உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம்

காலையில் உடற்பயிற்சி செய்வது, மாலையில் உடற்பயிற்சி செய்வது - இரண்டில் எது சிறந்தது ?

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம்

உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது? உண்மையாகச் சொன்னால் , அது உங்கள் உடலை சார்ந்தது. உடற்பயிற்சியை எந்த நேரத்தில் செய்வதால் உங்கள் உடலில் நீங்கள் விரும்பிய விளைவுகள் உண்டாகிறதோ அந்த நேரமே சிறந்த நேரம். ஆனால் இரண்டு வேளைகளிலும் உடற்பயிற்சி செய்வதில் அவற்றிற்கான நன்மை தீமைகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

காலை நேர உடற்பயிற்சி: 

ஒரு இரவு தூக்கத்திற்குப் பிறகு, உங்கள் உடல் அமைதியான நிலையில் உள்ளது மற்றும் உடல் செயல்பாடுகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன. காலை நேர உடற்பயிற்சி  ஆற்றலை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் நாளை உற்சாகமாகத் தொடங்க உதவலாம். இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக உணர முடியும். இவற்றின்  நன்மை தீமைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

நன்மைகள்:

ஒரு நாளை உடற்பயிற்சியுடன் தொடங்குவதால், காலை உடற்பயிற்சிகளில் நிலைத்தன்மையின் வாய்ப்புகள் அதிகம். காலையில் முதல் வேலையாக செய்வது உடற்பயிற்சி. காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் சீராகவும், உங்கள் உடல் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் மாறுகிறீர்கள்.

காலை உடற்பயிற்சிகள் உங்கள் ஆற்றல் அளவை உகந்ததாக வைத்திருக்கும். நாள் முழுவதும் ஆற்றல் குறைபாடு ஏற்படுவதில்லை. இது வேலையிலும் உங்கள் செயல்திறனை அதிகரிக்கிறது.

மாலை உடற்பயிற்சியுடன் ஒப்பிடும்போது காலையில் உடற்பயிற்சி செய்வது, குறிப்பாக காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்வது வேகமாக கொழுப்பு எரிக்கப்பட்ட ஊக்குவிக்கிறது. தவிர, இது அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

இதன் சவால்கள் என்ன? 

முதலில், அதிகாலையில் எழுந்து கொள்வதே ஒரு மிகப்பெரிய சவால். காலையில் எழுந்தவுடன்  நீங்கள் பலவீனமாக உணரலாம் , உங்கள் ஆற்றல் அளவு மிகவும் குறைவாக இருக்கலாம், இதனால் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கலாம்.  

நமது உடல் செயல்பாடுகள் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதில்லை, குறிப்பாக இரவில் காற்றுப்பாதைகள் சுருங்குவதால் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இருப்பதில்லை. எனவே, மக்கள் பெரும்பாலும் காலையில் மூச்சு பிடித்து உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கும். 

காலையில் எழுந்த பிறகு, மூட்டுகள் மற்றும் தசைகள் விறைப்பாகின்றன, இதனால் அவை கிழியவும் வாய்ப்புள்ளது. இதனால்தான் ஒரு வொர்க்அவுட்டுக்கு முன், குறிப்பாக காலையில் வார்ம்அப் செய்வது அவசியம்.

உடற்பயிற்சி செய்வதால் கொழுப்பு எரிக்கப்படுகின்றன. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் எரிக்கப்படுவதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் சில அபாய விளைவுகள் ஏற்படலாம் 

மாலை நேர உடற்பயிற்சி:

நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தால், ஒரு மாலை உடற்பயிற்சி உங்களுக்கு சிறந்த விளைவுகளைத் தரும். காலை வேளையைப் போலில்லாமல், உங்கள் உடல் செயல்பாடுகள் மாலை நேரத்தில் உச்சத்தில் செயல்படுகின்றன, இது உங்களுக்கு அதிகபட்ச ஆற்றலையும் சகிப்புத்தன்மையையும் வழங்குகிறது. ஆனால் இதன் மறுபக்கமாக  சோர்வும் நம்மை ஆட்கொள்ள நேரலாம். ஒரு நாள் முழுவதும் வேலை செய்த காரணத்தால் உங்கள் உடலுக்கு ஓய்வு தேவைப்படலாம், அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சரியான செயலாக இருக்கமுடியாது.

நன்மைகள்:

நாளின் பிற்பகுதியில் மூட்டுகள் மற்றும் தசைகளில் குறைவான சிரமங்களைக் கொண்டுள்ளது, அதனால் காயங்கள் ஏற்படும் ஆபத்து குறையலாம். உங்கள் உடல் மாலையில் ஒப்பீட்டளவில் நெகிழ்வானதாக இருப்பதால் விரும்பிய முடிவுகளைப் பெற உகந்த நேரமாக மாலை நேரம் உள்ளது.

ஒரு சோர்வுற்ற நாளுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை விடுவிக்கும். உங்கள் உடல் நன்றாக வியர்த்து விடுவதால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். ஒரு திருப்திகரமான உடற்பயிற்சிக்கு பிறகு, நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்க முடியும்.

இதன் சவால்கள் என்ன?

மாலை நேரத்தில் பல்வேறு வேலைகள் இருக்கலாம். விருந்து, குடும்ப கேளிக்கை, நண்பர்களுடன் அரட்டை, பொது இடங்களில் சந்திப்பு என்று பல்வேறு நிகழ்வுகள் உங்களை மூழ்கடிக்கலாம். உடற்பயிற்சி செய்யாமல் தவிர்ப்பதற்கு இவை அனைத்தும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்வதால் சிலருக்கு தூக்கம் தொடர்பான சிக்கல்கள் உண்டாகும் என்ற காரணத்தால் மாலைநேர உடற்பயிற்சி அவ்வளவு சிறப்பானதாக கருதப்படுவதில்லை.

இறுதி முடிவு:

காலை நேர மற்றும் மாலை நேர உடற்பயிற்சியில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. உங்களுக்கு மட்டுமே உங்கள் உடலைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருவது எந்த நேரம் என்பதை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும்.