நுனி முடியின் வெடிப்புகளை மறைக்க சில வழிகள்!

முடியில் வெடிப்புகள் எதனால் ஏற்படுகிறது, அதனை போக்க என்ன வழிகள் உள்ளன போன்றவற்றிக்கான விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.

நுனி முடியின் வெடிப்புகளை மறைக்க சில வழிகள்!

தலை முடி பராமரிப்பில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றும். இளநரை, வழுக்கை, முடி உதிர்தல், முடியின் இயற்கை நிறம் மாறுதல் மற்றும் முடியின் அடிப்பகுதியில் வெடிப்புகள் தோன்றுதல். முக்கியமாக முடியில் வெடிப்புகள் தோன்றும்போது அதன் வளர்ச்சி தடைபடுகிறது. ஆகவே இதனை பற்றிய விளக்கத்தை கொடுக்க தான் இந்த பதிவு. 

முடியில் வெடிப்புகள் ஏற்படுவது எப்படி?
முடியின் நுனி வறண்டு தேய்ந்து போகும்போது உடைய நேரிடும். இது ஒரு கயிறு போன்ற தோற்றத்தை தரும். வானிலையில் தீவிர மாற்றம் ஏற்படும்போது , அதிகமாக ட்ரயர் பயன்படுத்தும்போது , முடியை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்யும்போது, கர்லிங் செய்யும்போது வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வேதி பொருட்கள் கலந்த பொருட்களை தலை பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது இவை ஏற்படலாம். பெரும்பாலான மக்கள் இந்த முடி வெடிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

நுனி முடியில் வெடிப்புகள் ஏற்படும்போது அதனை சரி செய்ய முடியாது. மாறாக அந்த பகுதியை வெட்டுவதுதான் ஒரே தீர்வு. 

கேண்டில் கட்டிங் (Candle Cutting ):
சமீபமாக ஒரு புதிய ட்ரெண்ட் பின்பற்ற படுகிறது. அதன் பெயர்  கேண்டில் கட்டிங் (Candle Cutting ). சூப்பர் மாடல் அலெசான்ட்ரா அம்ப்ரோசியோ இன்ஸ்டாக்ராமில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவருடைய ஸ்டைலிஸ்ட் அவர் கூந்தலின் அடியில் மெழுகுவர்த்தி ஒன்றை பிடித்திருப்பது போன்ற ஒரு படமாகும்.

தலை முடியின் நுனியை திருப்பி அதில் பாதி அளவை மெழுகுவர்த்தியின் நெருப்பில் காட்ட வேண்டும். இப்படி அந்த நுனி முடியை எரிப்பதால் , வெடிப்புகள் மறைந்து , மெழுகுவர்த்தியின் மெழுகால் சீல் செய்யப்படுகிறது . மேலும் அதே இடத்தில்  வெடிப்புகள் தோன்றாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும் பல தலை முடி சிகிச்சை நிபுணர்கள், இந்த முறையை பயன்படுத்துவதால் மேலும் வெடிப்புகள் அதிகமாகும் மற்றும் முடியின் வேர்க்கால்கள் சேதமடையும் என்று கூறுகின்றனர்.

வெடிப்புகளை மறைப்பது:
* ஹேர் மாஸ்க்குகள் வெடிப்புகளை குறைப்பதாக கூறி சந்தையில் விற்கப்படுகின்றன. அவை முடிக்கு ஈரப்பதத்தை தருகின்றன. முடியின் நுனியில் இருக்கும் வெடிப்புகள் மறைக்கப்படுகின்றன. இதனால் இன்னும் அதிக வெடிப்புகள் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை .
* லீவ் இன்  கண்டிஷனரை, சுத்தமான, ஈரமில்லாத, காய்ந்த முடியில் பயன்படுத்தலாம். முடியை சில பகுதிகளாக பிரித்து கொண்டு இதனை தடவும்போது வேர்க்கால்கள் முதல் நுனி வரை நன்றாக தடவ முடியும். ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனரை கடைகளிலும் வாங்கி பயன்படுத்தலாம் .அல்லது வீட்டிலும் செய்யலாம்.
வீட்டில் செய்யும்போது  நமக்கு பிடித்த வாசனை பொருட்கள் மற்றும் போஷாக்கு உள்ள மூல பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம்.

பாதாம் எண்ணெய்:
பாதாமில் இருந்து தயார் செய்ய படும் எண்ணெய் இந்த பாதாம் எண்ணெய். இது முடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. இதனை லீவ் இன் கண்டிஷனராக பயன்படுத்தலாம் . இதனை அப்படியே முடியில் தடவுவதால் நல்ல வாசனையும் கிடைக்கும்.

பேந்தேனோல் :
பேந்தோதெனிக் அமிலத்தில் துணைப்பொருளாக கிடைப்பது இந்த பந்தோனோல் . இது முடியை வலிமையாக்குகிறது. ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சேதமடைந்த முடியை சீராக்குகிறது. பல ஹேர் மாஸ்க் மற்றும் கண்டிஷனரில் இது பயன்படுத்தப்படுகிறது.

ஆர்கான் எண்ணெய்:
ஆர்கான் மரத்தின் கொட்டைக்குள் இருக்கும் பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆர்கான் எண்ணெய். இது ஈரப்பதத்தை  முடிக்குள் ஆழமாக  செலுத்துகிறது. இதனால் முடி பளபளப்பாக மாறுகிறது. வறண்ட முடியில் இந்த ஆர்கான் எண்ணெய்யை நான்றாக தேய்க்க வேண்டும். இதனால் விரைவில் வெடிப்புகள் மறையும்.

நுனி முடி வெடிப்புகளை எப்படி தடுப்பது எப்படி?
வெடிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

குறிப்புகள்:
1. ஒவ்வொரு 6 வாரத்திற்கும் ஒருமுறை முடியை வெட்டி ட்ரிம் செய்ய வேண்டும்.
2. தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம். தினமும் தலைக்கு குளிக்க நினைத்தால் , ஷாம்பு பயன்படுத்தாமல், கண்டிஷனர் மட்டும் பயன்படுத்தலாம்.
3. கடுமையான மூலப்பொருட்கள் இல்லாத ஷாம்புகளை பயன்படுத்துவது நல்லது.
4. ஷாம்பு பயன்படுத்திய பின் கண்டிஷனர் பயன்படுத்தவும். அல்லது லீவ்  இன் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
5. ஈரமான முடியில்  சிக்கெடுப்பதற்கு,  அகன்ற இடைவெளி  உள்ள சீப்பை பயன்படுத்தவும். 
ஸ்ட்ரெய்ட்டெனிங் அல்லது கலரிங் போன்ற  முடிகளை சேதமடைய செய்யும் செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது.
6. ட்ரயிர் அல்லது ஸ்பிரே பயன்படுத்தும்போது வெப்பத்தை குறைத்து பயன்படுத்தவும்.
7. போலிக் அமிலம், பயோட்டின் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் முடியின் வலிமை அதிகரிக்கும்.
8. போனி டைல் அல்லது முடியை முறுக்கி ஏதாவது ஸ்டைல் செய்வது நுனி பகுதியை வெடிக்க வைக்கும். ஆகையால் எப்போது முடியின் அடி  வரை பின்னல் போடுவது வெடிப்புகளை தடுக்கும்.

முடியில் உண்டாகும் வெடிப்புகளை பற்றி தெரிந்து கொண்டீர்களா? குறிப்புகளை பயன்படுத்தி வெடிப்புகள் ஏற்படாமல் முடியின் அழகை பராமரியுங்கள்!