சரியான பல்புகளை தேர்ந்தெடுப்பீர் !

Health • By அம்பிகா சரவணன் • Posted on 27 Feb, 2018

கண்கள் கூசும் வெளிச்சத்தில் பணி புரிவது இன்றைய தலைமுறையில் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு  சாதாரண சூழல் தான். காலை எது மாலை எது என்று தெரியாத வண்ணம் ஒளி கடலில் மூழ்கி, நேரம் போவது தெரியாமல் நாம் உழைத்து கொண்டிருக்கவே அலுவலகங்களில் லைட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லைட்களில் இருந்து வெளிப்படும் ஒளி நம் கண்களின் நலனை சற்று பாதிக்கவே செய்கிறது. கண்களின் நலத்திற்கு சரியான பல்புகளைத் தேர்ந்தெடுப்பது பற்றி இந்த கட்டுரையில் பாப்போம்.

பெருவாரியான வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் ஒளி விளக்குகள் நமது கண்களை பாதிக்கலாம். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு வாரத்திற்கு 45 மணிநேரத்திற்கும் மேலாக "குளிர்" அல்லது "பிரகாசமான வெள்ளை ஃப்ளூரொசென்ட்" பல்புகள் அதிகப்படியான கண்புரை (Cataracts) மற்றும் பைரிஜீயா (Pterygia)/சர்ஃபர்ஸ் ஐ (Surfer's Eye) போன்ற பல கண்கள் சார்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதாக கண்டறிந்துள்ளது.

இந்த "குளிர்" அல்லது "பிரகாசமான வெள்ளை ஃப்ளூரொசென்ட்" பல்புகளின் மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்புக்கு  முக்கிய காரணமாக அமைவது அவை ஒரு கணிசமான அளவில் வெளியிடும்  Ultra Violet (UV) எனப்படும் புற ஊதா கதிர்கள். காலப்போக்கில் அவற்றின் வெளிப்பாடு அதிக அளவில் இருப்பதால், அவை சில காலங்களுக்கு பிறகு  நமக்கே தெரியாமல் நமது கண்களுக்கு பிரச்சனை உண்டாக்க ஆரம்பித்து விடுகின்றன. வெளியே உபயோகிக்கும் விளக்குகளை வேறு ஒருவர் தேர்வு செய்து நிர்வகிப்பதாலும், நம்மால் அவற்றை கையாள முடியாது என்பதாலும், நாம் குறைந்த பட்சம் நமது வீடுகளில் விளக்குகளை சரியான முறையில் தேர்வு செய்து பயன்படுத்தி நமது கண்களை பாதுகாத்து பயன் பெற முயல்வோம். நாம் சரியான மின் விளக்குகளை தேர்ந்தெடுக்க , நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரு சில குறிப்புகள் இங்கே.

வாங்கக் கூடாத பல்புகள்: 

உயர் திறன் கொண்ட "குளிர்" மற்றும் "பிரகாசமான வெள்ளை" நிறங்களில் ஒளிரும் விளக்குகளை வாங்குவதை தவிர்க்கவும். இவை சற்று நீல நிற சாயலை வெளியிடுபவை ஆகும்.
பொதுவாக இந்த பல்புகள் சந்தையில் எளிதாக கிடைப்பதற்கு மிக முக்கியமான  காரணம், அவற்றின் விலை, ஏனென்றால் அவை மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

நமது கண்களுக்கு ஏற்ற சிறந்த லைட் பல்புகள்:

நமது கண்களின் நலத்திற்கு ஏற்ற வகையில் பல ஒளி விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. உதாரணமாகே, பாரம்பரிய ஒளிரும் பல்புகள், LED விளக்குகள், மற்றும் ஹாலோஜென் (Halogen) பல்புகள். சூடான வெள்ளை நிறத்தில் ஒளிரும் சி.எஃப்.எல் கள் (CFL) கூட ஒரு நல்ல மாற்றாக இருக்க உதவும், ஆனால் அவையும் ஒரு சிறிய அளவு Ultra Violet (UV) எனப்படும் புற ஊதா கதிர்களை வெளியிடுகின்றன. ஆனால் அவற்றின் அளவு நிச்சயமாக  "குளிர்" அல்லது "பிரகாசமான வெள்ளை ஃப்ளூரொசென்ட்" பல்புகளின் கதிர் அளவை விட மிக குறைவாகவே இருக்கும்.

மற்ற முறையில் நாம் ஒளிபெற்று நமது கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்:

பொதுவாக, நாம் முடிந்த வரை இயற்கை வெளிச்சத்தையே பயன்படுத்துதல் நலம். சன்னல்கள் அருகே நமது மேஜையை நிலைநிறுத்தி வைத்து விட்டு நாள் முழுவதும் நமது வீட்டு சன்னல்களை திறந்தால் நமக்கு தேவையான வெளிச்சம், பகல் பொழுதில் எளிதாக கிடைக்கும். இப்படி வருகிற ஒளி நமது கண்களுக்கு சிறந்தது, மேலும் இயற்கை சூரிய ஒளி மேலும் நமது மனநிலையை மேம்படுத்த உதவும்  என்பதில் சந்தேகம் இல்லை. சூரிய கதிரில் இருந்து வரும் Ultra Violet (UV) எனப்படும் புற ஊதா கதிர்கள் பெரும்பாலான கட்டிடங்களிள் நுழையாத வண்ணம் கண்ணாடிகள் நிறுவப்பட்டிருப்பதால், நாம் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும்  UV கதிர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.


சன் கிளாசஸ் (Sun Glasses) உபயோகித்தாலும், நமது கண்களுக்கு சிறந்தது. நாம் வெளியில் செல்கையில் இத்தகைய கண்ணாடிகள் மிக அவசியம். அவை நமது கண்களை எதிர்பாராமல் தாக்கும் Ultra Violet (UV) எனப்படும் புற ஊதா கதிர்களிடமிருந்து நம்மை காப்பாற்றுகின்றன.
 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like