ஏரணம்

Politics • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

ஏரணம் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் (Logic) என்பது அறிவடிப்படையில் ஒன்று உண்மை, அது ஏற்கக்கூடியது (= ஏலும்) என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய அறிவுத்துறை. ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (= இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது, பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட துறையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர். மேற்குலக மெய்யியலில் லாச்யிக் (ஏரணம்) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகிய லோகோசு (λόγος, logos) என்பதில் இருந்து பெற்றது.இதன் பொருள் “சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கை” "என்பதாகும். இந்தியா,சீனா,பேர்சியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாகரிகங்களில் ஏரணமானது ஆராயப்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் ஏரணமானது அரிஸ்டோட்டிலால் முறையான கட்டுப்பாடாக நிறுவப்பட்டது. மெய்யியலில் ஏரணத்திற்கு அடிப்படை இடம் கொடுத்தவர் அரிஸ்டோட்டில் ஆவார். பின்னர் அல் ஃபராபி என்பவர் ஏரணத்தை மேலும் விரிவாக்கி அதை யோசனைகள் மற்றும் ஆதாரங்கள் என இரு வகையாகப் பிரித்தார். கிழக்கு நாடுகளில் பௌத்தர்களாலும் சமணர்களாலும் ஏரணம் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like