தமனிகளின் அடைப்பை குறைக்க உதவும் உணவுகள்

40 வயதிற்கு மேல் பலருக்கும் அபாயகரமான இதய நோய்கள் வருவது சாதாரணமாக இருக்கிறது. 

தமனிகளின் அடைப்பை குறைக்க உதவும் உணவுகள்

ஆரோக்கியமான உடலுக்கும் வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான இதய அமைப்பு தேவை. இன்றைய அமைதியற்ற வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவு பழக்கத்தால் பலரும் இதய பாதிப்பை அடைகின்றனர். 

தமனிகளின் அடைப்பு :
தமனிகளில் அடைப்பு என்பது இதய நோயின் காரணம் என்று பலரும் கூறுகின்றனர். இதற்கும் நமது உணவு பழக்கத்திற்கும் சம்மந்தம் உண்டு. இரத்தத்தில்  அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் உண்டாகும்போது அவை தமனிகளில் தான் சேருகின்றன, இதனால் தமனி குறுகி இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது தமனிகளின் சுவர்கள் முற்றிலும் அடைக்கப்பட்டு, இதயத்திற்கு பாதிப்பை தருகின்றன. தமனிகளின் அடைப்பை சரிசெய்யும் உணவுகள் பற்றிய விளக்கங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காய்கறிகள்:
அதிக கொலஸ்ட்ரால் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருக்கும்போது காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வது அவசியம். காய்கறிகளில் அதிகமான வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. இவை இயற்கையான முறையில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகின்றன. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட  கொலஸ்ட்ராலை உறிஞ்சி மலத்தின் வழியே வெளியேற்றுகின்றன.
தக்காளி, குடை மிளகாய், கேரட் , போன்றவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் தமனி மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. பச்சை காய்கறிகள் மற்றும் பல வண்ண காய்கறிகள் தமணியின் அடைப்பை தடுக்கும்.

பழங்கள் :
பழங்களும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்துகள் நிரப்ப பட்டவைகள்  தான். இவை இதய  ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாகும். ஒவ்வொரு பழத்திலும் இருக்கும் வெவேறு ஊட்டச்சத்துகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் . இதனால் தமனியின்  ஆரோக்கியம் அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் பெக்டின் எனும் கூறு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது மற்றும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. தமனியில் சுவர்கள் இந்த பழத்தால் வலிமையாகின்றன.

இஞ்சி மற்றும்  பூண்டு:
இஞ்சி மற்றும் பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, தமனிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தமனிகளின் அடைப்பிற்கு முக்கிய காரணமான வீக்கத்தை, இஞ்சி குறைக்கிறது. 

முழு தானியங்கள்:
சுத்தீகரிக்கப்பட்ட மாவு பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் முழு தானியங்களை பயன்படுத்துவது இதயத்திற்கு சிறந்ததாகும் . கோதுமை, பார்லி, ராகி, கம்பு, சோளம் போன்றவை பரவலாக கிடைக்கும் தானியங்கள் ஆகும். இவற்றை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை உணருவீர்கள்.

மசாலா பொருட்கள்:
நமது தினசரி உஙவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் இதை ஆரோக்கியத்திற்கான கூறுகள் உண்டு என்பதை  யாரும் உணர்வதில்லை. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற கூறு கெட்ட கொலஸ்ட்ராலை 
எதிர்க்கிறது. ட்ரிகிளிசெரைடு என்ற கூறை குறைக்கிறது. இது இதய நோய்க்கு ஒரு காரணியாகும். லவங்க பட்டை தமனி அடைப்பை தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இன்று பலரும் உட்கார்ந்த நிலையில் வேலை பார்க்கும் சூழ்நிலை  இருக்கிறது. இதுவும் உடலில் கொலஸ்ட்ரால் சேருவதற்கான காரணமாகும். இதய ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தமனி மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.