் பால் குடிக்கும் குழந்தைகள் பால் குடித்த பிறகு உடனே படுக்க வைக்க கூடாது. அவர்களை தாய்மார்கள் தோளில் போட்டு முதுகில் தட்டி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஏப்பம் வெளி வரும். இதனை செய்யும் போது  வாய்வு தொந்தரவு ஏற்படாது.

குழந்தைகளின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் செய்வது:
குழந்தைகளின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாய்வு வெளியேறும் , வலிகளும் குறையும். இதனை பாடி கொன்டே அல்லது விளையாடி கொன்டே செய்யும் போது குழந்தைகளும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

கடுகு எண்ணெய்  கொண்டு மசாஜ் செய்வது:
வெதுவெதுப்பான கடுகு  எண்ணெய் கொண்டு தினமும் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது நல்லது. இந்த மசாஜ், செரிமான மண்டலத்தை சீராக்குவதுடன், எலும்புகளை பலமாக்கும், சருமத்தை பொலிவாக்கும் மற்றும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.

வெந்நீர் ஒத்தடம்:
ஒரு காட்டன் துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நன்றாக பிழிந்தபின், அந்த துண்டை குழந்தையின் வயிற்றில் போடலாம். வயிற்றில் போடுவதற்கு முன் துண்டின் சூட்டை பரிசோதிக்கவும் . இதனால் வாய்வு தொந்தரவு குறைந்து குழந்தை சமாதானமாகும்.

ஓமம் நீர் :
கொதிக்கும் நீரில் சிறிது ஓமத்தை தூவி சிறிது நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி குழந்தைகளுக்கு சிறிய இடைவெளியில் கொடுத்து வரவும். 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதனை செய்யலாம்.

இஞ்சி:
குழந்தைகள் சாப்பிடும் உணவில் ஒரு சிறிய அளவு இஞ்சி சேர்ப்பது அவர்கள் செரிமானத்தை எளிதாக்கும். வயிற்றில் உண்டாகும் வாயுவை அது கலைத்து விடும். 8 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை செய்யலாம்.

சீரகம்:
தண்ணீரில் ½ ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை தொடர்ந்து சில இடைவெளியில் கொடுத்து வருவதால் வாய்வு தொல்லை நீங்கும்.  சீரகத்தில் உள்ள தைமோல் என்னும் கூறு, செரிமான என்சைம்களை  உற்பத்தி செய்ய கணையத்தை ஊக்குவிக்கும்.

ஏலக்காய் :
ஏலக்காயில் பொட்டாசியம் , கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. ஏலக்காய் வயிற்றில் உள்ள காற்றை குறைத்து செரிமானத்தை வேகப்படுத்துகிறது. இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது. ஒரு சிறிய  அளவு ஏலக்காயை உணவில் சேர்ப்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் நல்லது.

பெருங்காயம்:
ஒரு சிட்டிகை பெருங்காயத்தை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து குழந்தையின் தொப்புளிள் தடவவும். இது வாய்வு தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்து. 1 வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் உணவில் பெருங்காயத்தை கலந்து கொடுக்கலாம்.

குழந்தைகளின் வாய்வு பிரச்சனை தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொண்டீர்களா. இந்த எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றி குழந்தைகளை வாய்வு தொந்தரவிலிருந்து மீட்போம்.