பருப்பு

Food • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

பருப்பு என்பது உணவாகப் பயன்படும் ஒரு தாவரப் பகுதி ஆகும். பருப்புவகைத் தாவரங்கள் ஓராண்டு அவரை வகைத் தாவரங்களாகும். அதிகளவு புரதத்தையும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால் பருப்பு ஒரு முக்கிய உணவாகும். விலங்கு உணவாகவும் பயன்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியும் அதிக இறக்குமதியும் இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. பருப்புவகைத் தாவரங்களில் இருந்து பொதுவாக அவற்றின் உலர்விதைகளே (dry seeds) உணவாகப் பயன்படுத்தப்படும். சோயா அவரை, நிலக்கடலை போன்ற அவரைத் தாவரங்கள் எண்ணெய் உற்பத்தியில் பயன்படுவதனால், அவை பருப்புவகையாக கொள்ளப்படுவதில்லை. அதேபோல், Clover. Alfalfa போன்ற அவரைத்தாவரங்களின் இலைகள் நார்த்தீவனமாக, விலங்கு உணவாக பயன்படுத்தப்படுவதனால், அவையும் பருப்புவகையாகக் கொள்ளப்படுவதில்லை. மேலும் சில உலர் விதைகள் உணவாகப் பயன்படும் அவரைத் தாவரங்களின் நெற்றுக்காய்கள் (pods), உலர முன்பே மரக்கறியாகவும் சமையலில் பயன்படுத்தப்படும்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like