வெறியாட்டு

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

வெறியாட்டு என்பது சங்க கால வீட்டுவிழா. தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியிட்ம் வராமல் 'ஒருவழித் தணந்து' நிற்பதும், தலைவி தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், இந்த இளைப்புக்கான காரணத்தை அவளது தாய் வேலனையோ, குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டையோ கேட்டறிவதும், அவர்கள் முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு அயர முருகன் சினம் தணிந்து மகள் நலம் பெறுவாள் என்பதும், தாய் மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதும் வெறியாட்டு எனப்படும். இதனை முருகயர்தல் என்றும் கூறுவர்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like