எண்ணிய காரியம் நிறைவேற - சாய்பாபா விரத விதிமுறைகள்

சாய்பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து 9 வியாழக்கிழமை விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயம் விரும்பிய பலனை அடையலாம்.

எண்ணிய காரியம் நிறைவேற - சாய்பாபா விரத விதிமுறைகள்

சாய் பாபா விரதம்:

இந்த கலியுகத்தில் அவதரித்த மகான்கள் பலர் அவர்களுள்  ஒருவரான சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம். சாய்பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து 9 வியாழக்கிழமை விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயம் விரும்பிய பலனை அடையலாம்.

தமிழக மக்களுக்கு சீரடி சாய்பாபாவின் விரத விதிமுறைகளை எடுத்துரைக்க இது எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். சாய் விரதம் மேற்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை படிக்கவும்.  

சாய்பாபா விரத விதிமுறைகள்:

  1. இந்த விரதத்தை ஆண் பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த விரதத்தை சாதி மத பேதமும் இன்றி எந்த சார்புகளும் செய்யலாம்.
  2. இந்த விரதம்  அற்புத பலன்கள் தர வல்லது. வியாழக்கிழமைகள் விதிமுறையின் படி விரதம் இருந்தால் நிச்சயம் விரும்பி எண்ணங்கள் நிறைவேறும்.
  3. எந்த ஒரு வியாழக்கிழமையிலும்  சாய் நாமத்தை எண்ணி விரதத்தை ஆரம்பிக்கலாம்.
  4. காலை அல்லது மாலை சாயி பூஜை செய்ய வேண்டும்.  ஒரு தூய பலகையில் மஞ்சள் துணி விரித்து அதன் மேல் சாய்பாபா புகைப்படம் அல்லது விக்ரகத்தை  வைத்து, சந்தன, குங்குமம் வைத்து மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவிக்க வேண்டும்.
  5. ஊதுபத்தியும், விளக்கும் ஏற்ற வேண்டும்.
  6. சாய் பாபாவின் பாடல்களான சாய் பாபா ஸ்மரனை, சாய் பாபா பாவனி,  சாய் பாபா பாமாலை, சாய் பாபா பிரார்த்தனை , சாயிநாதர் அஷ்டகம் போன்ற பாடல்களை பாட வேண்டும்.
  7. சாய்பாபாவிற்கு  நைவேத்தியம் வைத்து பூஜை செய்த பிறகு பிரசாதத்தை விநியோகிக்கவும்.
  8. இந்த விரதத்தை பழம், திரவ ஆகாரங்கள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள். ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதத்தை செய்யக்கூடாது.
  9. ஒன்பது வியாழக் கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாய்பாபாவை மனதார நினைத்து பூஜை செய்யவும்.
  10. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை தொடரலாம்.
  11. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு (அல்லது) பிற காரணங்களாலோ விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக் கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல். இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
  12. இந்த விரதத்தை  நிறைவு செய்யும் போது ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க இயலாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவோ, உணவாகவோ கொடுத்து அனுப்பலாம். 

மேற்கூறிய விதிமுறையின்படி விரதத்தை செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.