உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் மூக்கு உரைப்பதைக் கேளுங்கள்

உங்கள் உடலின் ஆரோக்கியம் பற்றி மூன்று விஷயங்களை உங்கள் மூக்கு சொல்கிறது. இதனை மூக்கு ஜோசியம் என்று கூட சொல்லலாம்.

உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் மூக்கு உரைப்பதைக் கேளுங்கள்

பொதுவாக உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பல உள்ளன. ஆனால் உங்கள் உடலின் ஆரோக்கியம் பற்றி மூக்கு சொல்வது பற்றி நீங்கள் கேட்டதுண்டா? இப்போது பாருங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மூக்கு சொல்லும் 3 விஷயங்களைப் பற்றி நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம். 

உங்கள் உடலின்  ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடலில் உள்ள நோய்கள் பற்றி மூக்கு வெளியிடும் அறிகுறிகளைப் பற்றி இப்போது நாம் இந்த பதிவில் காணலாம்.

மூக்கின் தலையாய செயல்பாடு நுகர்தல். ஐம்புலன்களில் நுகர்தல் தொழிலைச் செய்யும் இந்த மூக்கு தனது முக்கிய தொழிலாகிய நுகர்தலை சீராக செய்யாமல் இருந்தால் உடலில் சில வகை தொந்தரவுகள் இருப்பதை நமக்கு உணர்த்தும். அந்த பாதிப்புகள் என்ன என்பதை இப்பது நாம் கீழே காணலாம். 

1. நுகர்வதில் பிரச்சனை  உண்டாவது:

இது இறப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆம், பயப்பட வேண்டாம். 

பொதுவாக சளி பிடித்தால் நுகர்வதில் பாதிப்பு இருக்கும். நம்மால் எந்த ஒரு வாசனையையும் நுகர முடியாது. ஆனால் சளி இல்லாத நேரத்திலும் மூக்கின் அடிப்படை வேலையான நுகர்வதில் பாதிப்பு இருக்குமாயின் உடல் ஆரோக்கியத்தில் ஆழ்ந்த கவனம் தேவை என்பதை அது உங்களுக்கு உணர்த்துகிறது.

சிகாகோ மருத்துவ மையத்தின் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, நுகர்தல் குறைபாடானது 5 வருட முன்கூட்டிய இறப்பு வீதத்தை பெரியவர்களிடம் கணித்துள்ளது. அடிப்படையில், சில குறிப்பிட்டுள்ள வாசனையை ஒருவர்  உணர முடியாமல் இருந்தால் அடுத்த 5 வருடத்திற்குள் அவருக்கு இறப்பிற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அறியப்படுகின்றன.

அந்த ஆய்வில், ரோஜா , பெப்பர்மின்ட் மற்றும் ஆரஞ்சின் வாசனையை முற்றிலும் நுகர முடியாத 39 சதவிகித பெரியவர்கள் விரைவில் இறந்திருக்கின்றனர். இந்த வாசனையை ஓரளவிற்கு நுகரும் தன்மை கொண்டவர்கள் 19% பேர். மற்றும் 10% பேர் நல்ல மோப்ப தன்மையுடன் விளங்கியதாக இந்த ஆய்வு கூறுகிறது.

2. வாசனை இருப்பது போன்ற பிரமை : 

இது ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம்.

உங்களைச் சுற்றி எந்த ஒரு வாசனையும் இல்லாமல் இருந்தாலும் காற்றில் எதோ ஒரு வாசம் இருப்பது போன்ற உணர்வு உங்களுக்கு தோன்றும். இது ஒரு கெட்ட செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறது. 

மான்டிஃபையர் தலைவலி மையம் நடத்திய ஆய்வுகளின் மதிப்பீட்டின்படி,  கற்பனையான வாசனை உண்டாவது , ஒற்றைத் தலைவலிக்கு முந்தைய நிலை ஆகும் என்பதை தெரிவிக்கிறது. 

3. நுகர்வுத் திறனில் பாதிப்பு இருப்பது:

இது அல்சைமராக இருக்கலாம்.

நுகர்வுத் திறனில் குறைபாடு இருப்பது அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறிகளுடன் நேரடித் தொடர்பு உள்ளதாக ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆய்வு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அமிலாய்டு பிளேக் அதிக அளவு உள்ளவர்கள், நுகர்வுத் திறன் பரிசோதனையில் மிகவும் திறனற்று செயல்பட்டதாகவும் , இவர்கள் மூளையின் அணுக்கள் பெரிய அளவில் செயலிழந்து காணப்படுவதாகவும் ஒரு ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. அமிலைடு பிளேக் என்பது அல்சைமர் நோயாளிகளின் மூளையில் காணப்படும் ஒரு புரதம் ஆகும். 

இந்த நோய் மூளையில் உள்ள அணுக்களை அழிக்க முற்படும்போது வாசனையை உணர்த்தும் அணுக்களும் அழிகின்றன. இதனால் நுகர்வுத் திறனில் பாதிப்பு உண்டாகிறது. 

ஆகவே, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு இல்லாத நேரத்தில் நுகர்வுத் திறனில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவாக அறிந்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செயலாகும்.