சின்னம்மையால் உண்டாகும் கரும்புள்ளிகளைப் போக்குவது எப்படி?

சின்னம்மை என்பது பல காலங்களாக அறியப்படும் ஒரு தொற்று நோய். இதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டாலும், இதன் பாதிப்பு இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது

சின்னம்மையால் உண்டாகும் கரும்புள்ளிகளைப் போக்குவது எப்படி?

கடுமையான கோடை காலங்களில் இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் சின்னம்மையால் பாதிக்கப்படலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு மற்றும் உடல் முழுக்க தடிப்புகள் அல்லது புடைப்புகள் உண்டாகலாம். இந்த தடிப்புகளில் தொற்றும் தன்மை கொண்ட கிருமிகள் இருந்து, சில நேரம் தழும்புகளையும் உண்டாக்கிவிடும்.

இந்த நோயில் இருந்து மீண்டு வந்த பின்னும், அதன் பாதிப்பால் உண்டான தழும்புகள் , முகம், கை , கால் , மற்றும் உடலில் பல இடங்களில் காணப்படும். ஆகவே இந்த நோய் பாதிப்புக்குள்ளானோர் இந்த தழும்புகளினால் சற்று அசௌகரியமாக உணருவார்கள். அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். விருப்பமான ஆடைகளை அணிவதில் கூட சில சங்கடங்கள் உண்டாகலாம். ஆகவே இந்த நிலைகளைத் தவிர்க்க, சின்னம்மையால் உண்டான தழும்புகளை போக்குவது அவசியமாகிறது. 

சின்னம்மை என்றால் என்ன?

சின்னம்மை என்பது ஒரு தொற்று பாதிப்பு. வரிசெல்லா சொஸ்டர் என்ற கிருமி, சின்னம்மையை உண்டாக்குகிறது. இரண்டு வாரத்திற்கு மேல் அதிக வலியை உண்டாக்கக்கூடிய ஒரு நோயாக இது இருக்கிறது. ஒரு சிறிய கொப்பளம் போல் இதன் தொடக்கம் இருக்கும். இதன் முதல் அறிகுறி முகத்தில் தான் தோன்றும் . இது மரணத்தை உண்டாக்கும் ஒரு நோய் அல்ல என்றாலும், சிலர் இந்த பாதிப்பால் பல எதிர்மறை வினைகளை தங்கள் உடலில் உணரலாம். இந்த நோய்க்கு ,  மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து சில வீட்டுத் தீர்வுகளும் பல காலங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் அம்மைத் தழும்புகள் மற்றும் புடைப்புகள் எளிதில் காய்ந்து உதிரத் தொடங்கும்.

சின்னம்மையால் உண்டான தழும்புகளை எந்த வழிகளில் போக்கலாம் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். தொடர்ந்து இந்த பதிவை முழுவதையும் படித்து இந்த வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

இயற்கையான முறையில் வீட்டு தீர்வுகளைப் பின்பற்றி சின்னம்மை தழும்பைப் போக்குவதற்கான குறிப்புகளை  நாம் இப்போது பார்க்கலாம்.

பேக்கிங் சோடா:
சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் உண்டான கொப்பளத்தை எந்த ஒரு காரணத்தினாலும் சொரியக் கூடாது. அந்த கட்டிகள் மிகவும் அரிக்கும். ஆனாலும் அதனை கீறுவதால், கொப்பளம் உதிர்ந்த பின், அதன் தழும்புகள் அசிங்கமாக அப்படியே நிலைத்து விடும். அப்படிப்பட்ட தழும்புகள் மறைய பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவில் அமிலத்தன்மை உண்டு. இதனால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு குறைகிறது. மேலும் அரிக்கும் உணர்வும் தடுக்கப்படுகிறது. சீரான சருமதிற்கான pH அளவை நிர்வகிக்க பேக்கிங் சோடா உதவுகிறது. சருமத்தை தளர்த்தி, திட்டுகளை மென்மையான முறையில் போக்கி, சருமத்தை  சுவாசிக்க வைக்கும் தன்மை பேக்கிங் சோடாவிற்கு உள்ளது. 

இந்த பேஸ் பேக் எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :
ஒரு ஸ்பூன் தண்ணீர்
மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை தழும்புகள் உள்ள இடத்தில் சீராக தடவவும். தடவி நன்றாக தேய்த்த பின், குளிர்ந்த நீரால் கழுவி விடவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் :
காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய், சின்னம்மையால் முகத்தில் உண்டான தழும்புகளை போக்கவும் உதவுகின்றன. இந்த தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். சருமத்தின் எந்த ஒரு திட்டுகளையும் போக்க இந்த தேங்காய் எண்ணெய் மசாஜ் உதவுகிறது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை இதனை செய்து வருவதால் விரைவில் தழும்புகள்  குறையும். 

கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல் ஒரு மந்திரப் பொருள் ஆகும். இதன் கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மையால் பல பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. எந்த ஒரு காயம் மற்றும் புண்களும் இந்த ஜெல் மூலம் குணமடைய முடியும். தழும்புகளைப் போக்கி இந்த ஜெல் சருமத்தை லேசாக்குகிறது. கற்றாழை செடியில் உள்ள இலையை பறித்து, அதில் உள்ள சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாற்றை தழும்புகளில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் உங்கள் சருமம் இறுக்கமாக மாறுவதை உங்களால் உணர முடியும். அந்த நேரம் குளிர்ந்த நீரால் அந்த இடங்களைக் கழுவிக் கொள்ளவும். ஒரு நாளைக்கு தினமும் மூன்று முறை இதனை செய்து வாருங்கள். நல்ல தீர்வுகளை விரைவில் உணரலாம்.

கலேண்டுலா :
கலேண்டுலா மலர்களைக் கொண்ட செடி, சின்னம்மை தழும்பிற்கு நல்ல தீர்வைத் தர பயன்படுகிறது.தழும்பைப் போக்க தேவையான எல்லா பண்புகளும் இதில் உள்ளது. பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, கிருமி எதிர்ப்பு போன்ற தன்மைகள் அடங்கிய இந்த பொருள், ஓர் மனிதனின் உடலில் ஏற்பட்ட எல்லா தழும்பையும் போக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
மூன்று கப் தேங்காய் எண்ணெய்
இரண்டரை கப் தேன் மெழுகு
இரண்டு கப் லாவெண்டர் எண்ணெய் 
இரண்டு கப் காய்ந்த கலேண்டுலா மலர்கள் 

செய்முறை:
மேலே கூறிய எண்ணெய்களையும் கலேண்டுலா மலர்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். இந்த கலவையை குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். இந்த கலவை சூடானவுடன், ஒரு மஸ்லின் துணியால் வடிகட்டிக் கொள்ளவும். பிறகு வடிகட்டிய கலவையில் தேன் மெழுகை சேர்த்து மறுபடியும் அடுப்பில் வைக்கவும். மெழுகு முற்றிலும் கரைந்தவுடன் இந்த கலவை தயார். கலவை தயாரானவுடன் அதில் சிறிதளவு லாவெண்டர் எண்ணெய்யை சேர்க்கவும். நன்றாக ஆறியவுடன் ஒரு ஜாரில் ஊற்றி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

சந்தன விழுது:
அழகு மற்றும் சரும பாதிப்பு துறையில் முக்கிய இடத்தைப் பிடிப்பது சந்தனம். காயங்களை குணப்படுத்தும் திறமை  மற்றும் இதன்  நறுமணத்தின் காரணமாக பரவலாக பல்வேறு சிகிச்சைகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருக்கிறது. பல்வேறு எண்ணெய் மற்றும் பன்னீருடன் சேர்த்து இதனை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன் பன்னீர்
இரண்டு ஸ்பூன் சந்தனத்தூள்

செய்முறை:
சந்தனனத்தூளுடன் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன், இந்த பேஸ்டை முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலை முகத்தைக் கழுவவும். தினமும் இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்:
குளிர்ச்சியும் இதமான உணர்வும் தரும் ஒரு காய் இந்த வெள்ளரிக்காய். சருமத்தில் உள்ள அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க இது பெரிதும் உதவுகிறது. சருமத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் தழும்புகளைப் போக்கவும் உதவுகிறது. சின்னம்மையால் உண்டான தழும்புகளைப் போக்குவதுடன் , வயது முதிர்விற்கான அறிகுறிகளான மெல்லிய கோடுகள், வரிகள் போன்றவற்றையும் போக்க உதவுகின்றன. 

தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு
இரண்டு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு 

செய்முறை:
இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். காட்டன் பஞ்சை இந்த கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் ஒரு களங்கமற்ற முகம் உங்களுக்குக் கிடைக்கும்.

வேப்பிலை :
எந்த ஒரு சரும பிரச்சனையையும் போக்க வேப்பிலை ஒரு சிறந்த தீர்வாகும். வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு , ஒட்டுண்ணிகள் எதிர்ப்பு போன்ற பல்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளது. வேப்பிலையின் மருத்துவ குணங்களின் காரணமாக எல்லா தழும்புகளும் காயங்களும் எளிதில் குணமடைகின்றன.

தேவையான பொருட்கள்:
ஒரு கப் வேப்பிலை 

செய்முறை:
வேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவுவதால் தழும்புகள் மறைகிறது. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சின்னம்மையால் உண்டான தழும்புகள் மறைய இது ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். வேப்பிலையை நீங்கள் குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கலாம். 

நீர்ச்சத்து :
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் எந்த ஒரு தழும்பும் இல்லாமல் தெளிவான பளபளப்பான சருமம் கிடைக்கிறது. அதிக தண்ணீர் பருகுவதால், உடலில் உள்ள அணுக்கள் மேலும் சிறப்பாக செயலாற்றி, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது., ஆகவே ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து க்ளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

தக்காளி :
தக்காளி ஒரு சிறந்த ப்ளீச். இதன் கிருமி எதிர்ப்பு மற்றும் இதமான தன்மையால், இதனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துவதால் , ஒரு வியத்தகு மாற்றத்தை உங்கள் சருமத்தில் உணர முடியும். உங்கள் முகம் பொலிவாக மாறும். உங்கள் சருமத்தில் உள்ள துளைகள் இறுக்கமாகும். இதனால் உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

தேவையான பொருட்கள்:
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு 
பஞ்சு

செய்முறை:
எலுமிச்சை சாற்றுடன், தக்காளி சாற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையில் பஞ்சை நனைத்து தழும்புகள் உள்ள இடங்களில் தடவவும். இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வாருங்கள்.
நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

முகத்தில் உள்ள தழும்பைப் போக்க ஒரு க்ரீம்:
சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் முகத்தில் உண்டான தழும்புகள் மற்றும் வடுக்களைப் போக்க , பல பொருட்கள் கொண்டிருக்கும் பண்புகளை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள். இந்த மூலப்பொருட்கள் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் காயங்கள் குணமடைந்து சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே இத்தகைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீம், சந்தையில் கிடைக்கும் மற்ற க்ரீம்களைப் போல், ரசாயனம் கொண்டவையாக இல்லாததால், சருமத்திற்கு எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை. இந்த க்ரீம் உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைக்க உங்களுக்கு கற்பிக்கிறது. வீட்டிலேயே இந்த க்ரீமை தயாரிக்கும் முறையை நாம் இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன் அத்தியாவசிய எண்ணெய் 
இரண்டு ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய்
அரை கப் கொக்கோ வெண்ணெய் 
அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை:
எல்லா மூலபோருட்களையும் சேர்த்து ஒரு பேனில் கலந்து அடுப்பில் வைக்கவும். எல்லாப் பொருட்களும் உருகும் அளவிற்கு வெப்பம் இருப்பது போதுமானது. பொருட்கள் கரைந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பின்பு இந்த கலவையை ஆற வைக்கவும். இந்த கலவையை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் முகத்தில் தடவவும். 

அத்தியாவசிய எண்ணெய்களின் கலவை :
எண்ணெய்களுக்கு மருத்துவ குணம் உண்டு. ஆகவே பல்வேறு உடல் கோளாறுகளுக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் விரைந்த குணம் அடைகிறது. மேலும் இதன் நறுமணம் கூடுதல் நன்மைகளைக் செய்கின்றன. 

தேவையான பொருட்கள்:
இரண்டு ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்
மூன்று ஸ்பூன் விட்ச் ஹஸல் 
மூன்று ஸ்பூன் டிஸ்டில்டு தண்ணீர்
ஒரு ஸ்பூன் தைல எண்ணெய்
இரண்டு ஸ்பூன் செவ்வந்தி பூ எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் 

செய்முறை:
எல்லா எண்ணெய்களையும் கலந்து ஒரு ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதனை தொடர்ச்சியாக முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் உண்டாகும் தழும்புகள் மற்றும் காயங்கள் விரைவில் குணமடைகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த எண்ணெய் கலவையைப் பயன்படுத்தலாம். 

உருளைக் கிழங்கு :
முகத்தில் உண்டாகும் திட்டுக்கள் மற்றும் கொப்பளங்களை குணப்படுத்தும் தன்மைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் உருளைக் கிழங்கு. உருளைக்கிழங்கில் இரண்டு முக்கிய மூலப்பொருட்கள் உண்டு. ஒன்று , சர்க்கரை மற்றொன்று ஸ்டார்ச். இந்த இரண்டு பொருட்களும் உங்கள் சருமத்தை தளர்த்தி பொலிவாக்கி , திட்டுக்களை அகற்றுகிறது. முகத்தில் காணப்படும் இறந்த அணுக்களை போக்க உதவுகிறது. உருளைக்கிழங்கில் பொட்டசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்று ஜின்க் உள்ளது. இது உங்கள் சருமத்தை இளமையுடன் வைக்க உதவுகிறது. மற்றும் கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:
ஒரு உருளைக்கிழங்கு
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு 
ஒரு கப் சூடான நீர்

செய்முறை:
எலுமிச்சை ஓர் சிறந்த ப்ளீச். இதனுடன் உருளைக்கிழங்கின் நன்மையை நாம் இணைக்கப் போகிறோம். உருளைக்கிழங்கை மெலிதாக நறுக்கி, சூடு நீரில் போட்டுக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். அந்த நீர் முழுவதும் ஆறியவுடன், முகத்தில் உள்ள திட்டுக்களில் அதனைத் தடவவும். தினமும் இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

மோர்:
பாலில் இருந்து வெண்ணெய் எடுக்கப்பட்டவுடன் அதில் மீதம் உள்ளவற்றை கடைவதால் உண்டாவது தான் இந்த மோர். இந்த பொருளில் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம் உள்ளது. இது முகத்தில் உண்டாகும் தழும்புகள் மற்றும் திட்டுகளில் சிறந்த வினை புரிகிறது. சின்னம்மையால் உண்டாகும் தழும்புகளை போக்க இது உதவுகிறது. சந்தையில் கிடைக்கும் எல்லா ரசாயனப் பொருட்களையும் மிஞ்சும் அளவிற்கு இதன் தீர்வு இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மோர்
பஞ்சு

செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் மோரை ஊற்றிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். உங்கள் முகத்தில் மாற்றம் ஏற்ப்படும் வரை  தொடர்ந்து தினமும் இதனை செய்து வரவும்.

பாதாம் எண்ணெய் :
பாதாமின் நன்மைகள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் அதிகரிக்க பாதாம் உதவுகிறது. பாதாமில் லினோலிக் மற்றும் ஒலிக் அமிலம் உள்ளது. மற்றும் பைதோ ச்டீரால் , வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஒப்பனை பொருட்கள் மற்றும் ஆரோக்கிய  பராமரிப்பு பொருட்களின் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைக்கிறது, மேலும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் ஒளியில் இருந்து உங்களைக் காக்க உதவுகிறது. பாதாம் எண்ணெய்யை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். திட்டுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனைக் கழுவ வேண்டாம். சிறந்த தீர்வுகளுக்கு தினமும் உறங்கச் செல்வதற்கு முன் இதனை பயன்படுத்தலாம்.

கொண்டைக்கடலை :
கொண்டைக்கடலையில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது. இது நச்சுகளை அகற்றும் தன்மையுடன் செயலாற்றுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி சத்து சூரிய ஒளியினால் உண்டாகும் தீங்கில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. கொண்டைக்கடலை, சருமத்தை தளர்த்தி, சுவாசிக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள் மறைகிறது. உங்கள் முகத்தில் உள்ள இறந்த அணுக்களை இந்த கொண்டைக்கடலை கொண்டு போக்கலாம்.

தேவையான பொருட்கள்:
அரை கப் கொண்டைக்கடலை
அரை கப் தண்ணீர்

செய்முறை:
கொண்டைகடலை மிருதுவாக மாறும்வரை வேக வைக்கவும். ஆறியவுடன் விழுதாக அரைக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நரம் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் இதனை செய்து வருவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் :
மஞ்சளின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உடல் ஆரோக்கியம் மற்று அழகு ஆகிய இரண்டிலும் மஞ்சளின் பங்கு மிக முக்கியமானது. இது சருமத்திற்கு பளபளப்பை தருகிறது. இதில் இருக்கு பூஞ்சை எதிர்ப்பு தன்மை மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை சருமத்தில் உள்ள திட்டுகளை எதிர்த்து போராடுகிறது. இதனை பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
அரை ஸ்பூன் மஞ்சள்
ஒரு ஸ்பூன் பால்
அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:
மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் சேர்த்து கலக்கவும். இதனை தழும்புகள் உள்ள முகத்தில் தடவவும். காயும் வரை அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனை செய்யலாம்.

பார்ஸ்லி (வோக்கோசு)
பல்வேறு வைட்டமின்களை தன் வசம் கொண்டுள்ள இந்த இலைகள், சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, சருமத்தில் ஏற்பட்ட திட்டுகளை எதிர்த்து போராடுகிறது. இதன்மூலமாக பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்ட நீங்கள் விரும்பிய சருமம் உங்களுக்குக் கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்:
பார்ஸ்லி கீரை ஒரு கட்டு
எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

செய்முறை:
பார்ஸ்லி கீரையுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். முகத்தில் நீங்கள் விரும்பும் மாற்றம் வெளிப்படும் வரை இதனை தொடர்ந்து செய்யவும்.

தேன்:
தேனுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. இயற்கை ஊட்டச்சத்துகளும் ஈரப்பதமும் நிறைந்த ஒரு மூலப்பொருள் இந்த தேன். தழும்பை லேசாக்கும் ப்ளீச் போன்ற தன்மை தேனில் உண்டு. தேன் அல்லது தேன் கலந்த பேக்குகளை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமம் பல்வேறு சரும பாதிப்பில் இருந்து மீட்கப்படுகிறது, சரும மறுசீரமைப்பும் உண்டாகிறது. சின்னம்மையால் பாதிக்கப்பட்டு உண்டான தழும்புகள், இயற்கையான முறையில் மறைவதற்கு தேன் கலந்த பேக்குகள் பயன்படுத்தப்படுவதால், இறந்த அணுக்கள் விரைந்து வெளியேறி சருமம் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.

தேனுடன் ஓட்ஸ் சேர்த்து கலந்த கலவையை முகத்தில் தடவுவதால் நல்ல பலன் கிடைக்கிறது. ஒரு ஸ்பூன் தேன், ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உடனடியாக உங்கள் முகத்தில் மற்றும் சருமத்தில் ஒரு மாற்றத்தை உங்கள் உணர முடியும். 

வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் கலவை :
சரும சிகிச்சை நிபுணர்கள் சின்னம்மையால் உண்டாகும் கருந்திட்டுக்களைப் போக்க வைட்டமின் ஈ எண்ணெய்யை பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஈ எண்ணெய் இயற்கையானது மற்றும் சருமத்திற்கு பாதுகாப்பானது. சின்னம்மையால் உண்டான தழும்புகள் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் எளிதில் மறைகிறது. இதனுடன் சேர்த்து லாவெண்டர் எண்ணெய், விட்ச் ஹஸல், டீ ட்ரீ எண்ணெய், பெர்கமொட் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால் சருமம் நீர்ச்சத்தோடு இருக்க உதவுகிறது , மற்றும் முகத்தில் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க உதவுகிறது. சருமம் புத்துணர்ச்சி அடைகிறது.

எலுமிச்சை சாறு:
சரும பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வாக இருப்பது எலுமிச்சை சாறு. மேலும் சருமத்தை வெண்மை அடையச் செய்கிறது. எண்ணெய் சருமத்திற்கு அதிக எண்ணெய்யை கட்டுபடுத்துகிற தன்மை எலுமிச்சைக்கு உண்டு. மற்றும் எலுமிச்சையில் உள்ள ப்ளீச் தன்மையால், தழும்புகள் விரைவில் மறைகின்றன. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும், மேலும் எலுமிச்சை சிகிச்சைக்கு பிறகு உடனடியாக வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.

தேங்காய் தண்ணீர்:
எல்லா வீடுகளிலும் பொதுவாக கிடைக்கும் இந்த தேங்காய் நீர், சருமத்தின் தழும்புகளைப் போக்கி, புத்துணர்ச்சியை மீட்டுத் தருகிறது. கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இந்த தேங்காய் நீர் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, நீர்ச்சத்தை தருகிறது.

சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும் சில மூலப்பொருட்கள் பற்றிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சருமத்தில் உண்டாகும் தழும்புகள் மற்றும் திட்டுக்களை சரி செய்ய உதவுகிறது. இயற்கையான மற்றும் வீட்டுத் தீர்வுகள் மூலம் சின்னம்மையால் உண்டான தழும்புகளை போக்கலாம்.

சின்னம்மையால் உண்டாகும் கரும்புள்ளிகளைப் போக்க நிபுணத்துவ தோல் சிகிச்சைகள்.

டெர்மாப்ரேஷன் / மைக்ரோ டெர்மாப்ரேஷன்

தோல் சிகிச்சை நிபுணர்கள், ஒரு நீளமான வெள்ளை பிரஷ் கொண்டு சருமத்தை ஸ்க்ராப் செய்வார்கள் இதனால் சருமத்தின் மேல் புறத் தோல் விலகுகிறது. இதனால் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதன் வலியைக்  குறைக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் பகுத்தி மரத்து போன பின் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சருமத்தின் காயம் ஆறிய பின், புதிய மேல் தோல் உருவாகிறது.


லேசர் சிகிச்சை 
சருமத்திற்கான பல்வேறு லேசர் சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளது. சின்னம்மையால் ஏற்பட்ட தழும்பைப் போக்க பெரும்பாலும் தோல் சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைப்பது இந்த நான்-அப்லேடிவ் லேசர் ஸ்கின் ரீஜூனுவெஷன்  சிகிச்சை (Non-Ablative Laser Skin Rejuvenation Treatment). சருமத்தில் கொலோஜென் உற்பத்திக்கு லேசர் உதவுகிறது. அதனால் சருமத்தின் மேல் புறம் புதிதாக உருவாக்கப்படுகிறது.


பன்ச் க்ராப்டிங் :
இது ஒரு வகையான தோல் அறுவை சிகிச்சை. சின்னம்மை காய்ந்தவுடன் உண்டான ஓட்டைகளை அடைக்க, காதுக்கு அடியில் உள்ள தோலின் சிறு பகுதியை எடுத்து பயன்படுத்துவர். பொதுவாக இந்த முறையில் சரும நிறத்தில் மாற்றம் ஏற்படும். ஆகவே நிபுணர்கள் இந்த சிகிச்சை செய்த ஒரு மாதத்திற்கு பிறகு கெமிக்கல் பீலிங் என்ற முறையை செயல்படுத்துகின்றனர். 

ஓட்ஸ்:
ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த ஒரு பொருள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது நமது தினசரி உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு உணவுப் பொருள். நார்ச்சத்துடன் இணைந்து குணப்படுத்தும் தன்மையும் ஒட்சுக்கு உண்டு. ஆகவே சின்னம்மையால் உண்டான தழும்புகளைப் போக்க ஓட்ஸ் பயன்படுகிறது. உங்கள் சருமத்தை நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது. இதனால் சரும பாதிப்புகள் எளிதில் விலகி சருமம் குணமடைகிறது. சரும நிறத்தை தக்க வைத்துக் கொள்ளவும் ஓட்ஸ் பயன்படுகிறது.

ஒரு கை நிறைய ஓட்ஸ் எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடவும்.
நன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
இந்த கலவை ஆறியவுடன், உங்கள் சருமத்தில் தடவவும்.
சருமத்தில் தடவும்போது, தழும்புகளின் மேல் நன்றாக தேய்க்கவும். 
பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

பப்பாளி:
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பல நன்மைகள் நாம் தினசரி நமது உணவில் சேர்த்துக் கொள்ளும் பப்பாளியில் உண்டு. செரிமானம், சருமம் போன்றவற்றிற்கு பல நன்மைகளைச் செய்கிறது இந்த பப்பாளி. சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அழுக்கை நீக்கி, நச்சுகளை வெளியேற்றி , இறந்த அணுக்களைப் போக்கி , வயது முதிர்விற்கான செயல்பாடுகளை தாமதப் படுத்துகின்றது. மேலும் சின்னம்மையால் உண்டான தழும்புகளைப் போக்கவும் பப்பாளி பெரிய அளவில் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:
பப்பாளி ஒரு கப் 
பால் சிறிதளவு 
பழுப்பு சர்க்கரை ஒரு ஸ்பூன்  
மேலே கூறிய பொருட்களைக் கொண்டு ஒரு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை தழும்புகள் உள்ள இடத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தை நீரால் கழுவவும்.

கொக்கோ பட்டர் :
கொக்கோ பட்டரை பற்றிய நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. இது எப்படி உருவாகிறது என்பது கூட நம்மில் பலருக்கு தெரியாது. கொக்கோ கொட்டையில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு தான் கொக்கோ பட்டர். இது ஒரு இயற்கையான மாயச்ச்சரைசர். இதனை பயன்படுத்துவதால் சருமம் ஈரப்பதத்தை பெறுகிறது. மேலும் சருமத்தை மிருதுவாக்கி வறட்சியைப் போக்குகிறது. சருமத்தை குணப்படுத்துவதில் விரைவாக செயல் புரிகிறது. சின்னம்மையால் உண்டாகும் தழும்புகளைப் போக்க இந்த பொருள் பெரிதும் உதவுகிறது.

கொக்கோ பட்டர் சிறிதளவு எடுத்து தழும்புகளில் தடவவும். 
சருமத்தில் இந்த பட்டரைத் தடவி, மென்மையான முறையில் சுழல்  வடிவில் மசாஜ் செய்யவும். சிறிது நேரத்தில் இந்த வெண்ணெய் முழுவதும் சருமத்தால் உறிஞ்சப்படும்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை பயன்படுத்துவதால் நல்ல தீர்வுகள் ஏற்படும்.

லாவெண்டர் எண்ணெய்:
சருமத்தில் உண்டாகும் தடிப்பு, அரிப்பு, எரிச்சல் , வறட்சி போன்றவற்றை போக்கும் தன்மை லாவெண்டர் எண்ணெயில் மிக அதிகமாக உள்ளது. இதனைத் தவிர, சின்னம்மையால் உண்டாகும் தழும்புகளைப் போக்கும் குணமும் இந்த எண்ணெய்க்கு உண்டு. சருமத்தை நீர்ச்சத்தோடு வைத்து, சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது. இதனால் களங்கமற்ற சருமம் உண்டாகிறது. சரும நிறத்தை மேம்படுத்தவும் பிரகாசமாக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

லாவெண்டர் எண்ணெய் சருமத்தில் நன்றாக உறிஞ்சப்படும்.
இந்த எண்ணெய்யை எடுத்து சின்னம்மையால் உண்டான தழும்பில் தடவவும்.
இதனை தினமும்  இரண்டு அல்லது மூன்று முறை செய்வதால் விரைவில் இந்த தழும்புகள் மறையும். 

இந்த வழிமுறைகள் அனைத்தும் சின்னம்மையால் உண்டான தழும்புகளைப் போக்க சிறந்த தீர்வுகளை தருபவையாகும். தோல் சிகிச்சை மற்றும் இயற்கை தீர்வுகள் ஆகிய இரண்டும் நல்ல பலனைக் கொடுக்கக் கூடியவை. உங்களுடைய அவசரம் மற்றும் இதர காரணிகளான நிதி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, எந்த வகை சிகிச்சை என்று முடிவெடுத்து அதில் வெற்றி அடையலாம்.