உணவு சேர்க்கைகள் இல்லாமல் உணவை பாதுகாக்கும் முறைகள்

Food • By அம்பிகா சரவணன் • Posted on 12 Feb, 2018

இப்போதைய நாகரீக உலகில், எல்லா விதமான உணவுகளும், பதப்படுத்தப்பட்ட முறையில் பேக் செய்து கிடைக்கிறது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் அதிகமான இக்காலத்தில் எல்லா நாட்டு  உணவுகளையும்  வாங்கி உட்கொள்ள முடிகிறது. ஒரு பொருள் உற்பத்தியாகி சந்தைக்கு வர , வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகின்றன. அந்த பொருளின் ஆயுட் கால அளவை அறிந்து நாம் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம்.ஒரு பதப்படுத்தப்பட்ட உணவில் எந்த ஒரு பதனப்பொருளும் சேர்க்காமல் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த பொருளின் ஆயுள்  இருக்காது. இந்த பதனப்பொருள் இரசாயனத்தால் உருவாவது. இது உடலுக்கு கெடுதலும் ஆகும். இதனால் தான் நாம் பதப்படுத்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நமது சமையல் அறையில் சில பொருட்கள் இந்த பதனப்பொருளாக பயன்படும். இவற்றை அறிந்து நமது வீட்டு சமையலில் பயன்படுத்துவதால், இயற்கை முறையில் சில உணவுகளின் ஆயுளை அதிகரிக்கலாம். கூடுதல் நேரம் அந்த உணவின் சுவையை நாம் ருசிக்கலாம்.

பூண்டு:

பூண்டு ஒரு கிருமி எதிர்ப்பியாக இருப்பதால் உணவிலும் உடலிலும் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். ஒரு பூண்டு பல்லை எடுத்து பொடியாக நறுக்கி உங்கள் சூப் அல்லது டிப் அல்லது வேறு உணவில் சேர்க்கும்போது உணவில் பாக்டீரியாக்கள் சேராமல் பாதுகாக்கின்றது.உணவும் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக  இருக்கும்.

ஹிமாலயன் உப்பு அல்லது பிங்க் கடல் உப்பு  :

நீண்ட காலமாக உப்பு ஒரு பதனப்பொருளாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஹிமாலயன் உப்பு மிக சிறந்தது. உங்கள் உணவில் ஒரு சிட்டிகை ஹிமாலயன் உப்பு சேர்ப்பதால் உணவை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்கலாம் .காய்கறி கலவை, சூப், டிப் என எல்லாவற்றிலும் இதனை பயன்படுத்தலாம்.

மசாலா பொருட்கள்:

மிளகாய் , கடுகு, ஹாட் சாஸ்  போன்றவை இயற்கை பதனப்பொருளாக இருக்கிறது. கடுகு மற்றும் ஹாட் சாஸில் சில சதவிகிதம் வினிகர் உள்ளது. மசாலா பொருட்கள் இயற்கையாகவே பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உடையது. ஆகையால் இதை உணவில் சேர்க்கும்போது பல மணி நேரங்கள் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்கிறது. இனிப்புகளில் 1 சிட்டிகை மிளகாய் சேர்க்கும்போது , அதன் மிதமான காரத்தன்மை நீண்ட நேரம் அந்த உணவை பாதுகாக்கிறது.

எலுமிச்சை:

சிட்ரிக் அமிலத்தின் ஒரு இயற்கை ஆதாரம் எலுமிச்சை ஆகும். இது ஒரு சிறந்த பதன பொருளும் கூட. அதன் தோலும் சதையும் உணவை பாதுகாக்க சிறந்ததாகும். குளிர்ந்த உணவுகளில், இந்த சாறை பிழிவதால் அதன் தன்மை பாதுகாக்கப்படுகிறது. உணவை சமைத்தவுடன் சில துளி எலுமிச்சை சாறை அதில் சேர்க்கும்போது அதன் மணமும் சுவையும் உணவின் ருசியை அதிகரிக்கும்.மற்றும் உணவும் கெடாமல் பார்த்துக்கொள்ளும்.

வினிகர்:

சர்க்கரை மற்றும் தண்ணீரை புளிக்க வைப்பதால் வினிகர் கிடைக்கிறது. இது ஒரு சிறந்த இயற்கை பதனப்பொருள். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் நுண்கிருமிகளை எதிர்த்து போராடி , உணவை கெடாமல் பாதுகாக்கிறது. வினிகரை உணவில் சேர்ப்பதன்மூலம் உணவு பாதுகாக்கப்படுவது மட்டும் அல்ல, உணவின் சுவையும் கூடுகிறது.

சர்க்கரை:

சர்க்கரை ஒரு இயற்கை பதனப்பொருள். இது உணவில் இருந்து தண்ணீரையும் நுண்கிருமிகளையும் வெளியேற்றுகிறது. உணவில் நீர் அதிகமாக இருக்கும்போது அவற்றில் நுண் கிருமிகள் வளர தொடங்குகின்றன.  சர்க்கரை உணவில் உள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இதனால் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உணவும் நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேற்கூறிய வீட்டு பொருட்களை பயன்படுத்தி , உணவுகளை பதப்படுத்துவோம்.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like