தேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :

பல ஆண்டுகளாக நாம் தேங்காய் மற்றும் அதன் நீரை சுவைத்து வருகிறோம். ஒரு தேங்காயில் 200மில்லி முதல் 1000 மில்லி நீர் இருக்கும்.

தேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :

தேங்காய் நீர் சுவை அனைவரையும் ஈர்க்கும். இது ஒரு இயற்கையான பானம். இதன் கலோரிகள் மிகக்குறைவு.இதனை அருந்துவதால் உடலிபுத்துணர்ச்சி அடைகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.

தேங்காய் நீர் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி.அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களைக் கொண்டிருக்கும்.

கோடை வெயிலில் மற்ற இரசாயன குளிர்பானங்களை அல்லது பதப்படுத்தப்பட்ட  பழ சாறுகளை  குடிப்பதை காட்டிலும் தேங்காய் நீர் மிகச் சிறந்தது. கர்ப்பிணிகள்  கூட  இதை  தினமும்  பருகலாம் . மருத்துவர் இதை அருந்த கூடாது என்று கூறும்பட்சத்தில் இதனை தவிர்ப்பது நல்லது. 

தேங்காய் நீர் அருந்துவதால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

பாஸ்பேடாஸ், டையஸ்டேஸ், மற்றும் இதர என்சைம்கள்  போலிக் அமிலம் போன்றவை இந்த நீரில் இருக்கின்றது. ஆகையால் உணவு செரிமாணத்திற்கு இது உகந்தது. வயிற்று போக்கு, காலரா போன்ற நோயின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வறட்சிக்கு தேங்காய் நீர் ஒரு சிறந்த உடனடி மாற்று. உடலில் இழந்த எலக்ட்ரோலைட் மற்றும் பிளாஸ்மா இருப்புகளை உடனடியாக மீட்கிறது. இதன் மூலம் உடல் நிலை  சமன் அடைகிறது.

சைட்டோக்கின்ஸ் மற்றும் லாரிக் அமிலம் ஆகிய இரண்டிற்கும் வயது மூப்பை தடுக்கும் குணங்கள் உள்ளது. இவை சருமத்தின்  pH நிலையை சமன் செய்கிறது. தேங்காய் நீரில் சைட்டோக்கின்ஸ் மற்றும் லாரிக் அமிலம் அதிக அளவில் இருக்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு  தருகிறது. தேங்காய் நீரில்  அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

மனச்சோர்வு :
ரிப்போபளாவின்,  பதோஜெனிக் அமிலம் , தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை  குறைக்கும். இந்த முக்கிய வைட்டமின்களால் தேங்காய் நீர் நமது மனநிலையை உடனடியாக மாற்றும்.

எடை மேலாண்மை:
தேங்காய் நீர் ஒரு குறைந்த கலோரி பானம் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை தாராளமாக பருகலாம். இதன் மூலம் அதிக எடை இழப்பு சாத்தியமாகும். 

ஆரோக்கியமான எலும்புகள்:
தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் உங்களது எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சிறுநீரக கற்கள் :
இயற்கையான முறையில் சிறுநீரக கற்களை அகற்றுவது என்பது ஒரு சிறந்த முறை. தேங்காய் நீரில் அதிகமான அளவு பொட்டாசியம் உள்ளது. அதனால் இந்த நீரை பருகுவதால், சிறுநீரக கற்கள் கரைந்து விடுகின்றன. மேலும் மறுமுறை புதிய கற்கள் சேராமலும் இருப்பதையும் உறுதி செய்கின்றன.

ஆரோக்கியமான இரத்த அழுத்தம்:
உயர்ந்த இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் ஒரு வர பிரசாதம். பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் சியும்  இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன . ஒற்றை தலை வலி உள்ளவர்களுக்கும் இது மிக சிறந்த பலனை கொடுக்கின்றது.

தசை பிடிப்பு:
பொட்டாசியம் சத்து நிறைந்த தேங்காய் நீரால் தசை பிடிப்புகள் ஏற்படுவது  குறைகிறது.

தலை முடி வளர்ச்சி:
நீண்ட ஆரோக்கியமான கூந்தல் என்பது வெறும் கனவாக மட்டும் இல்லாமல் கூந்தல் செழித்து வளர தேங்காய் நீர் அதிகம் நன்மை செய்கிறது. உச்சந்தலையை குளிர்வித்து கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. 

நீரிழிவு:
தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை பயன் படுத்தி பலன் அடையலாம்.