இலைவகை

Food • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

^^முருங்கை#^^ முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். ^^பொன்னாங்காணி#^^ பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரலிப்பான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது. ^^முளைக்கீரை#^^ முளைக்கீரை (Amaranthus blitum) என்பது அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. ^^அகத்தி#^^ அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. ^^குறிஞ்சா#^^ குறிஞ்சா என்பது கொடி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது பிற தாவரத்தைச் சுற்றி அதன் மீது படரும் தன்மை உடையது. குறிஞ்சா இருவகைப்படும். சிறு குறிஞ்சா, பெரு குறிஞ்சா.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like