கரு மிளகின் நன்மைகள் மற்றும் பயன்கள்

Health • By அம்பிகா சரவணன் • Posted on 12 Feb, 2018

“மசாலாக்களின்  ராஜா” என்று அழைக்கப்படுவது அளவில் மிக சிறியதாக காணப்படும் ஒரு உணவு பொருள். அது மிளகு ஆகும். உலகத்தில் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருள் மிளகு. சமையலில் இதனை சேர்த்தவுடன் ஒரு தனி சுவையை அந்த உணவு அடைவது நிதர்சனம். இந்த மிளகாய் நாம் நம் உணவுகளில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மையை இந்த தொகுப்பு விளக்கும்.

இது கருப்பு, பச்சை, சிவப்பு அன்று பல நிறங்களில் இருக்கும். காரத்தன்மை வாய்ந்தது. சிறிதளவு கசப்பு அதனுடன் சேர்ந்து இருக்கும்.  பல இயற்கை  மருந்துகளில் இதனை  பயன்படுத்துவர்.

செரிமானத்தை அதிகரிக்கிறது:

மிளகு செரிமான உணர்வை தூண்டும் ஒரு மிக சிறந்த உணவு பொருள். வயிற்றில் ஹைட்ரொ க்ளோரிக் அமிலம் சுரக்க உதவுகிறது. இதன்மூலம் புரதம் மற்றும் மற்ற சத்துகள் உடலில் செரிக்க வழி வகுக்கும்.செரிமான அமிலங்கள் சுரக்கும் போது அது நல்ல பசியை தூண்டுகிறது. அந்த நேரம் உணவு உட் கொள்ளும்போது உணவு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் ஜீரணமாகிறது. குடலை சுத்திகரிக்கவும் மிளகு உதவுகிறது.

உடலுக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது:

கரு மிளகை  உணவில் சேர்ப்பதால், உணவிற்கு கூடுதல் ருசி கிடைக்கிறது. அதன் வழியாக நல்ல ஊட்டச்சத்துகளும் உடலுக்கு கிடைக்கிறது . பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த கலவையுடன் 1சிட்டிகை  மிளகு தூளை சேர்ப்பதால், இதன் நன்மை 1000 மடங்கு அதிகரிக்கிறது.

வாயுக்களை தடுக்கிறது:

செரிமானத்திற்கு உதவும் அமிலங்கள் சரியாக சுரக்காத போது, நாம் உண்ணும் உணவு, வயிற்றில் செரிக்காமல் இருக்கும். நீண்ட நேரம் இப்படி இருக்கும் போது  நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான கோளாறு ஏற்படும். ஜீரணமாகாத உணவுகள் குடலுக்குள் போகும்போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் உணவாக மாறுகிறது. இதன் மூலம், வயிற்று போக்கு, வயிற்று எரிச்சல் , மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த கரு மிளகு ஒரு  இயற்கை இரைப்பைக் குடல் வலி நீக்கியாக செயல்படுகிறது. இதன் மூலம் குடலில் உண்டாகும்  வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது.

நச்சுத்தன்மையை நீக்குகிறது:

கரு மிளகை தொடர்ந்து உணவில் சேர்ப்பது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றுகிறது. வியர்வையின் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் அதிகமான நீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. கரு மிளகு கல்லீரலை சுத்தம் செய்து அதன் செயலாற்றலை மேம்படுத்துகிறது. கரு மிளகு சிறுநீர் வெளியாக்கத்தை அதிகரிக்கிறது. அதனால் யூரிக் அமிலம் மற்றும் அளவுக்கதிகமான நீர் மற்றும் கொழுப்பு, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. நம் உடலின் சிறு நீர் வெளியேற்றத்தில் 4% கொழுப்பினால் ஆனதாகும்.     

ஒட்டுண்ணிகளை கொல்கிறது :

கரு மிளகு உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஆகையால் வயிற்றில் தோன்றும் ஒட்டுண்ணிகளை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. மலேரியாவை தோற்றுவிக்கும் ஒட்டுண்ணிகள் கரு மிளகின் மூலம் அழிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சளி மற்றும் இருமலை நீக்குகிறது:

மிளகு இயற்கையிலேயே பாக்டீரியாக்களை எதிர்க்கிறது. ஆகையால் பாக்டீரியாக்களால் நமக்கு ஏற்பாடு சளி மற்றும் இருமலை போக்க மிளகு பெரிதும் உதவுகிறது.1 தேக்கரண்டி தேனுடன் பொடித்து வைக்கப்பட்ட மிளகை  சேர்த்து உண்பதன் மூலம் இருமலை விரட்டலாம். நெஞ்சில் சளி சேர்ந்திருந்தாலும் அதற்கு இந்த மிளகு தேன் சிகிச்சை நல்ல தீர்வாகும். மிளகில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இது ஒரு நல்ல ஆன்டி பையோட்டிக் ஆகும்.

தோல் சுருக்கங்களை சரி செய்கிறது:

மிளகை நமது தினசரி உணவில் சிறிதளவு சேர்ப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் தோலுக்கு அதிக அளவு ஆக்சிஜென் கிடைக்கிறது. அதனால் தோலில்  சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

மனசோர்வை குறைக்கிறது:

மிளகு மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. உச்சகட்ட மனச்சோர்வு இருக்கும் போது நாம் சிறிதளவு மிளகை உட்கொள்ளும்போது நமது மூளை செயலாற்றல் பெற்று புத்துணர்ச்சி அடைகிறது. இதனால் மனச்சோர்வு நீங்குகிறது.

மிளகு தூள் :

கரு மிளகை  தேவைக்கேற்ப புதிதாக  அரைத்து தூள் வடிவத்தில் உணவுகளில் சேர்க்கும் போது  பலவித நன்மைகளை உடலுக்கு தருகிறது.

மிளகில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் தான் நமது பாரம்பரிய உணவுகளில் இதனை முதன்மை படுத்தி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். நமது காலை உணவாகிய பொங்கல் மற்றும் மதிய  உணவாகிய ரசம் மற்றும் இரவில் உறங்கச் செல்லுமுன் பாலில்மிளகு என்று மூன்று வேளையும் மிளகை சேர்த்து  ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள். அவர்களின் வழியில் நாமும் மிளகின் பயன்களை உணர்ந்து நம் உணவுகளில் மிளகை  சேர்த்து ஆரோக்கியமாய் வாழ்வோம்!

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like