பாதாம் வயிறு வீக்கத்தை உண்டாக்குமா?

ஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஒரு ஆரோக்கிய சிற்றுண்டி பாதாம்

பாதாம் வயிறு வீக்கத்தை உண்டாக்குமா?

 வைட்டமின் ஈ சத்து, மெக்னீசியம் போன்றவை அதிகமாக இருக்கும் பாதாம், நார்ச்சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் உங்கள் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இருப்பினும், சிலருக்கு பாதாம், இரைப்பைத் தொடர்பான பாதிப்புகளை உண்டாக்கி, வயிறு வீங்கிய உணர்வைத் தரலாம். பாதாம், உயர் நார்ச்சத்து கொண்ட உணவாக இருப்பதால் இந்த பாதிப்பு உண்டாகலாம், ஆனால் பாதாம் ஒவ்வாமை காரணமாகவும் இந்த வயிறு வீக்கம் ஏற்படலாம். தீவிர வயிறு வீக்கம் அல்லது வீக்கத்துடன் கூடிய இரைப்பை கோளாறுகளுக்கான இதர அறிகுறிகள் ஆகியவை தென்பட்டால், அவை செரிமான கோளாறின் அடையாளமாக இருக்கலாம்.

நார்ச்சத்து தொடர்பான தொந்தரவுகள்:
ஹார்வர்ட் பள்ளியில் பொது சுகாதாரம் கூற்றுப்படி, மலச்சிக்கலைத் தடுத்து, ஆரோக்கியமான செரிமானத்தை நிர்வகிக்க குழந்தைகளும் பெரியவர்களும் ஒரு நாளில் 20 முதல்  30 கிராம் அளவு நார்ச்சத்து உட்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஒரு கப் பாதாமில் 18 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாகவே இதனை ஒரு ஆரோக்கிய சிற்றுண்டியாக பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் இந்த நார்ச்சத்து சிலருக்கு குடலில் வாய்வை உண்டாக்கலாம். குறிப்பாக ஒரே நேரத்தில் மிக அதிக அளவு பாதாம் எடுத்துக் கொள்வதால், இதர அறிகுறிகளான வயிறு உப்புசம் அல்லது வீக்கம் மற்றும் அடிவயிறு வலி போன்றவை ஏற்படலாம். உங்கள் உணவு அட்டவணையில் அதிகமான அளவு நார்சத்து எடுத்துக் கொள்வதும் வயிற்றில் வாய்வு ஏற்பட ஒரு பொதுவான காரணம் ஆகும். எனவே, மிக அதிக அளவு நார்ச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

பாதாம் ஒவ்வாமை:
மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டைகள் என்ற பிரிவில் பாதாமும் அடங்கும். வால்நட், பிரேசில் நட், முந்திரி, ஹஸல் நட், பிஸ்தா போன்றவை இந்த பிரிவில் அடங்கும் கொட்டை வகைகள் ஆகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உண்டாகும் பொதுவான உணவு ஒவ்வாமைகளில் இந்த மரக் கொட்டை ஒவ்வாமையும் ஒரு வகையாகும் என்று உணவு ஒவ்வாமை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் குறிப்பிடுகிறது. ஒவ்வாமை எதிர்வினை , நோயெதிர்ப்பு மண்டலத்தால் தூண்டப்பட்டாலும், வயிறு வலி, வீக்கம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு. போன்றவை இரைப்பையில் தோன்றும் அறிகுறிகளாகும். வாய் பகுதியைச் சுற்றி கூச்ச உணர்வு , அரிப்பு போன்றவையும் ஒவ்வாமை தொடர்பான இதர அறிகுறிகளாகும். இந்த வகைக் கொட்டைகள் தொடர்பான அறிகுறிகள் தீவிர அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இதற்கான சிகிச்சை மிகவும் அவசியம்.

செரிமான கோளாறுகள்:
பாதாம் சாப்பிட்டவுடன் வயிறு வீக்கம் ஏற்படுவது செரிமானம் தொடர்பான கோளாறான எரிச்சல் ஏற்படுத்தும் குடல் நோய்க்குறி போன்றவற்றின் பாதிப்பால் ஏற்படலாம். அமெரிக்க மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் மக்கள் இந்த குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மேரிலன்ட் மெடிகல் சென்டர் பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்பது ஒரு லேசான கோளாறாக இருந்தாலும், இதன் அறிகுறிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக வயிறு வீக்கம், அடிவயிறு வலி மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த குடல் நோய்க்குறியை ஊக்குவிப்பது நார்ச்சத்தாகும். சில அரிய வழக்குகளில், வயிறு வீக்கம் பல தீவிர நிலையை உண்டாக்கலாம்.

இதற்கான தீர்வுகள்:
நீங்கள் உட்கொள்ளும் பாதாம் அளவைக் குறைப்பதன் மூலம், லேசான வயிறு வீக்கத்தைத் தடுக்க முடியும். நீங்கள் நார்ச்சத்தை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை என்றால், படிப்படியாக நீங்கள் உட்கொள்ளும் பாதாம் அளவை சில வாரங்களில் மெதுவாக  உயர்த்துவதால் , உங்கள் உடல் சரியாகும் நேரத்தைக் கொடுத்து , வாய்வால் ஏற்படும் வீக்கம் முற்றிலும் விலக வாய்ப்புள்ளது. சிமெதிகோன் என்னும் மாத்திரை எடுத்துக் கொள்வதால், உங்கள் குடல் பகுதியில் உள்ள வாய்வின் அளவு குறைந்து, வீக்கம் முற்றிலும் குறையலாம். ஒவ்வாமை அல்லது செரிமான கோளாறு போன்றவை உங்கள் உடலில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், சரியான நோய்க்கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது நலம்.