முடி வளர்ச்சிக்கு சீன மூலிகைகள்

அநேகமாக உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இருக்கும் என்றால் அது முடி உதிரும் பிரச்சனையாகத்தான் இருக்கும்.

முடி வளர்ச்சிக்கு சீன மூலிகைகள்

நீள முடி கொண்டவரும் முடி கொட்டும் பிரச்சனையை சந்தித்திருப்பர். குறைந்த முடி கொண்டவரும் இந்த பிரச்சனையை கொண்டிருப்பர். இதனை பல்வேறு தீர்வுகள் கொண்டு முயற்சித்தும் பலன் கிடைக்காதவர்கள் சீன மூலிகையை முயற்சித்து பாருங்கள். 

சீன மூலிகைகள் தனித்து மற்றும் பல மூலிகைகளுடன் சேர்ந்து பல நிவாரணங்களை கொடுக்கிறது . பல நூற்றாண்டுகளாக இந்த முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த சீன மூலிகைகள், முடிகளுக்கு இயற்கையான நிறத்தை தக்க வைக்க உதவுகிறது . 

ஃபோ-டி :
முடி வளர்ச்சிக்கு இது பல ஆண்டுகளாக பயன்படுத்த படுகின்றது. இது இயற்கையான நிறத்தை தக்க வைக்க உதவுகிறது. இதனை ஹி-ஷோ-வு என்றும் கூறுவர். உடலுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

ரெய்ஷி  மஷ்ரூம்:
சீனாவின் பல இடங்களில் இது கிடைக்கப்படுகிறது. முடியின் வேர்கால்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. தலையில் கட்டி அல்லது புண் ஏற்படுவதால் ஒரு வித அரிப்பு ஏற்பட்டு முடி கொட்டும். அந்த வகை பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வை தருகிறது. அலோபதி மருந்துகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

நு ஷென் சி :
முடி வளர்ச்சிக்கு உதவும் மற்றொரு மூலிகை இது. வழுக்கையால் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு மீட்டு  தருகிறது. நு ஷென் சி , இரத்தத்தை சுத்தம் செய்கிறது. தலை பாகத்திற்கு செல்லும்  இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உச்சந்தலையில் உள்ள தோல் பகுதியை சீராக்கி, சோரியாசிஸ் மற்றும் வேறு தோல் பிரச்சனைகள் தலை முடியை பாதிக்காதவாறு  காக்கின்றது. இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

வ்உ வெய் ஜின் : 
அழகை மேம்படுத்த இந்த மூலிகை பெரிதும் உதவுகிறது.இரத்த சுத்திகரிப்பை மேம்படுத்த உதவும் ஒரு டானிக் போல் செயலாற்றுகிறது. வழுக்கையை குறைக்கிறது. பட்டு போன்ற மென்மையான தலை முடியை பெற இது ஒரு சிறந்த தீர்வாகும். வழுக்கைக்கான பல்வேறு காரணங்களையும் இது களைகிறது 

மோரஸ் ஆல்பஸ் :
இந்த மூலிகை குறிப்பாக நரை முடியை தடுக்கிறது. இதனை எளிய முறையில் வீட்டிலேயே வளர்க்க முடியும். இது ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.
சீனர்கள் பொதுவாக அவர்களின் பாரம்பரிய முறைகளை  பின்பற்றி ஒரு பிரச்சனையின் வேரிலிருந்து களைய முயற்சி செய்வர். ஆகவே இன்றைய காலத்தில், உலகில் பலரும் சீனர்களின் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தின் படி தீர்வுகளை பெற நினைக்கின்றனர். இவர்களின் மூலிகைகள் பெரும்பாலும் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் சீன சந்தைகளில் கிடைக்கப்படுகின்றன. எளிதாக கிடைக்க கூடியதும் , விலை மலிவாக கிடைக்கக்கூடியதும் இதன் சிறப்பாகும்.

சீனர்கள் பொதுவாக இந்த மூலிகைகளை சுத்தமாகக்  கழுவிவிட்டு பச்சையாக சாப்பிடுவர். மற்றவர்களும் இதனை பின்பற்றலாம் , அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். 
குறைந்த கால அவகாசத்தில் இதன் தீர்வுகளை நாம் உணர முடியும். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.