நட்சத்திர அதிபதிகள் பற்றி அறிந்து கொள்வோம் !

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தன்று அவர் நட்சத்திரத்திற்கு உரிய தெய்வத்தை வழிபட்டால் அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த தீமையினால் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பம் குறைவதோடு, அவர்கள் வேண்டுவதும் நிறைவேறும்.

நட்சத்திர அதிபதிகள் பற்றி அறிந்து கொள்வோம் !

நட்சத்திர அதிபதிகள்  

ராசிக்கு அதிபதிகள் இருப்பது போல், 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிரகமும் 3 நட்சத்திரங்களுக்கு அதிபதியாக இருக்கின்றது. எந்த கிரகம் எந்தெந்த நட்சத்திரத்திற்கு அதிபதியாக உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

நட்சத்திர அதிபதி மற்றும் அவருக்குரிய தெய்வம்

கேது - அஸ்வினி, மகம், மூலம். இந்த நட்சத்திர காரர்கள் விநாயகரை வழிபட வேண்டும்.                                     

சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம். இந்த நட்சத்திர காரர்கள் மகாலட்சுமியை வழிபட வேண்டும். 

சூரியன் - கிருத்திகை, உத்திரம், உத்தாடம். இந்த நட்சத்திர காரர்கள் சிவனை வழிபட வேண்டும். 

சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.இந்த நட்சத்திர காரர்கள் சக்தியை வழிபட வேண்டும். 

செவ்வாய் - மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம். இந்த நட்சத்திர காரர்கள் முருகனை வழிபட வேண்டும். 

ராகு - திருவாதிரை, சுவாதி, சதயம். இந்த நட்சத்திர காரர்கள் காளியை வழிபட வேண்டும். 

குரு - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இந்த நட்சத்திர காரர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். 

சனி - பூசம், அனுசம், உத்தரட்டாதி. சிவன் மற்றும் விநாயகரை வழிபட வேண்டும். 

புதன் - ஆயில்யம், கேட்டை, ரேவதி. இந்த நட்சத்திர காரர்கள் பெருமாளை வழிபட வேண்டும். 

                                                                                                             

ராசி அதிபதியை மட்டுமல்ல, நட்சத்திர அதிபதிகளையும் பொருத்தே ஒருவரின் நட்சத்திர குணாதிசயங்கள் இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களுடைய ராசிக்கு உரிய தெய்வத்தையும், நட்சத்திரத்திற்கு உரிய தெய்வத்தையும் வழிபட்டால் அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த தீமையினால் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பம் குறைவதோடு, அவர்கள் வேண்டுவதும் நிறைவேறும்.