வாசனை மெழுகுவர்த்திகள் பற்றிய உண்மை!

Health • By அம்பிகா சரவணன் • Posted on 03 Mar, 2018

 

முந்தைய காலங்களில் இருள் நீக்கி  ஒளி பெறுவதற்கு நமது முன்னோர்கள் மரங்களை உபயோகித்தனர். அந்த மரங்களை கொண்டு அதில் இருந்து குச்சிகளை பிரித்து எடுத்து கொள்வர். பின்பு அந்த குச்சிகளின் மேல் முனையில் காய்ந்த தென்னை நார் மற்றும் கயிர் போன்றவற்றை  கட்டி , அந்த முனையில் எண்ணெயை தடவி வைத்திருப்பர். பின் அந்த குச்சிகளில் தீ பற்ற வைத்து, தீ பந்தங்கள் உருவாக்கி இருள் சூழ்ந்த இடங்களில் ஒளி  ஏற்றுவர்.

விளக்கின் பயன்பாடு:

வீடு , கோவில் போன்ற இடங்களில் ஒளி ஏற்ற விளக்குகளை உபயோகித்தனர். இந்த விளக்குகள் முதலில் மண்ணால் உருவாக்கப் பட்டன. மண்ணால் உருவாக்கப் பட்ட விளக்குகளில் பஞ்சால் திரி செய்து அதில் வைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்து ஒளி கூட்டுவர்.

மெழுகு வர்த்தியின் வரவு:

மேற்கத்தைய தாக்கத்தில் விளக்கிற்கு மாற்றாக நமக்கு கிடைத்த  ஒரு ஒளி ஏற்றி, மெழுகுவர்த்தி. மெழுகுவர்த்தியை எளிதான உபயோகிக்கும் முறை அனைவரையும் அதனுடன் ஈர்த்தது. எண்ணெய் விளக்கில், விளக்கை எடுத்து, அதற்கு திரி வைத்து, எண்ணெய் ஊற்றி பிறகு நெருப்பு பற்ற வைக்க வேண்டும். மேலும் அதில் எண்ணெய் சிந்தும், நமது கைகளில் எண்ணெய் ஒட்டிக் கொள்ளும் என்பது போன்ற சில விஷயங்கள் அசௌகிரியங்களாய் பார்க்கப் பட்ட நிலையில், மெழுகு வர்த்திகளின் வரவு ஒரு சிறந்த மாற்றாக பார்க்கப் பட்டது. 

கால மாற்றத்தில், மெழுகுவர்த்திகள் இருளை விலக்க மட்டும் அல்ல, ஒரு அலங்கார பொருளாகவும் பயன்படுத்த பட்டது. பிறந்த நாளில் கேக் வெட்டும்போது மெழுகுவர்த்தியை அணைத்து கொண்டாடுவது தற்கால நடைமுறை ஆகிவிட்டது. பல பெரிய உணவகங்களில் கூட இரவில் ஒளிரும் மெழுகுவர்த்திகளை அலங்கார பொருளாக பயன்படுத்துகிறார்கள். கேண்டில் லைட் டின்னர் என்ற வார்த்தையை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.  

வாசனை மெழுகுவர்த்திகள்:

இப்படி தான் ​அழகான வாசனை தரும் மெழுகுவர்த்திகளும் சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. வாசனை தரும் மெழுகுவர்த்திகள் நமது உடல் நலத்திற்கு நல்லது அல்ல என அறிய படுகிறது. அவை ஒளிர்கையில் காற்றில் தூசி மற்றும் பூஞ்சைகளை கலந்து, அதனை நாம் சுவாசிப்பதன் மூலமாக நமது நுரைஈரல்களுக்குள் செல்லும் ஆபத்து இருக்கிறது. 

ஆராய்ச்சி:

சான் டீகோ மாநில பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வீட்டிற்குள் காற்று மாசுபடுதளுக்கு பங்களிக்கும் பல்வேறு காரணிகளை ஆராய முனைந்தனர். அவர்கள் முதலில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜோடி துகள் மானிட்டர்களை (Particle Monitors) நிறுவினர். முதலில் சிகரெட் புகை மற்றும் மரிஜுவானா புகைகளால் வீட்டில் உள்ள காற்றின் மாசை கணக்கிட்டனர். அதில் முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளாக சிகரெட் புகை மற்றும் மரிஜுவானா புகை வீட்டின் காற்று சூழலை முற்றிலும் மாசு படுத்துகின்றது என கண்டறிந்தனர். 

மேலும் தங்களின் ஆய்வை மற்ற செயற்கை வாசனை தரும் பொருட்களில் மேற்கொண்டனர். இது சற்றும் எதிர்பாராத முடிவுகளை கொடுத்தது, அது நவநாகரீக வாசனை  மெழுகுவர்த்திகள் மற்றும் துப்புரவு பொருட்கள் - காற்று கிளீனர்கள் (Air Cleaner) எனக் கூறப்படும் பொருட்கள், காற்றில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி, வீட்டில் இருப்பவருக்கு சுகாதார பிரச்சினைகளைத் கொடுக்கிறது என கூறுகின்றனர்.

அவர்கள் நிறுவிய துகள் மானிடர்களின் துணை கொண்டு நவ நாகரிக வாசனை மெழுகு வர்த்திகள், தொடர்ந்து 0.5 முதல் 2.5 மைக்ரோமீட்டர் அளவுக்கு நுண்துகள்களைப் பரப்புகின்றன என கண்டறிந்தனர். இவைகள்  தூசி, பூஞ்சை போன்றவற்றை   காற்றில் கலந்து விடுகின்றன . இந்த அளவு வரம்பு, மனித ஆரோக்கிய கேட்டிற்கு வழி வகுக்க கூடியது ஆகும். இந்த துகள்கள் நுரையீரல்களில் ஆழமாக அடையக்கூடிய அளவுக்கு இருக்கும். மேலும், அவை மூச்சு மற்றும் இருதய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல சிக்கல்களை உருவாக்கும் என்பது ஒரு அதிர்ச்சி தரும் உண்மை.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like