பொடுகு தொல்லையின் காரணங்கள் மற்றும் போக்குவதற்கான  தீர்வுகள் 

தலை முடி வளர்ச்சியின் குறைபாட்டில் பொடுகு தொல்லை முக்கிய பங்கு வகிக்கிறது. பொடுகு என்பது உச்சந்தலையில் இருக்கும் இறந்த செல்கள் தான்.

பொடுகு தொல்லையின் காரணங்கள் மற்றும் போக்குவதற்கான  தீர்வுகள் 

இது எல்லா வயதினருக்கும் இருக்கும். குறிப்பாக பருவ வயது ஆண் மற்றும் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். பொடுகை போக்குவதற்கு பல விதமான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அதற்கு பக்க விளைவுகளும் உள்ளன. 
பொடுகு எதனால் ஏற்படுகிறது மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகள் மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல்  வீட்டிலேயே இயற்கை முறையில் பொடுகை போக்குவதற்கான சில குறிப்புகள்  போன்றவை கீழே விளக்கமாக  கொடுக்க பட்டுள்ளன. படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!
பொடுகு தோன்றுவதற்கான காரணங்கள்:
1. வறண்ட தலை 
2. உணர்ச்சிவசப்படுதல் 
3. தலை முடியை  பராமரிக்கும் பொருட்களின் ஒவ்வாமை 
4. எண்ணெய்ப்பசை உள்ள சருமம் 
5. தலையை சுத்தம் செய்யாமல் இருப்பது 
6. மன அழுத்தம் 
7. சமசீரற்ற உணவு 
8. அடிக்கடி தலைக்கு பயன்படுத்தும் பொருட்களை மாற்றி கொன்டே இருத்தல் 
9. பூஞ்சை தொற்று 
10. வெப்ப நிலை மாற்றம், குறிப்பாக குளிர் காலம் 
11. தலைக்கு பயன்படுத்தும் ஜெல், ஸ்பிரே மற்றும் வேறு அழகு சாதன பொருட்கள் 
மேலே குறிப்பிட்டுள்ளவை பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள்
பொடுகு தலையில் வந்தவுடன் சில அறிகுறிகள் தோன்றும். அதனை இப்போது பார்க்கலாம்.

பொடுகின் அறிகுறி:
* உச்சந்தலையில் அரிப்பு 
* தலையில் தோல் உரிதல் 
* தலைமுடியிலும் , தோள்களிலும் வெள்ளை துகள்கள் கொட்டுதல் 

பொடுகு வராமல் தடுக்கும் வழிகள்:
1. நிறைய தண்ணீர் குடித்து உடலை நீர்சத்துடன்  வைத்திருக்க வேண்டும்.
2. சமசீரான உணவு உண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
3. பொடுகை போக்கும் தன்மை உள்ள Anti Dandruff ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும்.
4. மன  அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. தலை முடி பராமரிப்பு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.
6. தலை முடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்க எண்ணெய் தேய்க்க வேண்டும்.
7. சூடான நீரில் தலைக்கு குளிப்பதால் வேர் கால்கள் சேதமடையும். ஆகவே குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
8. தலை முடி பராமரிப்பு பொருட்களை வாங்கும் போது அதில் குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை பற்றி அறிந்து கொண்டு வாங்க வேண்டும்.
9. ஈரமான தலை முடியை சீப்பு பயன்படுத்தி சீவ கூடாது.
10. முடியை வெயில் அல்லது பேன் காற்றில் காய வைக்க வேண்டும். ஹேர் ட்ரையர் பயன்படுத்த கூடாது.
மேற்கூறிய வகையில் பொடுகு வராமல் தலை முடியை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொடுகை போக்கும் தீர்வுகள்:
அப்படியும் பொடுகு தோன்றினால், அதனை போக்கும் எளிய தீர்வுகளை  பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு:
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சரி சமமாக எடுத்து பேஸ்டாக்கி தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூவால் தலையை  அலசுங்கள்.

பூண்டு:
2 டேபிள் ஸ்பூன் பூண்டு தூளை 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து நன்றாக தலையில் தடவவும். முக்கால் மணி நேரம் கழித்து மிதமான ஷாம்பூவால் தலைமுடியை  அலசவும்.

வெங்காயம்:
1 வெங்காயத்தை எடுத்து நன்றாக பேஸ்ட்டாகி தலையில் தடவவும். 1 மணி நேரம் கழித்து தலையை  குளிர்ந்த நீரில் அலசவும்.

இஞ்சி மற்றும் பீட்ரூட்:
இஞ்சி மற்றும் பீட்ரூட்டை எடுத்து பேஸ்ட்டாகி இரவு நேரத்தில் தலையில் தடவவும். நன்றாக மசாஜ் செய்யவும். காலையில் எழுந்ததும் தலைக்கு குளிக்கவும்.

ரோஸ்மேரி எண்ணெய்:
ரோஸ்மேரி எண்ணெய்யுடன் வினிகரை கலந்து தலை தடவி மசாஜ் செய்யவும்.15-20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

மவுத்வாஷ் :
1 கப் மவுத்வாஷ் எடுத்து அதில்  9 கப் தண்ணீர் ஊற்றவும். இரண்டையும் நன்றாக கலக்கவும். எப்போதும் போல் ஷாம்புவால் தலையை அலசவும். பிறகு மவுத்வாஷ் கலந்த நீரை தலையில் ஊற்றவும். அதன் பிறகு தலையில் தண்ணீர் ஊற்ற கூடாது. இந்த முறையை மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

பொடுகை பற்றிய விளக்கங்களை புரிந்து கொண்டீர்களா? இனி தலையில் பொடுகு தோன்றினால் இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பொடுகை போக்கலாம்.