பிளாஸ்டிக் பையினால் ஏற்படும் தீங்குகள்

Health • By அம்பிகா சரவணன் • Posted on 18 Jan, 2018

சுற்றுசூழல் பாதிக்கிறது:

 

பிளாஸ்டிக் பையின்  பயன்பாடு சுற்று சூழலை அதிகமாக பாதிக்கிறது. ஒரு சிறிய பிளாஸ்டிக் பை மக்கி மண்ணில்  மறைவதற்கு 1000 ஆண்டுகள் ஆகிறது. இந்த  பைகள் சுற்றுச்சூழல்களில் நீண்ட காலம் தங்கியிருக்கின்றன, இதனால் இயற்கை நிலப்பரப்பு மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது (காகிதம் போன்ற பொருட்களை  விட அதிக காலம் அழியாமல் இருக்கிறது.). இன்னும் தெளிவாக கூறுவதானால்,  எந்த அளவுக்கு பாலிஸ்டிக் பைகள் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு சுற்று சூழலின் சேதமும் இருக்கும்.

விலங்கினத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது:

ஆஸ்திரேலியாவின் மரிரிக்வில் கவுன்சில் படி, ஒவ்வொரு வருடமும் 100,000 திமிங்கலங்கள், ஆமைகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன, அவைகளின் இறப்பிற்கு முக்கியமான காரணம், அவைகள் வாழும் சூழலில் பிளாஸ்டிக் இருப்பது தான். பிளாஸ்டிக் பைகள் நம் இயற்கையான வாழ்விடங்களில் மோசமான விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தவில்லை. ஆனால் பல விலங்குகளின் மரணத்திற்கு காரணம் இவைகள் தான். இதனை உயிரினங்கள் தெரியாமல் உண்பதன் மூலம் அவைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

 

மூச்சு திணறல்:

விலங்குகள் மட்டுமல்ல, சிறுவர்களும் குழந்தைகளும் கூட இந்த பிளாஸ்டிக் பையினால் உயிரிழக்கின்றனர். இந்த பைகள் பல வண்ண நிறத்தில், மெலிதாக இருப்பதால்  சிறுவர்கள் விளையாட்டுகளில்  இதனை பயன்படுத்துகின்றனர் . வீட்டில் பெரியவர்கள் கண்காணிப்பில் இல்லாதபோது, வாயில் அல்லது மூக்கில் கட்டி விளையாடும்போது காற்று   புகுவதற்கு வாய்ப்பில்லாமல் மூச்சு திணறல் ஏற்படுகிறது .

 

மாசு:

பிளாஸ்டிக் பைகள் நீடித்த ஆயுளை கொண்டது. புறநகர் பகுதிகளில் நாம் பயணிக்கும் போது பெரிய பெரிய நிலப்பரப்புகளில் குப்பைகள் கொட்டி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றுள் அதிகபட்சமாக பாலிஸ்டிக் பைகள் இருப்பதை நாம் பார்க்கலாம். இவைகள் எளிதில் மக்கி போகாமல்  நிலப்பரப்பில் மாசு ஏற்படுத்துகின்றன.

புகை:

பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கும் தன்மை இல்லாததால் அவற்றை அழிக்க நாம் அதனை எரிக்கிறோம் . இப்படி இவற்றை எரிப்பது, அதற்கு முந்தய நிலையை விட ஆபத்தானது. ஏனெனில் பாலிஸ்டிக் பைகளை எரிக்கும்போது உண்டாகும் புகை நச்சுத்தன்மை வாய்ந்தது இதன் மூலம் காற்று மாசுபடும் வாய்ப்புகள் அதிகம். .

 

புதுப்பிக்க முடியாதவை:

பெட்ரோல் பொருட்களை பொதுவாக புதுப்பிக்க  செய்வது சாத்தியமில்லாதது. பிளாஸ்டிக் பைகள் பெட்ரோலிய வேதி பொருட்களால் செய்யப்பட்டவை. ஆகையால் இவற்றை  புதுப்பிக்க முடியாது.  இவற்றை  மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம். ஆனால் காகிதங்கள் போல் எளிதாக செய்ய முடியாது.

ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு  உலகம் முழுவதிலும் 500 பில்லியன் முதன் 1 டிரில்லியன் வரை அதிகரித்திருப்பதாக  சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கையை குறைக்க நம்மால்  ஆன செயல் நம் வீட்டில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது மட்டுமே.  நாம் வாழ்ந்து முடித்த பிறகும் நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் இந்த பூமியில் இருந்து நமது சந்ததியை பாதிக்கும் என்பது நிச்சயமாக நல்ல செய்தி இல்லை!

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like