மிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக்

Beauty • By அம்பிகா சரவணன் • Posted on 13 Jul, 2018

உருளைக் கிழங்கை எல்லோருக்கும் பிடிக்கும். சிப்ஸ், வறுவல், மசாலா  என்று எல்லா விதத்திலும் சுவை மிகுந்த ஒரு உணவாக  இருப்பது உருளைக் கிழங்கு. எளிதிலும் விரைவாகவும் சமைக்கக்கூடிய ஒரு சௌகரியம் இந்த உருளைக்கிழங்கில் உண்டு. இதில் வைட்டமின் சி, பி 1 , பி 3 , பி 6, மற்றும் மினரல்கள் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது. ஆகவே இந்த உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை புரியும் ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் தெளிவான பளபளக்கும் சருமம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

உருளைக்கிழங்கு மாஸ்க் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், உருளைக்கிழங்கு பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உருளைக்கிழங்கின் பல்வேறு நன்மைகள்:

முகத்தில் அசிங்கமாக இருக்கும் புள்ளிகள், அடையாளங்கள் மற்றும் கொப்பளங்களைப் போக்க உதவுகிறது.
காயங்கள், கிருமிகள் மற்றும் புண்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
கண் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
வயது முதிர்ச்சியின் அறிகுறியைக் குறைக்கிறது.
உங்கள் சருமத்தை மாசுபடுத்தும்  சூரியன் வெளிப்பாட்டினால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழலுக்கான சேதத்தை பாதுகாக்கும் அன்டி ஆக்சிடென்ட் இவற்றில் உள்ளன.

மேலே கூறிய இத்தனை நன்மைகளினால், உருளைக்கிழங்கு அழகு குறிப்பில் நீங்க இடம் பெரும் ஒரு பொருளாக உள்ளது.

மேலும், உங்கள் தினசரி அழகு சிகிச்சையில் பயன்படுத்தும் வகையில் எளிமையான ஒரு பொருளாக இது இருக்கின்றது. எந்த ஒரு விலை அதிகமான பேன்சி மூலப் பொருட்களும் இதனுடன் பயன்படுத்த தேவை இல்லை. நேரமும் அதிகம் செலவாகாது. உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யும் அழகு குறிப்புகளைப் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எல்லா வித சரும பிரச்சனைகளுக்கு ஏற்ற, வீட்டிலேயே தயார் செய்யக் கூடிய , உருளைக்கிழங்கு பேஸ் பேக் இதோ உங்களுக்காக..

1. சரும வெண்மைக்கு உருளைக்கிழங்கு பேஸ் பேக் :

தேவையான பொருட்கள் :
3 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு
2 ஸ்பூன் தேன் 

தயாரிப்பு நேரம் :
5 நிமிடங்கள்

சிகிச்சை நேரம்:
10-15 நிமிடங்கள்

செய்முறை:
உருளைச் சாறுடன் தேனை கலந்து கொள்ளவும்.
இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும்.
10-15 நிமிடங்கள் காய விடவும். முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவுங்கள்.
இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எப்படி வேலை செய்கிறது :
தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இதனால் சருமம் மென்மையாகிறது. உருளைக்கிழகு சாறு அமிலத்தன்மை வாய்ந்தது. இது இயற்கை ப்ளீச் போல் செயல்படுகிறது. இதனால் சருமம் பொலிவாக பளிச்சென்று ஆகிறது.

2. பளபளக்கும் சருமத்திற்கு உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பேஸ் மாஸ்க்:

 
தேவையான பொருட்கள் :

2 ஸ்பூன் உருளைச் சாறு
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 ஸ்பூன் தேன் (தேவைப்பட்டால்)

தயாரிக்கும் நேரம்:
5 நிமிடம்

சிகிச்சை நேரம்:
15 நிமிடம்

செய்முறை :
உருளை மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.
15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.
இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது :
எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை, முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது.

கவனிக்க வேண்டியது :
எலுமிச்சை சாற்றை நேரடியாக அப்படியே தடவும்போது  எரிச்சல் ஏற்பட்டால், சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தவும்.  

3.கட்டிகளுக்கு உருளை மற்றும் தக்காளி பேஸ் மாஸ்க் :

தேவையான பொருட்கள் :
1 ஸ்பூன் உருளை விழுது அல்லது சாறு
1 ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு 
1 ஸ்பூன் தேன் 

தயாரிப்பு நேரம் :
5-10 நிமிடங்கள்

சிகிச்சை நேரம் :
15-20 நிமிடங்கள்

செய்முறை:
உருளை மற்றும் தக்காளி சாறுகளை ஒன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கவும்.
இதனை உங்கள் முகம் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் தடவவும்.
கட்டி மறையும் வரை தினமும் செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது :
தாக்காளியும் உருளைக்கிழங்கும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்தவை . இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கூறுகள், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை அடைப்பட்ட துளைகளை திறந்து விடுகின்றன.

கவனிக்க வேண்டியது :
தக்காளி சாறு அமிலத்தன்மை அதிகம் கொண்டது. இதனால் சருமம் வறண்டு போகலாம். ஆகவே இதனுடன் கூடுதலாக தேன் சேர்த்துக் கொள்வதால் சருமம் நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. .
 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like