பலாப்பழ கொட்டைகளை 3 விதங்களில் சமைக்கலாம்.
வேக வைப்பது :
ஒரு பெரிய கிண்ணத்தில் பலாப்பழ கொட்டைகளைப் போட்டு நீர் விடவும். கொட்டைகளுக்கு மேலே நீர் இருப்பதாகப் பார்த்துக் கொள்ளவும் .
கொட்டை சேர்க்கப்பட்ட நீரை நன்றாக கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடங்கள் வேக விடவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி, கொட்டையை ஆற விடவும்.
மேலே உள்ள வெள்ளை நிற தோலை உரித்து, பின் உள்ள உள்ள பழுப்பு நிறக் கொட்டையை உண்ணலாம்.
ஓவனில் வறுப்பது :
400o F க்கு ஓவனை சூடாக்கவும். பின் கோட்டைகளை பேக்கிங் அட்டையில் பரப்பி வைக்கவும்.
20 நிமிடங்கள் பேக் செய்தது பின் ஆற வைக்கவும்.
ஆறியபின், தோல் உரித்து, சாப்பிடவும்.
ப்ரையிங் பேனில் வறுப்பது :
ப்ரையிங் பேனை அடுப்பில் வைத்துக் கொள்ளவும்.
அதில் பலாப்பழ கொட்டைகளைப் பரப்பி வைத்து சூடாக்கவும்.
அடிக்கடி பேனை நன்றாக குலுக்கி விடவும்.
சில நிமிடங்களில் கொட்டைகள் உடையத் தொடங்கும்.
ஆறியவுடன் தோல் உரித்து சாப்பிடவும்.
மற்றொரு சுவையான முறையில் பலாப்பழ கொட்டைகளை நாம் உட்கொள்ளலாம். அதனை இப்போது பார்க்கலாம்.
ரோஸ்டட் கார்லிக் ஜாக்ப்ருட் சீட் ஹும்முஸ் ரெசிபி :
இதற்கு தேவையான பொருட்கள்
2 கப் பலாப்பழ கொட்டை
வேக வைப்பதற்கு ஏற்ப தண்ணீர்
4 பல் பூண்டு
6 டேபிள் ஸ்பூன் லோ - சோடியம் ப்ரோத்
2 டேபிள் ஸ்பூன் நான் - டைரி பால்
அரை எலுமிச்சை பழச் சாறு
2 டேபிள் ஸ்பூன் தாகினி (வெள்ளை எள் )
சிறிதளவு செலெரி பவுடர், மிளகு தூள் சுவைக்கு
சிறிதளவு பப்ரிகா
செய்முறை:
பலாப்பழ கொட்டையை தண்ணீர் முழுகும் படி வைத்து நன்றாக கொதிக்க விடவும், கொதித்த பின், சிம்மில் வைத்து வேக விடவும்.
கொட்டைகள் ஒரு புறம் வேகட்டும், மறுபுறம் , பூண்டை பேக்கிங் அட்டையில் வைத்து 40 நிமிடங்கள் பேக் செய்யவும். பாதியளவிற்கு டாஸ் செய்யவும்.
கொட்டைகள் முழுமையாக வெந்தவுடன், அவற்றை வடிகட்டி தனியே எடுத்துக் கொண்டு காய வைக்கவும்.
ஆறியவுடன் கொட்டையில் உள்ள தோலை உரித்துக் கொள்ளவும்.
ஹும்முஸ் செய்வதற்காக, மற்ற பொருட்களுடன் சேர்த்து, பலாப்பழ கொட்டையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மென்மையாக வரும்வரை அரைக்கவும்.
பப்ரிகா சேர்த்து கார்னிஷ் செய்யவும்.
பலாப்பழ கொட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொண்ட பின், நாம அன்றாட சமையலில் , வெஜிடபிள் குருமா அல்லது உருளைகிழங்கு வறுவல் போன்றவற்றில் கூட இதனைச் சேர்த்து உண்ணலாம். பலாக்கொட்டையை தனியாகவும் மசாலாப்பொடி சேர்த்து வறுவல் போல் செய்து சாப்பிடலாம்.
பலாப்பழ கொட்டைகளை சரியான முறையில் வேக விடவும். வேகாமல் பச்சையாக இவற்றை உட்கொள்வது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.