கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவதால் ஏற்படும் அழகு சார்ந்த நன்மைகள் 

மனித இனத்திற்கு கஸ்தூரி மஞ்சள் ஒரு வரம். உங்களையும் உங்களை சேர்ந்தவர்களையும் பாதுகாப்பதற்கு இந்த பொருள் பல வழிகளில் பயன்படுகிறது.

கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவதால் ஏற்படும் அழகு சார்ந்த நன்மைகள் 

கஸ்தூரி மஞ்சள் என்றும் அறியப்படும் காட்டு மஞ்சள், தெற்கு ஆசியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். இந்த கஸ்தூரி மஞ்சள் பல்வேறு மருந்திலும், ஒப்பனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த மஞ்சள் அறியப்பட்டு வருகிறது.

காண்பவரை கவர்ந்திழுக்கும் அழகு ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? கூட்டத்தில் உங்களை மட்டும் தனியாக அடையாளம் காண வைக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா? உங்களை பார்த்தவுடன் உங்கள் மேல் கவனமும் நல்ல அபிப்ப்ராயமும் மற்றவர்களுக்கு வர நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதற்கெல்லாம் ஒரே பதில், உங்கள் களங்கமற்ற சருமம். சருமம் களங்கமில்லாமல் அழகாக புத்துணர்ச்சியுடன் எல்லா நேரமும் இருப்பதற்காக நாம் சில தீர்வுகளை செய்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு களங்கமில்லாத அழகான சருமம் இருப்பதால், நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள். அதனால் மற்றவர் உங்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கக் கூடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், பருவ நிலை மாற்றம், மாசு, தூசு, சூரிய ஒளியின் தாக்கம் போன்ற பாதிப்புகளால், நம் கனவு சருமத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை.

ஆனால் இது நிரந்தரமல்ல. களங்கமில்லாத குழந்தையின் சருமத்தைப் போல் எந்த வயதிலும் இளமையுடன் மற்றும் பொலிவுடன் நம் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். தினமும் நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சிறு செயல் இந்த கனவை நிஜமாக மாற்றும். உங்கள் பையில் உள்ள பணம் அதிகம் செலவாகாமல் , உங்களை மற்றவர் முன்னிலையில் சிறப்பாக வெளிபடுத்த முடியும். 

இயற்கை எப்போதும் நமக்கு சிறந்தவற்றை வழங்குகிறது. ஆனால் நாம் அதனை தேடித் போவதில்லை. எப்போதும் விலை உயர்ந்த பொருட்கள் தரமாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். ஆனால் இது தவறு.

கஸ்தூரி மஞ்சள்:
கஸ்தூரி மஞ்சள் என்பது குர்குமா இனத்தை சேர்ந்ததாகும். இதன் தாவர பெயர் குர்குமா ஆரோமடிக். இது ஒரு வித்தியாசமான நறுமணம் மற்றும் வண்ணம் கொண்ட வேர் தண்டுகளைக் கொண்ட காட்டு இஞ்சியாகும்.
இதன் ஒப்பனை அல்லது மருத்துவ பயன்பாடுகளுக்கு அப்பால், கஸ்தூரி மஞ்சளை சமையலுக்கு வண்ணம் மற்றும் வாசனை சேர்க்கும் ஒரு உணவுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

காட்டு மஞ்சள் செடியை அலங்காரத்திலும் பயன்படுத்தலாம். மேலும் இந்த தங்க நிற பொருளை பல்வேறு தீர்வுகளுக்கும் பயன்படுத்தலாம். வாருங்கள் அதனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். அழகு சார்ந்த உங்கள் பல சந்தேகங்களுக்கு கஸ்தூரி மஞ்சள் நல்ல ஒரு தீர்வைக் கொடுக்கும். 

வழக்கமான  மஞ்சள்(குர்குமா லாங்கா  பயன்படுத்துவதால் நமது உடையிலும், முகத்திலும் அதன் நிறம் கறை போல் அப்படியே தங்கி விடும். ஆனால் கஸ்தூரி மஞ்சளில் இந்த நிலை ஏற்படாது. 

கஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் :

கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. இந்த மந்திரப் பொருளில் உள்ள எல்லா நன்மைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அதனை இப்போது பார்க்கலாம்.

அழற்சி எதிர்ப்பு :
கஸ்தூரி மஞ்சள் அல்லது காட்டு மஞ்சள் அற்புதமான அழற்சி எதிர்ப்பு தன்மை  கொண்ட ஒரு பொருள். இயற்கை இடையூறுகளான மாசு, சூரிய ஒளி  பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்கி சருமத்தை பாதுகாக்கிறது. அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட மஞ்சள், சருமத்தில் ஆழ்ந்து வினை புரிந்து அழுக்கைப் போக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

அன்டி ஆக்சிடென்ட்:
உங்கள் சருமம் மிகவும் மிருதுவானது என்பது உங்களுக்குத் தெரியும். பல்வேறு சரும கோளாறுகளை ஏற்படுத்தும் இயற்கை இடையூறுகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
ஆரோக்கியமான சருமத்தால் எளிதாக சுவாசிக்க முடியும். திறந்த  மற்றும் சுத்தமான துளைகள் இருப்பதால், உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் அழகாக தோன்றும். கஸ்தூரி மஞ்சள் ஒரு அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இயற்கை சீர்குலைவால் சருமத்தில் அதிக உற்பத்தியாகும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்க அன்டி ஆக்சிடென்ட் உதவி புரிகிறது. இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் சரும மேற்புறத்தை மட்டும் பாதிக்காமல், சருமதிற்குள் ஆழ்ந்து சென்று சரும அணுக்களை சேதம் செய்து, வயது முதிர்வை உண்டாக்கி, இறுக்கமாக மற்றும் வலிமையாக இருக்கும் சருமத்தை தளர்த்துகின்றன.

அன்டி நியோபிளாஸ்டிக் தன்மை என்னும் உயிரணு புற்று நோய் எதிர்ப்பி :

உங்கள் உடலிலும் சருமத்திலும் வீரியம் வாய்ந்த , கேடு விளைவிக்கின்ற, கொடிய உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய தன்மை இந்த மஞ்சளுக்கு உண்டு. கஸ்தூரி மஞ்சள் ஒரு மிகச்சிறந்த உயிரணு புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருப்பதால், அணுக்களில் புற்று நோய் உண்டாக்கும் அபாயம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது. இதன்மூலம் உங்கள் சருமத்திற்கு புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது. இது வெறும் ஒப்பனைப் பொருளாக இருந்து உங்கள் சரும அழகை மட்டும் பாதுகாப்பதில்லை உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

பக்டீரியா எதிர்ப்பி :
சருமம் சேதமடைய முக்கிய காரணம், பக்டீரியா தாக்குதல். இத்தகைய பக்டீரியா உங்களுக்கு கட்டிகள், பருக்கள், கொப்பளங்கள், தொற்று பாதிப்பு  மற்றும் ஆரோக்கியமற்ற சருமத்தை உண்டாக்கலாம். கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை , இயற்கையின் பரிசாகும். உங்கள் சருமத்தில் தேவையற்ற பாதிப்புகளை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்து மஞ்சள் போராடுகிறது. 

குணப்படுத்தும் தன்மை:
சருமத்தை குணப்படுத்தும் தன்மை கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. காயம், வெட்டு மற்றும் பருக்களில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்து போராட சருமத்திற்கு உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் எளிதில் இந்த கோளாறுகளில் இருந்து குணமடைய முடிகிறது.

இரத்தத்தை சுத்தீகரிக்கிறது:
கஸ்தூரி மஞ்சளை நாம் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை உணவில் சேர்ப்பதால், நச்சுத்தன்மையை அகற்றும் தன்மை கொண்ட இந்த மஞ்சள், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சுத்தமான இரத்தத்தை தருகிறது. தேவையற்ற கூறுகள் உடலில் படிவத்தை எதிர்த்து இரத்தத்திற்கு நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறுகிறது. 

கஸ்தூரி மஞ்சளின் அழகு சார்ந்த நன்மைகள் :
அ. உங்கள் முகத்திற்கு கஸ்தூரி மஞ்சள் :

இதுவரை கஸ்தூரி மஞ்சள் உங்கள் சருமத்திற்கு எவ்வளவு நன்மைகள் செய்கிறது என்பதை அறிந்து கொண்டோம். இப்போது, உங்கள் முகம் கஸ்தூரி மஞ்சளின் பயன்பாட்டால் எவ்வளவு ஜொலிக்கும் என்பதை பார்க்கலாம். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்கள் சருமத்தை பாதுக்காப்பது எவ்வளவு கடினம் என்பது புரிந்திருக்கும். தினமும், க்ளென்சிங், டோனிங் , மாய்ச்சரைசிங் செய்வதோடு நில்லாமல், இன்னும் பல செயல்களை செய்வதால் மட்டுமே களங்கமற்ற சருமத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒரு சிறு சிற்றுண்டி கூட உங்கள் சரும நிலையில் மாற்றத்தை உண்டாக்கலாம். மேலும் உங்கள் சரும சேதத்திற்கு இந்த சுற்றுசூழல் மற்றும் வளிமண்டல பாதிப்பும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் உங்கள் சருமம் தானாகவே அதன் ஆரோக்கியத்தையும் பொலிவையும் இழக்கிறது. ஆனால் நம்பிக்கையை தளர விட வேண்டாம். உங்கள் பர்சை காலி செய்யும் விலையுயர்ந்த செயற்கை மாற்று அல்லது மாத்திரைகளைப் பற்றி இப்போது நான் கூறப்போவதில்லை. இயற்கையான முறையில் எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு. அதனை பற்றி தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம். 

இயற்கை நமக்கு எல்லாவற்றிற்கும் தீர்வுகளைத் தரும்போது செயற்கை பொருட்களை நாம் நாடுவது தவறு. ஆம், கஸ்தூரி மஞ்சள் தான் அந்த தீர்வு. 

அழகுக் கலையில் இந்த காட்டு மஞ்சள் பல நன்மைகளைச் செய்கிறது. உங்கள் எல்லா அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கும்,  செயற்கை ஒப்பனை பொருட்களில் கிடைக்காத ஒரு தீர்வு, கஸ்தூரி மஞ்சளில் கிடைக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

உங்கள் முகத்தை அழகாக்க கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தும் விதங்களை இப்போது பார்க்கலாம்.

1. கட்டிகள் மற்றும் பருக்கள்:
கஸ்தூரி மஞ்சளில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உண்டு. ஆகவே பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து கஸ்தூரி மஞ்சள் போராடுகிறது. உங்கள் சரும துளைகளில் தானாக சேமிக்கப்படும் அழுக்குகளைப் போக்கி, அவற்றை சுத்தம் செய்ய இந்த காட்டு மஞ்சள் உதவுகிறது. இதன் பலனாக உங்களுக்கு பருக்கள் இல்லாத அழகான சருமம் மீண்டும் கிடைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் முகத்தில் உள்ள தேவையற்ற வீக்கங்கள் குறைந்து, பக்டீரியா மற்றும் இதர தொந்தரவால் உண்டாகும் ஒவ்வாமை வினைகள், சிவப்பு புள்ளிகள் அல்லது கோடுகள் போன்றவையும் மறைகின்றன.
உங்கள் சருமமும் பாதுகாக்கப்படுகிறது.

2. திட்டுக்கள் மற்றும் தழும்புகள் :
பருக்கள் மற்றும் கட்டிகளால் உண்டாகும் தழும்புகள் நீண்ட காலம் நீடித்து நிற்கின்றன. கஸ்தூரி மஞ்சள் இந்த தழும்புகளைக் குறைக்கவும், போக்கவும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த மஞ்சளை பயன்படுத்துவதால் இந்த தழும்புகள் மறைகிறது.

3. சூரிய ஒளியால் ஏற்படும் சேதம் மற்றும் சுருக்கம் :
வயது  முதிர்வைப் போக்க கஸ்தூரி மஞ்சள் பெரிய உதவி புரிகிறது. கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் பண்புகள், சூரியனின் யு.வி கதிர் தாக்குதலால் ஏற்படும் சரும பாதிப்பை தடுத்து சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகின்றன. இதனால் உங்கள் சருமம் இளமையாக தோன்றுகிறது மேலும் சுருக்கங்கள் வர விடாமல் செய்கிறது. 

4. வெண்மையான சருமம்:
சருமத்திற்கு வெண்மை தரும் பண்புகளும் கஸ்தூரி மஞ்சளுக்கு உள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதன் காரணமாகத்தான் திருமணத்திற்கு முன் பெண்களை மஞ்சள் நீரில் குளிக்க வைக்கின்றனர் . அழகான வெண்மையான சருமத்தை பெற மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாக பல காலங்களாக உள்ளது. கஸ்தூரி மஞ்சள் இறந்த செல்களை எதிர்த்துப் போராடி சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்து தருகிறது. இதனால், சருமம் சுவாசிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது. இதனால் பொலிவும் பளபளப்பும் தானாக கூடுகிறது. 

5. எண்ணெய் சருமம்:
சருமத்தின் சில இடங்களில் எண்ணெய் படிந்து சேர்வதால் உங்கள் முகம் சோர்வாக தோன்றும். சருமத்தின் அதிகமான எண்ணெய் சுரப்பால் , கட்டிகள், கரும்புள்ளிகள், சருமம் கருமையாக தோன்றுதல் போன்ற பல  சரும பிரச்சனைகள் தோன்றும். சருமத்தில் எண்ணெயில் அளவை சமநிலை படுத்தும் தன்மை கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. இதன்மூலம் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு , உங்கள் முகம் பாதுகாக்கப்படுகிறது.

ஆ. தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள் :
உடலில் தலையைத் தவிர மற்ற இடங்கில் வளரும் முடி, ஆண்களுக்கு எந்த ஒரு தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. ஆண்கள் இத்தகைய முடி வளர்ச்சியை பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை. ஆனால் பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி ஒரு பெரிய தொந்தரவை உண்டாக்குகிறது. முடியில்லாத வழவழ சருமத்தை தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். குறிப்பாக முகம், கை கால் போன்ற இடங்களில் தேவையற்ற முடிகளை அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே அதனை போக்க செயற்கை முறையில் முடிகளை அகற்றும் முறைகளை பின்பற்றி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்ல ஒரு பொருள் இருக்கும்போது செயற்கை பொருட்கள் எதற்கு?

பல நூற்றாண்டுகளாக இந்திய பெண்கள் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி, தேவையற்ற முடியை உடலிலும் முகத்திலும் இருந்து களைந்து வருகின்றனர். கஸ்தூரி மஞ்சள் முடிகளை முற்றிலும் அகற்றி மேலும் முடி வளர்ச்சி ஏற்படாமல் செய்வதாக அனுபவபூர்வமான தகவல் உண்டு.

பயன்படுத்தும் வழி முறைகள் :
முடிகளை அகற்றுவதற்கு முன் ஒன்றை கவனத்தில்  கொள்ள வேண்டும் . இது ஒரு இயற்கையான முடி அகற்றும் சிகிச்சை . ஆகவே உடனடி பலனை எதிர்பார்க்காமல், தேவையான நேரமும் பொறுமையும் அவசியம். எந்த ஒரு ரசாயன சேர்க்கையும் இல்லாததால் ,சிறந்த தீர்வுகள் ஏற்படும்வரை, அமைதியாக பொறுமையாக காத்திருப்பதால் 100 சதவிகித வெற்றி கிடைப்பதாக வழக்குகள் கூறுகின்றன. 

கஸ்தூரி மஞ்சளுடன் குளிர்ந்த காய்ச்சாத பால் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். முடிந்தால் முந்தைய நாள் இரவே இந்த பேஸ்டை செய்து பிரிட்ஜில் வைத்து விடலாம். ஆனால் இது கட்டியாக மாறாமல் சிறிது அதிக பால் சேர்த்து கலந்து வைக்கவும். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடங்களில் முடி வளரும் திசையில் தடவவும். 15 நிமிடங்கள் நன்றாக காய விடவும். பிறகு மெதுவாக உங்கள் விரல் நுனியால் சுழல் வடிவத்தில் ஸ்க்ரப் செய்யவும். அவ்வப்போது அந்த இடம் முற்றிலும் காய்ந்து விடாமல் இருக்க சில துளி தண்ணீர் சேர்த்துக்  கொள்ளவும். பிறகு ஒரு ஈரமான துண்டால் இந்த பேஸ்டை துடைத்து எடுத்து விடவும்.
பாலுக்கு பதில் இனிப்பில்லாத யோகர்டை மஞ்சளுடன் சேர்த்துக் கொள்ளலாம். யோகர்ட்டில் உள்ள அமிலம், உங்கள் சருமத்திற்கு நன்மைகளைச் செய்யும். மேலும் உங்கள் சருமத்திற்கு யோகர்ட் ஈரப்பதத்தைத் தரும், மற்றும் வெண்மையைத் தரும்.

எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். மேலே கூறிய அதே முறையில் இந்த பேஸ்டையும் தடவி, அதே முறையில் சரும முடிகளை நீக்கி, பேஸ்டை முகத்தில் இருந்து நீக்கி விடலாம். எலுமிச்சை சாறு உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள திட்டுகளை போக்கும். எண்ணெய்,  சருமத்திற்கு ஈரப்பதம் தந்து ஒரு வித நறுமணத்தை கொடுக்கும். 

முல்தானிமிட்டி, அல்லது கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்துவதாலும் வெற்றிகரமான தீர்வுகள் கிடைக்கும். 

சிலர் குளிக்கும்போது கஸ்தூரி மஞ்சள்  கிழங்கை பயன்படுத்துவர். முடி அதிகம் உள்ள இடத்தில் ,மஞ்சள் கிழங்கை வைத்து முடி வளரும் திசை நோக்கி தேய்க்கலாம். சில நிமிடம் இந்த மஞ்சள் உங்கள் சருமத்தில் இருந்த பிறகு  சுழல் வடிவ மசாஜ் செய்யலாம். இதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதால் முடிகள் அகன்று வழவழப்பான திட்டுக்கள் இல்லாத  பொலிவான  சருமம் உங்களுக்கு கிடைக்கும். ஒரு மாதம் வரை தொடர்ந்து இதனை பின்பற்றினால் நல்ல விளைவுகளும் மாற்றங்களும் கிடைக்கும். கட்டாயம் முயற்சி செய்யுங்கள்.

இ. கஸ்தூரி மஞ்சள் மற்றும் தேன் :
இயற்கையின் மற்றொரு வரப்பிரசாதம் தேன் . இது உங்கள் உடல்நல சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் அதன் நன்மைகளை வழங்குகிறது. இன்றைய தினம் அதன் சருமத்தை  மேம்படுத்தும் குணங்களை  பற்றி நான் உங்களுக்கு முழுமையாகப் கூறுகிறேன். தேன் இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. பருக்கள் மற்றும் கட்டிகளை எதிர்த்து போராடுவதற்கான சக்தியை இந்த பக்டீரியா எதிர்ப்பு தன்மை தருகிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. மேலும் இந்த இனிப்பு சுவையுடைய திரவத்தின் நற்பலன்களை யாரும் அறிவதில்லை.

சருமத்திற்கு ஈரப்பதம் வழங்குவதோடு மட்டும் இல்லாமல், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆம், இந்த தங்க நிற திரவம், சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் சருமத்தின் வலிமை பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம், உங்கள் சருமம்  தளர்ந்து விடாமல், இறுக்கமாக இளமையுடன் இருக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள பயனற்ற இறந்த அணுக்களை போக்கி, சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறுகிறது. இதனால் சரும துளைகள் ஆரோக்கியமாகவும் திறந்தும் இருப்பதால் சருமம் சீராக சுவாசிக்க முடிகிறது.


முகத்தில் உள்ள தழும்புகளை போக்க தேன் உதவுகிறது. நீண்ட நாட்களாக மறையாமல் இருக்கும் தழும்புகள் கூட தேன் பயன்படுத்துவதால் சில நாட்களில் முற்றிலும் மறைந்து விடுகிறது. 

கஸ்தூரி மஞ்சள் மற்றும் தேனின் நன்மைகளைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு பெண் தனது அழகு குறிப்பில் இந்த இரண்டு பொருட்களையும் தவறாமல் இணைத்துக் கொள்வதால், அவளுடைய சருமம் நிச்சயமாக பாதுகாக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. 

இந்த இரண்டு பொருட்களின் கலவையால் ஏற்படும் அழகு குறித்த நண்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்த இரண்டு பக்டீரியா எதிர்ப்பு பொருட்களைக் கொண்டு முகத்தில் உண்டாகும் கட்டிகளைப் போக்கலாம். இந்த பொருட்கள், பருக்களை ஏற்படுத்தும் பக்டீரியாகளை அழித்து மீண்டும் அவை வளராமல் தடுக்கின்றன.

பழைய பருக்களும் கட்டிகளும் காய்ந்து போனதால் உண்டான கடினமான தழும்புகள் கூட, இந்த மந்திர பொருட்கள் மூலம் எளிதில் மறைந்து விடுகின்றன. ஆனால் இவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். 

வயது முதிர்வு மற்றும் சரும நிறமிழப்பு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க இந்த பொருட்களை நீங்கள் தினசரி பயன்படுத்தலாம்.

களங்கமற்ற சருமத்தைப் பெற இந்த இரட்டையர்கள் வழி வகுப்பார்கள். உங்கள் முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்யை தடுத்து, சரும புத்துணர்ச்சியை உண்டாக்குவார்கள். இதனால் உங்கள் சருமம் மிருதுவாக மாறும்.

ஈ. கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தி பேஸ் பேக் :
உங்கள் அழகு முயற்சிகளில் முக்கியமான பங்கு வகிப்பது முகத்திற்கு பயன்படுத்தும் பேஸ் பேக். இதன் மூலம் களங்கமற்ற சருமம் கிடைப்பது உறுதி. 
இன்றைய காலகட்டத்தில் நாம் எங்கு சென்றாலும் மாசும் தூசும் நம்முடன் சேர்ந்தே வரும். ஆகவே நம்முடைய சருமத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது களங்கமில்லாத சருமம் பெறுவதற்கான முக்கிய வழியாகும். கீழே கூறியுள்ள குறிப்புகளில் உங்களுக்கு ஏற்ற விதத்தில் எந்த  பேஸ் பேக் தினசரி பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

1. யோகர்ட் மற்றும் கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள்:
கஸ்தூரி மஞ்சளுடன் சம அளவு கடலை மாவு சேர்க்கவும். அழகு குறிப்புகளுக்கு கடலை மாவு நன்மைகளைச் செய்யும் என்பதை  நாம் அனைவரும் அறிந்ததே. சரியான எண்ணெய் சமநிலையை நிர்வகிக்கும் திறன் கடலை மாவிற்கு உண்டு. சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. உங்கள் வெண்மையை அதிகரிக்க உதவுகிறது. சரும திட்டுகளையும் தழும்புகளையும் போக்கி, கட்டிகள் மற்றும் பருக்கள் இல்லாத சருமத்தை பெற கடலை மாவை பயன்படுத்தலாம். இத்தகைய சிறப்பு மிக்க கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சளின் ஒருங்கிணைந்த வடிவம், உங்கள் சருமத்திற்கு பல விந்தைகளைச் செய்யும். 
யோகர்ட் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தரும். இயற்கையான ஒரு பொலிவைத் தரும். சோர்வை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும்.

இந்த மூன்றும் சேர்ந்த ஒரு பேஸ் பேக், தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், ஒரு மாதத்தில் வெண்மையான சருமம் பெறலாம்.

2. எலுமிச்சை மற்றும் தேனுடன் கஸ்தூரி மஞ்சள்:
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. சருமத்தில் உண்டாகும் கருந்த்திட்டுகளை எதிர்த்து போராட உதவுகிறது . மேலும் அவை திரும்ப வராமல் தடுக்கிறது. தேன், முன்பே கூறியது போல் இயற்கையின் ஒரு வரப்பிரசாதம்.  

எலுமிச்சை, தேன் மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவை உங்கள் சருமத்தின் உண்மையான அழகை மீட்டுத் தரும்.

3. பால் மற்றும் முல்தானிமிட்டியுடன் கஸ்தூரி மஞ்சள்:
கடலை மாவு முல்தானி முட்டிக்கு ஒரே குணங்கள் உண்டு. உங்கள் சருமத்திற்கு தேவையான புத்துணர்ச்சியைத் தர உதவுவது பால். பால் உங்கள் சருமத்தின் உள்ளிருந்து மிருதுவாக்கி, ஒவ்வொரு  துளையையும்  ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.
காய்ச்சாத குளிர்ந்த பால் , கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் முல்தானிமிட்டியுடன் சேர்க்கப்படுவதால், அதன் குளிர்ச்சி சருமத்தில் நீடித்து நிற்க உதவுகிறது. இதனால் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது. 

4. மைசூர் பருப்பு மற்றும் பன்னீருடன் கஸ்தூரி மஞ்சள்:
பிங்க் நிறத்தில் இருக்கும் மைசூர் பருப்பு ஒரு அருமையான ப்ளீச். இது இயற்கையாக மென்மையாக இருக்கும். சருமத்தின் எந்த ஒரு பகுதியிலும் இதனை பயன்படுத்தலாம். இந்த பருப்பை பொடியாக்கி, கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவுவதால் நீங்கள் விரும்பும் அழகை உங்கள் சருமம் பெற்றிடும்.

5. தக்காளி விழுது, மற்றும் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கஸ்தூரி மஞ்சள்:
தக்காளி ஒரு சிறந்த ப்ளீச். இது ஒரு மென்மையான பொருள். சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை சேதத்தில் இருந்து மீட்க தக்காளி உதவுகிறது. பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் ஒரு நறுமணத்தை சருமத்திற்கு கொடுக்கிறது.

உ. குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சள்:
குழந்தைகளின் சருமம் மிகவும் சரியானது. அவர்களின் சருமத்தின் மென்மை அனைவரையும் மயக்கும் தன்மை கொண்டது. சில குழந்தைகள் பிறக்கும்போதே சருமத்தில் அதிக முடியுடன், கருப்பாக இருப்பார்கள். பல குழந்தைகள் பளபளப்பு குறைவாக இருக்கும்போது அவர்களின் கருமை நிறம் அவர்களின் தோற்றத்தை இன்னும் கடினமாக மாற்றும். ஆனால் இதனை போக்குவது எப்படி? எந்த ஒரு ரசாயனத்தையும் தாங்கும் அளவிற்கு அவர்களுடைய சருமம் வலிமையாக இருக்காது. ஆகவே ரசாயனப் பொருட்களின் பயன்பாடு, அவர்களின்  சருமத்தில் தேவையற்ற பாதிப்பை உண்டாக்கும். ஆனால் கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவதால் அவர்களின் சருமம் பாதுகாக்கப்படும்.

பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதில் கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவதால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. ஒரு மாத குழந்தைக்கு  கூட கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குழந்தையின் உடலில் தேய்ப்பதால், தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் முடிகள் இல்லாத வழவழப்பான சருமம் குழந்தைக்கு கிடைக்கிறது. மேலும் குழந்தையின் சருமம் அதிக வெண்மையாக களங்கமில்லாமல் மாறுகிறது.

கஸ்தூரி மஞ்சள் குளியல், குழந்தைக்கு மேலும் நன்மையைத் தருகிறது. கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மையால், குழந்தைக்கு சரும தொடர்பான பிரச்சனைகளான, ஒவ்வாமை, சிவப்பு தடிப்புகள் போன்றவை ஏறப்டாமல் தடுக்கப்படுகிறது. 

கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தி அழகு குறிப்புகள்:
இன்று இந்த பதிவின் மூலம் கஸ்தூரி மஞ்சள் பற்றிய பல உண்மைகளையும் அதன் நன்மைகளையும்  நீங்கள் அறிந்து கொண்டிருபீர்கள். இதனை உடனடியாக பயன்படுத்தும் ஆவல் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். 

இந்த ஒப்பனை பொருள் தொடர்பான சில அழகு குறிப்புகளை இப்போது நாம் பார்க்கலாம்.
ஆயுர்வேத கடைகளில் கஸ்தூரி மஞ்சள் தூள் கிடைக்கும். இதனை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை நீங்கள் உங்கள் சரும அழகிற்கு பயன்படுத்துவதால் உங்கள் உடைகளில் இந்த மஞ்சள் நிறக் கறை படியும்.

உங்கள் சரும வகைக்கு இந்த கஸ்தூரி மஞ்சள் ஏற்புடையதாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள உங்கள் சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் சோதித்து பின்பு பயன்படுத்தவும்.

தொடர்ந்து கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்துவதால் உங்கள் பருக்கள் மற்றும் கட்டிகள் கட்டுப்படும். மற்றும் சரும அழற்சி மற்றும் கிருமி பாதிப்பின் காரணமாக உண்டாகும்  இதர ஒவ்வாமை வினைகளில் இருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கஸ்தூரி மஞ்சளால் நிவாரணம் பெறும். சூரிய ஒளி பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தினமும் கஸ்தூரி மஞ்சளை தடவுங்கள்.

வெளியில் செல்வதற்கு சற்று முன்னரே கஸ்தூரி மஞ்சள் பேஸ்டை பயன்படுத்துங்கள். இல்லையேல் உங்கள் முகத்திலும் ஆடையிலும் இந்த மஞ்சள் கறை பதியலாம்.