மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள் :

மதம் மற்றும் ஆன்மிகம், இரண்டிற்கும் இடையில் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன ? 

மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள் :

நான் ஒரு ஆன்மீகவாதி, ஆனால் மத ஈடுபாடு கொண்டவன் அல்ல, என்று யாராவது சொன்னால், அதனை கேட்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும். ஆன்மீக சிந்தனையை மக்கள் விநோதமாகவும் மர்மமானதாகவும் பார்க்கின்றனர். பலர் மதத்திற்கும் ஆன்மீக சிந்தனைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள போராடுகிறார்கள். ஏனென்றால், நவீன காலத்தில் மக்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லாவற்றிலும் பயம் கொள்கிறார்கள். கண்ணால் காண முடியாத ஒரு பொருள் அல்லது விஷயத்தின் மீது அவர்களுக்கு போதிய ஞானம் இருப்பதில்லை. 

உண்மை என்ன வென்றால், ஆன்மீகம் என்பது இயல்பான ஒரு சிந்தனை தான்.  நீங்கள் என்பது உங்கள் உடல் மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு எல்லையற்ற ஆற்றல் கொண்ட ஒரு ஆன்மா என்பதை நீங்களே உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம். 

மதத்திற்கும் ஆன்மீக சிந்தனைக்கும் 6 முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. 

நான் இங்கு விளக்க முயற்சிப்பதை எளிமையாக்குவதற்கு, மதம் மற்றும் ஆன்மீகத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை முன்னிலைப்படுத்த உதவும் ஒரு சிறிய பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

1. ஆன்மீகத்திற்கு விதிகள் கிடையாது :

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அல்லது விதிகளை பின்பற்றுவதை ஆன்மிகம் எதிர்க்கிறது. மாறாக, உங்கள் உள்ளுணர்வைக் கேட்கவும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் சரியானதைச் செய்யும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறது. உங்களை சுதந்திரமாக இருக்க வைத்து, உங்களுக்குள் உள்ள சிறந்ததை வெளிப்படுத்த உதவுகிறது. உங்களை நல்ல மனிதாக மாற்றுகிறது. உங்களுக்கு எந்த ஒரு தண்டனையையும், வெகுமதியையும் ஆன்மிகம் வழங்குவதில்லை. உங்கள் மன மகிழ்ச்சியே உங்களுக்கான வெகுமதியாகும். 

ஆன்மிகம் அன்பை அடிப்படையாகக் கொண்டது, பயத்தை அல்ல :
மத போதனைகள் முழுவதும் பயத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உங்கள் செயல்களின் விளைவுகளைப் பற்றிய பயம், மத போதனையில் சொல்லப்பட்ட விதத்தில் உங்கள் வாழ்கையை வாழாமல் இருந்தால், இறப்பிற்கு பின் என்ன நடக்கும் என்பதை பற்றிய பயம் என்று எல்லாவற்றிலும் பயம் சூழ்ந்து உள்ளது. ஆனால், ஆன்மீகத்தில் அன்பு மட்டுமே உள்ளது. நல்ல விஷயங்களில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க உங்களை அஆன்மீகம் உற்சாகப்படுத்துகிறது. அன்பின் அடிப்படையிலேயே உங்கள் செயலாற்றல்கள் இருக்கும்படி செய்கிறது. பயத்தினால் செய்யப்படும் எந்த ஒரு தேர்வும் , ஆன்மாவிற்கு நன்மையானதாக இருக்க முடியாது என்பது என் முக்கியமான நம்பிக்கை. அதுவே, அன்பால் எடுக்கப்படும் முடிவுகள், நம் ஆன்மாவை வலிமையாக்கும் மற்றும் தைரியத்தை தரும். ஆன்மிகம், பயம் இன்றி உலகில் எழுந்து நிற்க கற்று தருகிறது, விளைவுகளை பற்றி கவலைபடாமல், உங்களுக்கு சரியென்று தோன்றிய காரியத்தை செய்வதை நோக்கி உங்களை முன்னேறிச் செல்ல வைக்கிறது.

மதம் உண்மையை சொல்கிறது - ஆன்மிகம் உங்களை கண்டுபிடிக்க வைக்கிறது :
இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது, நீங்கள் இங்கு எப்படி வந்தீர்கள் என்ற கேள்விகளுக்கு கருப்பு வெள்ளை படங்கள் மூலம் ஒரு விளக்கத்தை உங்களுக்கு கொடுப்பது மதம், ஆனால் ஆன்மிகம் என்பது இந்த கேள்விகளை உங்களுக்குள் தோன்ற செய்து, இதற்கான விடையையும் உங்களை தேட வைக்கிறது. எல்லாவற்றிலும் உங்களுக்கு தேவைப்படும் உண்மையை உங்களையே தேட வைக்கிறது. இவற்றை அறிந்து கொள்ள எந்த ஒரு ஆழத்திற்கும் செல்லலாம், ஆன்மீகம் இதற்கான எந்த ஒரு அளவையும் நிர்ணயிக்கவில்லை. 

மதம் பிரிக்கிறது, ஆன்மிகம் இணைக்கிறது :
நம்முடைய இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதமும் தங்கள் கதைகளை மட்டுமே உண்மையானது என்று போதித்து வருகின்றன. ஆன்மிகம் எல்லோரிடத்திலும்  உள்ள உண்மையை பார்க்கிறது. மதத்தால் வேறுபட்டு, தனித்தன்மை கொண்டவர்களும் உண்மை என்ற மந்திரத்தால் ஒன்று சேர்கின்றனர். 
ஆன்மிகம் என்பது ஒவ்வொரு மதத்தில் உள்ள வெவ்வேறு கதைகளில் கவனம் செலுத்தாமல், அவற்றில் உள்ள தெய்வீக செய்தியை மட்டும் பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறது.

கர்மாவிற்கும் தண்டனைக்கும் உள்ள வித்தியாசம் :
நரகத்திற்கு செல்வது, தண்டனை பெறுவது என்பது பற்றியெல்லாம் பேசாமல், ஆன்மிகம் கர்மாவை பற்றி பேசுகிறது. இது ஒரு ஈர்க்கும்  சட்டம் ஆகும் - நீ எதை கொடுத்தாயோ, அதுவே உனக்கு கிடைக்கும் என்பதே இதன் கோட்பாடாகும்..

உங்கள் பாதையில் செல்லுங்கள் :
கடவுள், தேவதை என்று பழங்கதைகளை கூறிக்கொண்டே இருக்காமல், ஆன்மிகம், உங்களுக்கான பாதையில் நடக்க உங்களை உற்சாகப்படுத்துகிறது. இதன்மூலம் உங்களுக்கான கதைகள் உருவாகலாம். உங்களால் மட்டுமே வரம்புகள் அமைக்கப்படக்கூடிய ஞானம் மற்றும் சுய கண்டுபிடிப்பின் ஒரு பயணத்தில் உங்களை பயணிக்க வைக்கிறது..

இது உங்கள் இதயத்தை நம்புவதற்கு உங்களை உற்சாகப்படுத்துகிறது. இதயம் கூட்டிச் செல்ும் பாதையில் உங்களை பின்தொடர வைக்கிறது. ஆழமான ஆன்மீகத்தின் கிளைகள் தான் மதங்கள். உதாரணத்திற்கு , இயேசு, நபிகள் நாயகம் போன்ற அனைவருக்கும் ஒரு ஆழமான ஆன்மீக பயணம் இருந்திருக்கிறது. அதன் பிறகு தான் அவர்கள் சுய பாதைகளை உருவாக்கினர். 

எல்லா மதங்களுக்கும் அவற்றிற்கான உண்மைகள் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. மத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அழகான ஆன்மா இருக்கலாம் , அதில் எந்த ஒரு தவறும் இல்லை. அதே சமயம், பிரிவினை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலும் ஆன்மாவிற்கு நல்லது அல்ல, மேலும் மனித இனத்திற்கும் இத்தகைய போக்கு  எந்த ஒரு நன்மையையும் ஏற்படுத்தாது.

ஆன்மிகம் என்பது நாம் தனித்தனி இல்லை, எந்த எல்லைகளும் இல்லை, எந்த இனமும் இல்லை, கலாச்சாரப் பிரிவினைகளும் இல்லை என்று நமக்கு நினைவூட்டுகிறது,