சோயா அவரை

Food • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அவரை இனத் தாவரம். ஆண்டுத் தாவரமான இது, சீனாவில் உணவாகவும், மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வருகின்றது. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது. சோயா பல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் சேர்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கான மாற்று உணவுப்பொருள்களும் இவற்றுள் அடங்கும். நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன. கிளைசீன் வைல்ட் (Glycine Willd) என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (G. max (L.) Merrill), காட்டுச் சோயா (G. soja Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. கிளைசீன் சோஜா சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் கிளைசீன் சோஜா குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like