குழந்தைகள் தலைக் கீழாக பிறப்பது பற்றிய பதிவு !

குழந்தை தலைக் கீழாக இருந்தால் அவர்களுக்கு எதாவது ஆபத்து உண்டாகுமா?குழந்தை தலைக் கீழாக இருக்கும்போது கையாளப்படும் பிரசவ முறைகள் என்ன ?

குழந்தைகள் தலைக் கீழாக பிறப்பது பற்றிய பதிவு !

தலைகீழ் பிறப்பு :
தாயின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்படும்போது பெரும்பாலும் குழந்தைகளின் தலைப்பகுதி தான் வெளியில் வரும். சில நேரங்களில், சில குழந்தைகளின் கால் பகுதி அல்லது பிட்டப் பகுதி வெளியில் வரலாம். இதனை தலை கீழ் பிறப்பு என்று கூறுவர். குறிப்பிட்ட தேதிக்கு முன்கூட்டியே பிரசவம் நடக்கும்போது இத்தகைய நிகழ்வு நடக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் தானாக  திரும்பி, தலை பகுதி முதலில் வெளியேறும். பிரசவ காலம் நெருங்கும்போது உங்கள் மருத்துவர், குழந்தையின் தலை நிலையை சோதித்து, தலை கீழ் பிறப்பை உறுதி  செய்யலாம். அல்ட்ரா சவுண்ட் அல்லது கைகளை பயன்படுத்தி கருவின் நிலையை மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். 

தலை கீழ் பிறப்பு ஏற்பட சில காரணங்கள் , 
ப்ரீ மச்யூர் என்று சொல்லக்  கூடிய குறிப்பிட்ட தேதிக்கு முன்பே பிரசவம் நிகழ்வது 
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவிப்பது  
பனிக்குட நீரின் அளவு அசாதாரணமாக இருப்பது 
தாயின் கருப்பை அசாதாரணமான வடிவத்தில் இருப்பது 

முன்னெச்சரிக்கை 
கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். மருத்துவர்கள் தலைகீழ் பிறப்பை பற்றி உங்களிடம் முன்பே கூறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அல்லது அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான வழிகளைப் பற்ற உங்களுக்கு கூறி உதவலாம். கருவில் இருக்கும் குழந்தை இயற்கையாக திரும்புவதற்கான பல்வேறு வழிகள் உண்டு. இதற்கான வழிமுறைகளை உங்களுடன் மருத்துவர் பகிர்வதால் குழந்தையின் தலை  இயற்கையாக திரும்புகிறது. இது முதல் நிலை. குழந்தை அல்லது தாயின் ஆரோக்கியத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லாதபோது மற்றும் முன்கூட்டியே இதனை கண்டறியும்போது, இந்த முறை நல்ல தீர்வை தரும். மற்றொரு முறை எக்ஸ்டெர்னல் செபலிக் வெர்ஷன் . இதனை ஈ சி வி என்று கூறுவர்.  அல்லது மருத்துவர் சிசேரியன் பிரசவ முறையை திட்டமிடலாம். 

எக்ஸ்டெர்னல் செபலிக் வெர்ஷன் - External cephalic version (ECV)
கருப்பையில் இருக்கும் குழந்தையின் தலையை திருப்ப முயற்சிக்கும் ஒரு வழி இந்த ஈ சி வி . குழந்தையை திருப்புவதற்காக, மருத்துவர் உங்கள் வயிற்றில் வெளியிலிருந்து அழுத்தத்தை கொடுப்பார். சில நேரங்களில் அல்ட்ர சவுண்டையும் பயன்படுத்துவர். சுக பிரசவ தன்மை உள்ள பெண்களும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
ஆனால் ஈ சி வி முறையை பயன்படுத்தக் கூடாத நிலைகள்,  

பெண்ணுறுப்பில் இரத்தபோக்கு 
நஞ்சுக்கொடி கருப்பையின் வாய் அருகில் அல்லது கருப்பையை  மூடி இருக்கும்போது 
குழந்தையை சுற்றி இருந்து பாதுகாக்கும் பனிக்குட நீர் குறைவாக இருக்கும்போது 
கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு அசாதாரணமாக இருக்கும்போது
இரட்டை அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிக்கும்போது
சவ்வுகள் முன்கூட்டியே முறியும்போது

ஈ சி வி முறையை மருத்துவமனையில் பிரசவகாலத்தின் இறுதியில், 37 வாரத்திற்கு மேல் தான் செய்யப்பட வேண்டும். இந்த முறையை செயல்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்ட்ரா சவுண்ட் வழியாக குழந்தை தலைக்கீழாக இருப்பதை உறுதி செய்து கொள்வார். கருவில் உள்ள குழந்தையின் இதய துடிப்பு சரியான நிலையில் உள்ளதா  என்பது கண்காணிக்கப்படும். கருப்பையில் உள்ள தசைகள் நெகிழ்வதற்காக மருத்துவர் உங்களுக்கு சில மருந்துகளை கொடுப்பார். இதனால் அசௌகரியங்கள் குறைந்து, குழந்தையை திருப்புவதில் வெற்றி கிடைக்கிறது. நரம்பின் வழியாக மருந்து உள்ளே செலுத்தப்படுவதால் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

ஈ சி வி செய்யப்படும்போது, நீங்கள் படுத்த நிலையில் இருப்பீர்கள். உங்கள் மருத்துவர் உங்கள் வயிற்றின் மீது அவர் கைகளை வைத்திருப்பார். குழந்தையின் தலை இருக்கும் இடத்தை அறிந்து, மெதுவாக அதன் தலையை  சரியான நிலைக்கு மாற்றுவதற்கு மருத்துவர் முயற்சிப்பார் . இந்த முறைக்கு் பிறகும் , குழந்தையின் இதய துடிப்பு மீண்டும் கண்காணிக்கப்படும். இந்த முயற்சி வெற்றி அடைந்தால் , நீங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. சுகப் பிரசவத்திற்கான வாய்ப்பு  உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் மறுபடியும் குழந்தை தலை கீழே  மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ஈ சி வி யின் வெற்றிக்கான சில காரணங்கள் உண்டு. அவை,
 
பிரசவ காலகட்டத்திற்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள்,
உங்கள் குழந்தையை சுற்றியுள்ள நீரின் அளவு,
நீங்கள் எத்தனை முறை பிரசவித்திருக்கிறீர்கள் 
உங்கள் குழந்தையின் எடை எவ்வளவு 
நஞ்சுக்கொடி எந்த நிலையில் இருக்கிறது
உங்கள் குழந்தை எந்த நிலையில் உள்ளது

மேலே கூறியவற்றை பொறுத்து தான் ஈ சி வி யின் வெற்றி இருக்கிறது.

இந்த முறையில் வெற்றி கிடைக்காதபோது, மருத்துவர் உங்கள் பிரசவத்தை பற்றி உங்களுடன் கலந்தாலோசிப்பார். சுகப் பிரசவம் அல்லது சிசேரியன் பற்றிய நன்மை தீமைகளை பற்றி உங்களுக்கு தெரிவிப்பார். மீதும் ஒரு முறை ஈ சி வி செய்வதை பற்றியும் யோசிக்கலாம்.

ஈ சி வி யில் உள்ள ரிஸ்க் மிகவும் குறைவு, அவை,
முன்கூட்டியே பிரசவம் நிகழ்வது ,
சவ்வுகள் முன் கூட்டியே முறிவது 
தாய் அல்லது சேய்க்கு  குறைந்த அளவு இரத்த போக்கு ஏற்படுவது 
குழந்தைக்கு எதாவது இடர்பாடு ஏற்பட்டு உடனடியாக சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் உண்டாவது

இயற்கை வழிகள் 
குழந்தையை இயற்கையான முறையில் தலை திரும்பச் செய்யும்  வழிகளை சிலர் முயற்சி செய்வர் . சில உடற்பயிற்சி நிலைகள், ஊக்கிகள், அல்லது மாற்று மருந்துகள் பயன்பாடு போன்றவை சில வழிகள். ஆனால் இவைகளால் குழந்தையின் தலை திரும்பும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. 

பயிற்சிகள்:
தரையில் படுத்து, கால் பாதங்கள் தரையில் படும்படி கால்களை மடக்கி வைக்கவும். உங்கள் இடுப்பு பகுதியை ஒரு பிரிட்ஜ் போன்ற நிலையில் உயர்த்தவும். இந்த நிலையில் பத்து முதல் இருபது நிமிடங்கள் இருக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறை இதனை பயிற்சி செய்யலாம். கருப்பையில் உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இயங்கும்போது இந்த பயிற்ச்சியை செய்யலாம்.

தலைகீழாக்கம் :
ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சில பயிற்சிகளின் மூலம் குழந்தையின் தலையை திருப்பலாம். உங்கள் இடுப்பு தசைகளும் கருப்பையும் இதன் மூலம் நெகிழ்வு  பெறுகின்றன. குழந்தையை போன்ற வடிவத்தில் 10-15  நிமிடங்கள் ரெஸ்ட் எடுப்பது ஒரு முறை. குழந்தைகளை யானை சவாரி விளையாட்டிற்கு அழைத்து செல்ல நாம் முட்டி போட்டு அமரும் நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். கால் முட்டி மற்றும் உள்ளங்கைகள் பூமியில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது, உங்கள் பின்பகுதி காலின் படும்படி அமர வேண்டும். பிறகு உங்கள் பழைய நிலைக்கு செல்ல வேண்டும் . இப்படி முன்னும் பின்னும் மாறி மாறி அசைவு கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து பத்து நிமிடம் செய்ய வேண்டும்.

இசை :
சில வகை இசை மற்றும் அதன் ஒலி குழந்தைகளுக்கு பிடிக்கும். ஆகவே ஹெட் போன் அல்லது ஸ்பீக்கரை வயிற்றின் மேல் வைத்து அதன் ஒலியை  குழந்தைகள் கேட்பதால் குழந்தைகள் திரும்ப முயற்ச்சிக்கலாம்.

தட்ப வெப்பம் :

குழந்தைகள் இசையை போல் தட்ப வெப்பத்தையும் புரிந்து கொள்வார்கள். குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் குளிர்ச்சியான எதாவது ஒரு பொருளை வையுங்கள். 
பிறகு எதாவது ஒரு சூடான பொருளை உங்கள் வயிற்றின் மீது வையுங்கள். 

வெப்ஸ்டர் நுட்பம்:
இது ஒரு உடலியக்க அணுகுமுறை ஆகும். இது உங்கள் இடுப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியை ஒழுங்கமைக்க மற்றும் உங்கள் கருப்பை ஓய்வெடுக்க உதவும். குழந்தையின் தலையை திருப்புவது இதன் குறிக்கோளாகும்.

அக்குபஞ்சர் :

இது ஒரு சீன மருத்துவ முறையாகும். உடலின் அழுத்த புள்ளிகளின் மீது ஊசிகளை வைத்து, உடலின் ஆற்றலை சமன் செய்கிற ஒரு முயற்சியாகும். இதன்மூலம் உங்கள் கருப்பை நெகிழ்ந்து குழந்தையின் இயக்கம் ஊக்குவிக்கப்படுகிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
தலைக் கீழாக இருக்கும் குழந்தையை திருப்ப முயற்ச்சிப்பது  எல்லா நேரத்திலும்  பலன் தராது. சுக பிரசவம் மூலமாகவும் தலை கீழாக இருக்கும் குழந்தைகளை பிரசவிக்க முடியும். ஆனால் மருத்துவர்கள் பொதுவாக சிசேரியன் முறையை மட்டுமே பின்பற்றுகின்றனர். சிசேரியன் முறையில் இரத்த போக்கு மற்றும் தொற்றின் அபாயங்கள் உள்ளன. சிசேரியன் முறையில் , குழந்தை மற்றும் தாய் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

தலை கீழாக இருக்கும் குழந்தைகளை சுக பிரசவம் மூலம் பிரசவிக்கும்போது சில அபாயங்கள் உண்டு. அவை,
பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு பிறகு காயம் உண்டாகலாம்.
குழந்தையின் இடுப்பு சாக்கெட் மற்றும் தொடை எலும்பு பிரிந்து காயம் உண்டாகலாம்.
தொப்புள் கொடியில் சிக்கல் உண்டாகலாம். உதாரணத்திற்கு , பிரசவத்தின்போது தொப்புள்கொடி தட்டையாக மாறலாம் . இதனால் பிராணவாயு குறைந்து நரம்பு மற்றும் மூளையில் பாதிப்பு உண்டாகலாம்.

மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் 
குழந்தை தலைக்  கீழாக இருப்பதை எப்படி சொல்ல முடியும்?
குழந்தை தலைக் கீழாக இருந்தால் அவர்களுக்கு எதாவது ஆபத்து உண்டாகுமா?
ஈ சி வி முறையில் உள்ள நன்மை மற்றும் தீமைகள் என்ன?
தலை கீழாக பிறந்த குழந்தை, பிறந்தபிறகு உண்டாகும் குறைப்பாடுகள் என்ன ?