அன்றாடம் பயன்படுத்தும் ரேடியோ மற்றும் செல்போன் அலைகள்

செல்போன் இயக்கத்திற்கு பயன்படும் கதிர்கள் பற்றி காண்போம்

அன்றாடம்  பயன்படுத்தும்  ரேடியோ மற்றும் செல்போன் அலைகள்

நாம் பல ஆண்டுகளாக ரேடியோவை பயன்படுத்தி வருகிறோம். ரேடியோ அலைகள் எனப்படும் கதிர்களின் பரிமாற்றத்தால் இயங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிவோம். ரேடியோவின் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் அலைகள் ரேடியோ அலைகள் ஆகும். அதே போன்ற அலைகள் தான் செல்போனிலும் பயன்படுகின்றன.  செல் போன் பயன்பாட்டிற்கு உதவும் அலைகள் மைக்ரோ வேவ்ஸ் என கூறப்படும் நுண்ணலைகள் ஆகும். இந்த கதிர்கள் மற்றும் அதன் இயக்கத்தை பற்றி சற்று விரிவாக இங்கே காண்போம்.

எலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம் :
எலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம் எனக் கூறப்படும் மின்காந்த நிற மாலை ரேடியோ அலைகள் மற்றும் மைக்ரோ அலைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும். இவற்றோடு இணைந்து வேறு பல உமிழ்வுகளும் இதனுடன் இருக்கும் . இந்த உமிழ்வுகளை ரேடியேஷன் எமிஷன் என்று குறிப்பிடுவர். இங்கே கூறப்படும் பல வகை உமிழ்வுகள் ஒவ்வொன்றும் சார்ஜ் செய்யப்பட்ட  ஃபோட்டான்களின் பாக்கெட் ஆகும். இவைகள் இணைந்து தான் பிரீகுவென்சி என்னும் அதிர்வெண்களாக  உருவாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் "ஹெர்ட்ஸ்" என்று அழைக்கப்படும் அலகுகளில் அளவிடப்படும். 

எலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம் என்பது பல்வேறு பிரீகுவென்சிகளை   கொண்டிருக்கும் பல்வேறு கதிர்வீச்சிகளைக் உள்ளடக்கி இருக்கும் . இந்த ஸ்பெக்ட்ரம் கூடுதலாக,அகச்சிவப்பு கதிர்வீச்சு, காட்சி ஒளி, புற ஊதா கதிர்கள், X- கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

அனலாக் அல்லது டிஜிட்டல் தகவலுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்களில் ரேடியோ அலைகள் மற்றும் நுண்ணலை இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ரேடியோ கதிர்கள்:
ஒரு வானொலி ஒலிபரப்பு என்பது மின்சாரம் மற்றும் காந்தப்புலங்களை ஒன்றுக்கொன்று செங்குத்தாக கொண்டிருக்கும் மின்காந்த கதிர்வீச்சு (Electro magnetic Radiation ) ஆகும். இங்கே மின்சாரம் மற்றும் காந்தப் புலங்கள்   ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் எனப்படும் ஃப்ரீகுவென்சி யில்  அலைகள்  போல் சுழலும்.இங்கே எனர்ஜி மின்சாரத்திற்கும், காந்தத்திற்கும் இடையே  முன்னும் பின்னும் நகரும். ரேடியோ சிக்னல் என்பது வட்ட வடிவத்தில் ஒரு புள்ளியில் இருந்தோ அல்லது  ஒரு அதிக குறுகலான  கோட்டிலிருந்தோ தொடங்கும். 

ரேடியோ அதிர்வெண் வரம்பு மிகவும் குறைந்த அதிர்வெண் பாண்ட் (Low Frequency Band), 3 ஹெர்ட்ஸ் இல் தொடங்கி மிக உயர்ந்த அதிர்வெண் பாண்ட் (High Frequency Band), 300 ஜிகாஹெர்ட்ஸ்  வரை நீட்டிக்கப்படுகிறது.

நுண்ணலைகள் எனப்படும் செல் போன்  கதிர்கள்:
செல்லுலார் தொலைபேசி நெட்வொர்க்குகள்  எலெக்ட்ரோ மேக்னெட்டிக்  ஸ்பெக்ட்ரத்தின்    யூ.எச்.ஃப் (UHF) என்று அழைக்கப்படும் அல்ட்ரா உயர் அதிர்வெண் (Ultra High Frequency) எனும் பாண்ட் (Band) ஐ பயன்படுத்துகின்றன. நுண்ணலை கதிர்வீச்சிற்கான அதிர்வெண் வீச்சு 300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 300 கிகாஹெர்ட்ஸ் இடையில் உள்ளது.

UHF அலைகள் ரேடார், நுண்ணலை அடுப்புகளில்(மைக்ரோ வேவ் ஓவென்)  மற்றும் வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மின்காந்த நிறமாலையில் நுண்ணலை அலைவரிசையைப் பொறுத்து, வேறுபட்ட பாண்ட்ஸாக பிரிக்கப்படுகிறது.

ரேடியோ அலைகள் மற்றும் செல் போன் அலைகளுக்கு வேறுபாடு:

ரேடியோ மற்றும் மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன்ஸ் அவைகளின் தோற்றத்தில்  வேறுபடுகின்றன. அதிக நுண்ணலை அலைவரிசைகளில் இயங்கும் செல் போன் அலைகளுடன் ஒப்பிடுகையில் ரேடியோ அலைகள் குறைந்த அதிர்வெண் மற்றும் நீண்ட அலைநீளம் கொண்டவை. ரேடியோ சிக்னல்களை விட அதிக நுண்ணிய தகவலை மைக்ரோவேவ் மூலம் எடுத்துச்செல்லலாம், மற்றும் குறுகிய பீம்கள் கொண்ட மைக்ரோவேவ் அலைகள் மூலம் ரேடியோ அலைகளைக் காட்டிலும் அதிக அளவிலான தகவல்களை பரிமாறலாம்.

செல்லுலார் தொலைபேசி சமிக்ஞைகள் இரண்டு பாண்ட் கள்(band) மூலம் பரிமாறப் படுகின்றன, 
1. 800 முதல் 900 மெகாஹெர்ட்ஸ் (MHz) வரை மற்றும் 
2. 1.8 கிகாஹெர்ட்ஸ் (GHz) முதல் 1.95 GHz வரை பரிமாற்றப்படுகின்றன. 

செல்போனின் இயக்கம்:
ஒரு செல்லுலார் ஃபோனில் இருந்து சிக்னல்களை  ஒரு அடிப்படை நிலையத்தினால் (base station) இடைமறித்து, பெறுநர்களுக்கு ஒரு திசை நோக்கிய மைக்ரோவேவ் கற்றைப் செலுத்தப்படுகிறது. 

செல்லுலார் தொலைபேசி சமிக்ஞைகளின் தரம் நெட்வர்கின் அப்போதைய அதிகப்படியான பளுவைப் பொறுத்து வேறு படுகிறது.