கிராம்பின் மகத்துவம் 

நம் சமையலறையில் உள்ள மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களுள் கிராம்பும் ஒன்றாகும். 

கிராம்பின் மகத்துவம் 

நாம் அன்றாட உணவில் உபயோகிக்கும் கிராம்பின் மகத்துவத்தை பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம். 

கிராம்பு இந்தோனேசியாவை பிறப்பிடமாக கொண்டது. இதில் உள்ள யூஜீனால் வலி நிவாரணியாகவும், அழற்சி நீக்கவும் பயன்படுகிறது. இது சமையலில் வாசனைக்காகவும், உடல் உபாதை ஏற்படும் போது மருந்தாகவும், நம் முன்னோர்கள்  பயன்படுத்தினார்கள்.

கிராம்பில் உள்ள சத்துகள்:

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், மினரல்,  ஹைட்ரோகுளோரிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள்,   தயாமின், ரிபோபிளேவின், நயாசின், வைட்டமின் சி,  ஈ மற்றும் கே போன்றவை  உள்ளன.

கிராம்பின் நன்மைகள்:

கிராம்பில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும். இது நீரிழிவு நோயையும், தூக்கமின்மையும், ஆஸ்துமாவையும்  கட்டுபடுத்தும். கிராம்பில் உள்ள யூஜினால் என்ற பொருள் பல் வலியை போக்கும் மேலும் நம் உடலுக்கு குளிர்ச்சியூட்டி எப்பொழுதும் புத்துணர்வோடு இருக்க வைக்கும். குளிர் காலத்தில் வரும் சளி, இருமல், சுவாச பிரச்சனையிலிருந்து நம்மை விடுவிக்கும். நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளை அணுக்களை பெருக்கி நோயிலிருந்து பாதுகாக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். செரிமான கோளாறையும், ஈறுகளில் ஏற்படும்புண்களையும், தொண்டை புண்ணையும்   சரி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

கிராம்பை உபயோகிக்கும் முறைகள்:

  1. ஒரு கப் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் கிராம்புத்தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை அப்படியே  வைத்தபிறகு அதை எடுத்து குடிக்கலாம் இவ்வாறாக செய்தால்  ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
  2. சிறிது கிராம்பு, துளசி மற்றும் இஞ்சியை ஒன்றாக அரைத்து அதிலிருந்து வரும் சாறை வடிகட்டி  எடுத்து அரை கப் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், நம் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
  3. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
  4. சிறிது இந்து உப்புடன் கிராம்பு பொடியை  கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
  5. கிராம்பு எண்ணெயுடன்  சிறிது தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு கலந்து  சாப்பிட்டு வர ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசப் பிரச்சனை சரியாகும் .
  6. 2 அல்லது 3  கிராம்பை பல்வலி உள்ள இடத்தில் கடித்து வைத்திருந்தால் பல் வலி சரியாகிவிடும் .
  7. இரண்டு கிராம் கிராம்பை  ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகும் வரை  கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமாகும் .
  8. கிராம்பு எண்ணெய்யை பல் வலி உள்ள இடத்திலோ,      ஈறிலோ  தேய்த்து  வர பல் வலியையும், ஈறு  பிரச்சினைகளையும், வாய் துர்நாற்றத்தையும் குணமாக்கும்.                

கிராம்பில்  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. கிராம்பில் உள்ள யூஜினால்  ஜீரண சக்தியை அதிகரிக்கும் எடையை குறைக்கவும் ,பல் வலியைப் போக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கவும், தொண்டை புண், சளி, இருமல்,  தலைவலி, நுரையீரல் புற்றுநோயையும்{ஆரம்ப  காலத்தில்  இருந்தால்] குணமாக்கும் ஆற்றல் கொண்டது. கிராம்பை அளவோடு உட்கொண்டால் நலமாக வாழலாம்.