தினமும் தயிர்  சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

தயிர் பாலில் இருந்து கிடைக்கும் ஒரு  உணவு பொருள். அநேகமாக அனைவர் வீடுகளிலும் இருக்கும் ஒரு பிரதான உணவு.

தினமும் தயிர்  சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

எளிதில் கிடைக்க கூடிய இந்த உணவு பொருளை வைத்து இனிப்பு காரம் என பல சுவையான உணவு பண்டங்களை செய்யலாம். விலை மலிவாக கிடைக்கும் இந்த உணவில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 கிராம் தயிரில் 98 கலோரிகள் உள்ளன. இந்த ஆரோக்கிய உணவின் பயன்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ப்ரோபையோட்டிக் என்பது ஒரு நுண்ணுயிர். அது  உணவு செரிமானத்திற்கு துணை புரியும். இந்த நுண்ணுயிர் தயிரில் அதிகம் இருப்பதால் நாம் தயிர் உட்கொள்ளும்போது செரிமானப் பகுதியில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்கள் வளர துணை புரிகின்றது. வயிற்று வலி, வீக்கம், வயிற்று பிடிப்பு,குடல் நோய் போன்றவைகள் வராமல் இந்த ப்ரோபையோடிக்ஸ்கள் பாதுகாக்கின்றன.

மற்ற உணவுப்பொருட்களில் இந்த ப்ரோபையோடிக்ஸ்கள் இருந்தாலும், தயிர் போன்ற உணவில் இருப்பதை உடல் அதிகமாக உறிஞ்சி கொள்கின்றது.

பால் அருந்தினால் சிலருக்கு எளிதில் செரிமானம் அடைவதில்லை என்று  
கூறுவர் . அதற்கு  காரணம் பாலில் அதிகமான லாக்டோஸ் இருப்பது. அப்படிப்பட்டவர்கள் பாலுக்கு பதில் தயிர் சேர்த்துக் கொள்வதால் அந்த லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறி எளிதில் செரிமானம் ஆகிறது. அதோடு பாலின் மற்ற சத்துகளும் அப்படியே கிடைக்கிறது.

கார்டிசோல் என்ற ஹார்மோன் கொழுப்பு செல்களை தூண்டி வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது.உடலில் கால்சியம் சத்து இருந்தால் அது இந்த கார்டிசோல் ஹோர்மோன் சுரப்பதை தடுத்து வயிற்று பகுதியில் கொழுப்பு சேருவதை குறைக்கும். தயிரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. தினமும் 1 கப் தயிர் சாப்பிடுவதால்  இந்த கொழுப்பு சேருவதை தவிர்க்க முடியும். இதனால் நமது உடலமைப்பு சீராக இருக்கும். தயிர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் கிருமிகளுடன் போராடி உடலை சீரமைக்கிறது. இதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. யோனி பகுதியைச் சுற்றியுள்ள ஈஸ்ட் தொற்றுகளைத் தடுப்பதற்கு  உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக  தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது.


தயிரில் பாஸ்போரோஸ் அதிகமாக உள்ளது. இது எலும்பு வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் ஆர்த்ரிடிஸ் , ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தடுக்கப் படுகின்றன.

தயிரில் வைட்டமின் ஏ , பி-12 , டி , ஆகியவை  அதிகமாக  உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் திசுக்களின் செயல்பாடு ஆகியவற்றை சீரமைக்கும்  என்று 2013 வருடம்  "Journal of Biological Regulators and Homeostatic Agents, செய்த ஒரு ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. 

பால் பொருளாகிய தயிரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். அதனால் பற்களுக்கும் அது பலத்தை கொடுக்கிறது.

தமனியின் பரப்பளவுக்கு கொழுப்பு பரவுவதை குறைப்பதால்  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தயிர் உணவு உதவுகிறது. இதனால்  கரோனரி நோய்கள் வரும் அபாயத்தை  குறைக்கிறது
உயர் இரத்த அழுத்தம்   பல இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம். தயிர் சாப்பிடுவதால் இந்த உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். 

தயிரை அப்படியே உட்கொள்வதற்கு சில  குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் உண்ணுவதற்கு ஏற்றார் போல் காய்கறிகளுடன் அல்லது பழங்களுடன் சேர்த்து உன்னைக் கொடுக்கலாம். இதனால் தயியருடன் சேர்த்து மற்ற காய் , பழங்களின் ஊட்டச்சத்தும் கிடைக்கும். 
 அல்லது வடை போன்ற பலகாரங்களுடன் சேர்த்து கொடுக்கலாம்.

மன அழுத்தம் அல்லது பதட்டம் அதிகமாக இருக்கும் நேரம் அது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். அதிலிருந்து மீள்வதற்கு ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி அடையவும் வழிகளை கண்டுபிடிப்பது அவசியம். அப்படி செய்வதுடன் தயிர் போன்ற ஒரு உணவை சாப்பிடுவதும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.  வலிகள் மற்றும் உணர்ச்சிகளின் தொடர்புடைய மூளை செயல்பாட்டில் தயிர் போன்ற உணவிற்கும் ஒரு பங்கு இருக்கிறது.

100கிராம் தயிரின் ஊட்டச்சத்துகள் அளவு:

கொழுப்பு - 4.3 கிராம்
கார்போஹைட்ரேட் - 3.4 கிராம்
புரோட்டீன் -  11 கிராம் 
சோடியம் - 364 மி.கி
பொட்டாசியம் 104 மி.கி